பெர்னார்டு இலியோத்
பெர்னார்டு இலியோத் | |
---|---|
பிறப்பு | 1897|02|27 பாரிசு, பிரான்சு |
இறப்பு | 1952|04|02|1897|02|27 கெய்ரோ, எகிப்து |
குடியுரிமை | பிரான்சு |
தேசியம் | பிரெஞ்சுக்காரர் |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | பாரிசு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | சூரிய வானியல் |
விருதுகள் | அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் |
பெர்னார்டு பெர்டினாண்டு இலியோத் (Bernard Ferdinand Lyot) (27 பிப்ரவரி 1897, பாரிசு - 2 ஏப்பிரல் 1952, கெய்ரோ) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார்.
வாழ்க்கை
[தொகு]இவரது வானியல் ஆர்வம் 1914 இல் தொடங்கியது. விரைவிலேயே ஒரு நான்கு அங்குலத் தொலைநோக்கியை வாங்கி அதை ஆரு அங்குலத் தொலைநோக்கி ஆக்கினார். இவர் 1918 இல் பட்டம் பெற்றது முதல் 1929 வரை ஏக்கோல் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் செய்முறை விளக்குநராக பணிபுரிந்தார். இவர் அப்போது பாரிசு பல்கலைக்கழகத்தில் பொறியியல், இயற்பியல், வேதியியல் ஆகிய புலங்களில் கல்வியும் கற்றார் .
இவர் 1920 முதல் தன் இறப்பு வரை மியூடன் வான்காணகத்தில் பனிபுரிந்தார். அங்கு 1930 இல் வான்காணக இணைவானியலார் ஆனார். பின்னர் இவர் முனைவாக்க, ஒற்றைநிற ஒளியில் வல்லுனராகப் பெயர்பெற்றார். 1930 கள் முழுவதும் இவர் சூரிய ஒளிமுகட்டளவியைச் செம்மைப்படுத்துவதில் தன் கடும் உழைப்பைச் செலுத்தினார். இது ஒளிமரைப்புக்காக காத்திராமல் சூரிய ஒளிமுகட்டை நோக்க உதவும் கருவி ஆகும். இவர் 1938 இல் சூரிய ஒளிமுகட்டின் இயக்கத்தை நிகழ்படம் வழியாக பன்னாட்டு வானியல் ஒன்றியத்தில் காட்டினார். இவர் 1939 இல் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1943இல் மியூடன் வான்காணக முதன்மை வானியலார் ஆனார். மேலும் 1947 இல் புரூசு பதக்கத்தையும் பெற்றார்.
இவர் 1945 முதல் 1947 வரை பிரெஞ்சு வானியல் கழகத்தின் தலைவராக விளங்கினார்.[1]
சூடான் ஒளிமறைப்புத் தேட்டத்தில் இருந்து திரும்பும்போது மாரடைப்பால் 1952 ஏப்பிரல் 2 இல் தன் 55 ஆம் அகவையில் இறந்தார்.
நோக்கீடுகளும் சாதனைகளும்
[தொகு]- எரிமலைத் தூசு போல நிலா மண் அமைகிறது.
- செவ்வாய் கோளில் மணற்புயல்கள்.
- தன் சூரிய ஒளிமுகட்டளவியை மேம்படுத்தல்.
- சூரிய ஒளிமுகட்டையும் சூரிய ஒளிக்கண்ணிகளையும் நிகழ்படம் பிடித்தல்.
- சூரிய ஒளிமுகட்டில் கதிர்நிரல் கோடுகளைக் கண்டுபிடித்தல்.
புதுமைபுனைவுகள்
[தொகு]
- சூரிய ஒளிமுகட்டளவி (Coronagraph)* இலியோத் வடிப்பான்
- இலியோத் நிறுத்தம்
- இலியோத் ஒளிமுனைவுநீக்கி (Lyot depolarizer)
விருதுகளும் தகைமைகளும்
[தொகு]விருதுகள்
- இலாலண்டே பரிசு, பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகம்[2]
- ஜான்சன் பதக்கம், பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகம் (1930)
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1939)[3]
- ஓவார்டு என்.போட்சு பதக்கம் (1942)[2]
- புரூசு பதக்கம் (1947)[4]
- என்றி டிரேப்பர் பதக்கம், அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகம் (1951)[5]
இவர் பெயர் இடப்பட்டவை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ List of presidents of the Société astronomique de France
- ↑ 2.0 2.1 "The Bruce Medalists". Archived from the original on 22 ஏப்ரல் 2001. Retrieved 18 December 2014.
- ↑ "Winners of the Gold Medal of the Royal Astronomical Society". Royal Astronomical Society. Retrieved 24 February 2011.
- ↑ "Past Winners of the Catherine Wolfe Bruce Gold Medal". Astronomical Society of the Pacific. Retrieved 24 February 2011.
- ↑ "Henry Draper Medal". National Academy of Sciences. Archived from the original on 26 January 2013. Retrieved 24 February 2011.