பெர்னாண்டோ பெசோவா
பெர்னாண்டோ பெசோ Fernando Pessoa | |
|---|---|
1914 ஆம் ஆண்டில் பெர்னாண்டோ பெசோ | |
| பிறப்பு | பெர்னாண்டோ அண்டோனியோ நோகுவேரா டி செப்ரா பெசோவா 13 சூன் 1888 இலிசுபன், போர்த்துகல் |
| இறப்பு | 30 நவம்பர் 1935 (அகவை 47) இலிசுபன், போர்த்துகல் |
| புனைபெயர் | ஆல்பர்டோ கேய்ரோ, அல்வாரோ டி காம்போசு, ரிக்கார்டோ ரெய்சு, இத்யாதி. |
| தொழில் |
|
| மொழி | போர்த்துக்கேய மொழி, ஆங்கிலம், பிரான்சிய மொழி |
| கல்வி நிலையம் | இலிசுபன் பல்கலைக்கழகம் |
| காலம் | 1912–1935 |
| வகை | கவிதை, கட்டுரை, புனைவு |
| இலக்கிய இயக்கம் | நவீனவியம் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | மென்சாகம் (1934) தி புக் ஆப் திசுகுயிட்டு (1982) |
| குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
| துணைவர் | ஒபீலியா குய்ரோசு (தோழி) |
| கையொப்பம் | |
பெர்னாண்டோ பெசோவா (Fernando Pessoa) என்பவர் போர்த்துகீசிய நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞராவார். பெர்னாண்டோ அண்டோனியோ நோகுவேரா டி செப்ரா பெசோவா என்பது இவருடைய இயற்பெயராகும். 1888 ஆம் ஆண்டு சூன் மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பதிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராகவும் அறியப்படுகிறார். 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவராகவும், போர்த்துகீசிய மொழியின் சிறந்த கவிஞர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் எழுதினார். அம்மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புகளையும் செய்தார்.
பெர்னாண்டோ பெசோவா ஏறக்குறைய எழுபத்தைந்து பெயர்களில் குறுகிய காலத்தில் எழுதிய படைப்புவளமிக்க எழுத்தாளராகத் திகழ்ந்தார். இப்பெயர்களில் ஆல்பர்டோ கேய்ரோ, அல்வாரோ டி காம்போசு மற்றும் ரிக்கார்டோ ரெய்சு ஆகிய மூன்று பெயர்கள் தனித்து நிற்கின்றன. இவற்றை தன்னுடைய புனைப்பெயர்கள் என்று அவர் வரையறுக்கவில்லை. ஏனெனில் அது அவர்களின் உண்மையான சுதந்திரமான அறிவுசார் வாழ்வைப் பிரதிபலிக்கவில்லை என்று அவர் கருதினார். அதற்கு பதிலாக அவற்றை தான் கண்டுபிடித்த ஒரு சொல்லான பன்முகப் பெயர்கள் என்று அழைத்தார்.[1] இந்த கற்பனை நபர்கள் சில நேரங்களில் பிரபலமற்ற அல்லது தீவிரமான கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ciuraru, Carmela. "Fernando Pessoa & His Heteronyms". Poetry Society of America. Retrieved 1 June 2024.