பெர்ட்டில் இலிண்ட்பிளாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்ட்டில் இலிண்ட்பிளாடு
பிறப்பு(1895-11-26)26 நவம்பர் 1895
ஓரெபுரோ
இறப்பு25 சூன் 1965(1965-06-25) (அகவை 69)
சால்ட்சுயோபாடன்
தேசியம்சுவீடன்]
துறைவானியல்

பெர்ட்டில் இலிண்ட்பிளாடு (Bertil Lindblad) (ஓரெபுரோ, 26 நவம்பர் 1895 - சால்ட்சுயோபாடன், சுட்டாக்கோல்ம் புறநகரில், 25 ஜூன் 1965) ஒரு சுவீடிய வானியலாளர் ஆவார்.

ஓரெபுரோ ஓகுரே அல்மான்னா இலாரோவெர்க்கில் தொடக்கப் பள்ளிக் கல்வி முடித்ததும் இலிண்ட்பிளாடு உப்சாலா பல்கலைக்கழகத்தில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை 1941 இல் முடித்தார். அங்கு 1917 இல் filosofie magister பட்டத்தையும் 1918 இல் filosofie licentiat பட்டத்தையும் பெற்றுள்ளார். இங்கேயே இவர் முனைவர் ஆய்வும் முடித்து பின்னர் 1920 இல் பல்கலைக்கழக புலமுதல்வர் ஆனார். இவர் 1927 இல் இருந்து சுவீடன் அரசு அறிவியல் கல்விக்கழகத்தின் பேராசிரியராகவும் வானியலாளராகவும் சுட்டாக்கோல்ம் வான்காணகத்தின் தலைவராகவும் இருந்தார். Iஅந்த வான்காணகத் தலைவராக, இவர் சுட்டாக்கோல்மில் பழைய கட்டிடத்தில் இருந்த வான்கானகத்தைச் சால்ட்சுயோபாடனில் இருந்த புதிய கட்டிடத்துக்கு மாற்றி, 1931 இல் அங்கே திறந்து வைத்தார்.

இவர் பால்வெளிகளின் சுழற்சிக் கோட்பாட்டை ஆய்வு செய்தார். விண்மீன்களின் தோற்றநிலை இயக்கங்களைச் சீரியமுறையில் நோக்கி இவர் நமது பால்வழியின் சுழற்சியை ஆய்வு செய்தார். இவர் பால்வெளியின் சூரியன் அமைந்த வெளிப்பகுதியின் சுழல்வீதம் கண்டறிந்தார். இது பால்வெளி அகட்டில் இருந்து ஆரப் போக்கில் குறைவதைக் கண்டறிந்தார் . இது விரைவில் 1927 இல் ஜான் ஊர்த் அவர்களால் உறுதிபடுத்தப்பட்டது. சில சுழலும் விண்மீன்கள் அல்லது வளிம அகந்திரள் வட்டுகளில் அமையும் ஒத்திசைவுகள் இலிண்ட்பிளாடு ஒத்திசைவுகள் எனப் பெயர் இடப்பட்டுள்ளன.

இவரது மகனான பெரோலோப் இலிண்டுபிளாடும் வானியலாளர் ஆனார்.

தகைமைகள்[தொகு]

விருதுகள்

  • ஜான்சன் பதக்கம் , பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகம் (1938)
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1948)
  • புரூசு பதக்கம் (1954)

இவர் பெயர் இடப்பட்டவை

  • இலிண்டுபிளாடு நிலாக் குழிப்பள்ளம்
  • குறுங்கோள் 1448 இலிண்டுபிளாடியா

வெளி இணைப்புகள்[தொகு]