பெர்டினாண்ட் மோனயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Ferdinand Monoyer
Ferdinand Monoyer.jpg
பிறப்புமே 9, 1836(1836-05-09)
லியோன், பிரான்சு
இறப்பு11 சூலை 1912(1912-07-11) (அகவை 76)
லியோன், பிரான்சு
தேசியம்French
பணிophthalmologist

பெர்டினாண்ட் மோனயர் (9 மே 1836 – 11 ஜூலை 1912)[1] ஒரு பிரஞ்சு கண்சிகிச்சை நிபுணராக அறியப்படுகிறார்.  இவர் வில்லை அல்லது வளைந்த கண்ணாடியொன்றின் ஒளியின் வலுவை அளக்கப் பயன்படும் டையாப்ட்டர் எனும் அலகை 1872 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.[2] மோனயர் விளக்கப்படம் எனும் பார்வைத் திறனைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் அட்டவணையையும் கண்டுபிடித்தார்.[3]

மோனயர் விளக்கப்படம். மேல் மற்றும் கீழாக இரு முனைகளிலும் அவரின் பெயர் உள்ளபடி அமைக்கப்பட்டுள்ளது. (கடைசி வரி தவிர்த்து), அவரின் பெயர் "பெர்டினாண்ட் மோனயர் " "Ferdinand Monoyer" காணலாம்

வரலாறு[தொகு]

பெர்டினாண்ட் மோனயரின் தாயார் அல்சாடியன் மரபு வழியினர் ஆவார். அவரது தந்தை ஒரு பிரஞ்சு இராணுவ மருத்துவர்.[4]

மரணம்[தொகு]

பெர்டினாண்ட் மோனயர்  தம் 76 வயதில் மரணம் அடைந்தார். அவரது சமாதி Cimetière de la Guillotière எனும் இடத்தில் அமைந்துள்ளது இது  லியோன் எனும் நகரில் உள்ளது. .

மரபு[தொகு]

பெர்டினாண்ட் மோனயரைப் பற்றிய தகவல், கூகிளின் முகப்புப் பக்கத்தில் உள்ள டூடிளில் (Doodle) அவரின் 181 ஆவது பிறந்த நாளான 9 மே 2017 அன்று அவரைக் கெளரவிப்பதற்காகக் காட்சிப்படுத்தப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்டினாண்ட்_மோனயர்&oldid=2280924" இருந்து மீள்விக்கப்பட்டது