பெர்குளோரைல்பென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெர்குளோரைல்பென்சீன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
பீனைல்டிரையாக்சோ-λ7-குளோரேன்
இனங்காட்டிகள்
பப்கெம் 21559072
பண்புகள்
C6H5ClO3
வாய்ப்பாட்டு எடை 160.55 g·mol−1
கொதிநிலை 232 °C (450 °F; 505 K) (78 °செல்சியசு @ 2 மி.மீ.பாதரசம்)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் வெடிக்கும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பெர்குளோரைல்பென்சீன் (Perchlorylbenzene) என்பது C6H5ClO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு அரோமாட்டிக் சேர்மமாகும். இதை சுருக்கமாக PhClO3 என்ற வாய்ப்பாட்டாலும் எழுதுவர். பென்சீனை நேரடியாக எலக்ட்ரான் கவர் பெர்குளோரைலேற்றம் செய்து பெர்குளோரைல்பென்சீன் தயாரிக்கலாம். இவ்வினையில் பெர்குளோரைல் புளோரைடும் அலுமினியம் டிரைகுளோரைடும் பயன்படுத்தப்படுகின்றன :[1].

Ph-H + F-ClO3 + AlCl3 → Ph-ClO3 + HCl + AlCl2F (93% உற்பத்தி, AlCl3 இன் அடிப்படையில்)

இச்சேர்மம் எண்ணெய்ப்பசை கொண்ட அதிர்வு உணரியாக விவரிக்கப்படுகிறது. வினைத்திறன் குறைவான வேதிப்பொருளாகவும் நீர்த்த அமிலங்களில் (HCl (நீரிய)), அல்லது (LiAlH4, H2/Pd) அடிப்படையிலான ஒடுக்கும் வினைகளில் மந்தநிலையையும் வெளிப்படுத்துகிறது. இருப்பினும் நீரிய பொட்டாசியம் ஐதராக்சைடில் இது நீராற்பகுப்பு அடைந்து மீள்கிறது.

Ph-ClO3 + KOH → Ph-OH + KClO3

இச்சேர்மமும் இதனுடைய வழிப்பொருட்களும் நைட்ரோ சேர்மங்களையொத்த புதியவகை ஆற்றலளிக்கும் பொருட்களாக ஆராயப்பட்டு வருகின்றன[2].

மேற்கோள்கள்[தொகு]

ˌ