உள்ளடக்கத்துக்குச் செல்

பெரோசு காந்தி கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரோசு காந்தி கல்லூரி
Feroze Gandhi College, Raebareli
நிறுவப்பட்டது8 ஆகத்து 1960
வகைஅரசு நிதியுதவி கல்லூரி
கல்லூரி முதல்வர்பேரா. மனோச் குமார் திரிபாதி
அமைவுரேபரேலி, உத்தரப் பிரதேசம், இந்தியா
வளாகம்நகரப் பகுதி
முந்தைய பெயர்கள்ரேபரேலி கல்லூரி
இணையதளம்fgc.edu.in

பெரோசு காந்தி கல்லூரி (Feroze Gandhi College) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் இரேபரேலியில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1960-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 8-ஆம் தேதி, அப்போதைய உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரான பெரோசு காந்தியால் நிறுவப்பட்டது.[1][2] இக்கல்லூரி லக்னோ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]

வரலாறு

[தொகு]

ரேபரேலி மாவட்டத்தில் உயர்கல்விக்கான முக்கிய மையமாக பெரோசு காந்தி கல்லூரி திகழ்கிறது. இக்கல்லூரி 1960-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 8-ஆம் தேதி, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான திரு. பெரோசு காந்தியால் நிறுவப்பட்டது. தற்போது இக்கல்லூரி அறிவியல், கலை, வணிகவியல் மற்றும் கல்வி ஆகிய நான்கு துறைகளில் கல்வியை வழங்கி வருகிறது. இதனை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிப்பதற்கான ஒரு முன்மொழிவும் உள்ளது.

குறிப்பிடத்தக்க நபர்கள்

[தொகு]
  • தினேசு பிரதாப் சிங், மேலவை உறுப்பினர் மற்றும் மாநில அமைச்சர், உத்தரப் பிரதேச அரசு [4]
  • மனோச்சு குமார் பாண்டே, சட்டமன்ற உறுப்பினர்[5]
  • அகிலேசு குமார் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்[6]
  • இராம் சிங் பட்டேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்[7]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "About us – Feroze Gandhi College". fgc.edu.in. Archived from the original on 10 September 2018. Retrieved 25 May 2018.
  2. ↑ "Know Your College". www.knowyourcollege-gov.in. Archived from the original on 12 June 2018. Retrieved 25 May 2018.
  3. ↑ "Lucknow University". University of Lucknow.
  4. ↑ "Dinesh Pratap Singh(Bharatiya Janata Party(BJP)):Constituency- RAE BARELI(UTTAR PRADESH) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2024-01-14.
  5. ↑ "Manoj Kumar Pandey(Samajwadi Party(SP)):Constituency- UNCHAHAR(RAE BARELI) - Affidavit Information of Candidate".
  6. ↑ "Akhilesh Kumar Singh(PECP):Constituency- RAE BARELI (RAE BARELI ) - Affidavit Information of Candidate".
  7. ↑ "Ram Singh(Samajwadi Party(SP)):Constituency- PATTI(PRATAPGARH) - Affidavit Information of Candidate".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரோசு_காந்தி_கல்லூரி&oldid=4609474" இலிருந்து மீள்விக்கப்பட்டது