உள்ளடக்கத்துக்குச் செல்

பெரோகார்டோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரோகார்டோனைட்டு
Ferrohortonolite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுFe/(Fe+Mg)

பெரோகார்டோனைட்டு (Keilhauitee) என்பது Fe/(Fe+Mg) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆலிவைன் தொடரில் உள்ள ஒரு கனிம வகையாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது.[1] 70% முதல் 90% ஆலிவைன் திண்மக் கரைசல் தொடரின் இறுதி உறுப்பினரான பாயலைட்டும் 30% முதல் 10% வெள்ளை ஆலிவைன் எனப்படும் பார்சுட்டரைட்டும் 0.7 முதல் 0.9 என்ற விகிதத்தில் பெரோகார்டோனைட்டில் கலந்துள்ளன. ஆலிவைன் தொடருக்கான வழக்கற்றுப் போன ஆர்ட்டோனோலைட்டு சொற்களஞ்சியத்திலிருந்து இப்பெயர் பெறப்பட்டது.[1]

ஆத்திரேலியாவின் குயின்சுலாந்தில் உள்ள மவுண்ட் கில்லீசு மலை, மேற்கு கிரீன்லாந்தின் இலிமாசாக்கு வளாகம், சிசிலியின் பான்டெல்லேரியா தீவு; செயிண்ட் லூசியாவில் உள்ள சோக் கிராமம் ஆகிய இடங்களில் கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "Ferrohortonolite". www.mindat.org.
  • U.S. Bureau of Mines (1996). Dictionary of Mining, Mineral, and Related Terms.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரோகார்டோனைட்டு&oldid=4241914" இலிருந்து மீள்விக்கப்பட்டது