பெரே (கிரேக்கம்)
பெரே (Pherae கிரேக்கம் : Φεραί ) என்பது பண்டைய கிரேக்கத்தின் பண்டைய தெசலியின் தென்கிழக்கில் இருந்த ஒரு நகரம் மற்றும் போலிஸ் (நகர அரசு) ஆகும். [1] [2] பழமையான தெசலியன் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது பண்டைய பெலாஸ்ஜியோடிசின் தென்கிழக்கு மூலையில் அமைந்திருந்தது. [3] இசுட்ராபோவின் கூற்றுப்படி, இது பகாசே வளைகுடாவில் அதன் துறைமுகமான பகாசேயில் இருந்து லேக் போபீஸ் 90 ஸ்டேடியனுக்கும் குறைவான தொலைவில் இருந்தது. இதன் தளம் நவீன நகரமான வெலஸ்டினோவில் உள்ளது.
பெலோபொன்னேசியப் போரின் தொடக்கத்தில் ஏதென்சின் ஆரம்பகால தெசலியன் ஆதரவாளர்களின் பெயர் பட்டியலில் பெரேயை துசிடிடீஸ் குறிப்பிட்டுள்ளார் (பெலோபொன்னேசியப் போரின் வரலாறு 2.22). போரின் முடிவில் லிகோஃப்ரான் பெரேயில் ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவினார். அவரது மரணத்தில் அவரது மகன் ஜேசன் சர்வாதிகாரி ஆனார். கிமு 374 வாக்கில் தெசலி முழுவதும் அவரது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். மாக்கெடோனின் பிலிப் கிமு 352 இல் பெரேவைக் கைப்பற்றி தெசலியை மாசிடோனிய ஆட்சிக்கு உட்படுத்தினார்.
உரோமானிய காலங்களில் பெரே எலனிய கிரேக்க பேரரசரான சிரியாவின் ஆண்டியோகசால் கிமு 191 இல் கைப்பற்றப்பட்டது. ஆனால் அதே ஆண்டு இதை உரோமானிய தூதரான மணியஸ் அசிலியஸ் கிளப்ரியோவிடம் இழந்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Mogens Herman Hansen & Thomas Heine Nielsen (2004). An inventory of archaic and classical poleis. New York: Oxford University Press.
- ↑ Autenrieth, Georg (1891). "Φεραί". A Homeric Dictionary for Schools and Colleges. New York: Harper and Brothers.
- ↑ Smith, William (1854). "Pherae (Φέραι) (1)". Dictionary of Greek and Roman Geography. London: Walton and Maber.