உள்ளடக்கத்துக்குச் செல்

பெருவனம் குட்டன் மாரார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருவனம் குட்டன் மாரார்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்எம். சங்கர நாராயணன்
பிறப்பு25 நவம்பர் 1953 (1953-11-25) (அகவை 72)
பெருவனம், திருச்சூர், கேரளம், இந்தியா
தொழில்(கள்)தாள இசைக்கருவி
இசைக்கருவி(கள்)செண்டை
இசைத்துறையில்1963–தற்போது

பெருவனம் குட்டன் மாரார் (Peruvanam Kuttan Marar) என்பவர் ஒரு செண்டை இசைக் கலைஞராவார். இவர் கேரளத்தில் பல பிரபலமான பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளை வழிநடத்துகிறார். கலைத்துறையில் இவர் செய்த சேவைக்காகளுக்காக இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயரிய விருதான பத்மசிறீ விருது 2011 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. [1]

துவக்க கால வாழ்க்கை

[தொகு]

பெருவனம் குட்டன் மாரார் கேரளத்தின் திருச்சூரில் உள்ள பெருவனத்தில் செண்டை இசைக் கலைஞர்கள் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். இவரின் தாத்தா, பெருவனம் நாராயண மாரார், தந்தை, பெருவனம் அப்பு மாரார் ஆகியோரும் நன்கு அறியப்பட்ட செண்டை இசைக் கலைஞர்களாவர். இவரின் தந்தை குமாரபுரம் அப்பு மாரார் மற்றும் ஸ்ரீநாராயணபுரம் அப்பு மாரார் ஆகியோர் இவரது ஆசிரியர்களாவர். [2] இவர் தனது 10வது வயதில் செண்டை இசைக் கலைஞராக அறிமுகமானார். பெருவனம் மகாதேவர் கோவில் உட்பட அருகில் உள்ள கோவில்களில் நடந்த திருவிழாக்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார். [3] 20 வயதில் செர்புவிலுள்ள சி. என்.என். ஆடவர் உயர்நிலைப் பள்ளியில் எழுத்தராக பணிக்குச் சேர்ந்தார். [ மேற்கோள் தேவை ]

கலை வாழ்க்கை

[தொகு]
பெருவனம் குட்டன் மாரர் மற்றும் குழுவினர் திருப்புனித்துறை பூர்ணத்ரயீச கோவிலில் செண்டை வாசித்தல்.

திருச்சூர் பூரம், பெருவனம் பூரம், கொல்லம் பூரம், குருவாயூர் கோவில் திருவிழாக்கள் உட்பட கேரளத்தின் முக்கிய கோவில் திருவிழாக்களில் குட்டன் மாரார் செண்டை அடித்துள்ளார். [3] இவர் திருச்சூர் பூரத்தின் புகழ்பெற்ற இளஞ்சிதரா மேளத்தை வழிநடத்துகிறார். [4] குட்டன் மாரார் 1977 முதல் இளஞ்சிதரா மேளத்தில் இசைக்கத் தொடங்கினார் மற்றும் 1999 முதல் அதன் பிரமணியாக இருந்தார்.

பெருவனம் கூட்டன் மாரார் செண்டை வாசித்த கோயில்களின் (பகுதி) பட்டியல் :

  1. புதுக்கோடு பகவதி கோயில்
  2. புத்தூர் திருப்புரைக்கால் பகவதி கோவில்
  3. பனங்காடு மகா கணபதி கோயில்
  4. திருப்புனித்துரா பூர்ணத்ரயீச கோயில்
  5. வைக்கம் மகாதேவர் கோயில்
  6. குருவாயூர் கோயில்
  7. பள்ளத்தம்குல்லங்கரா பகவதி கோவில், எர்ணாகுளம்
  8. இலங்குன்னபுழா கோவில், எர்ணாகுளம்
  9. குட்டநெல்லூர் கோயில், திருச்சூர்
  10. மணலாறுகாவு கோவில், திருச்சூர்
  11. புழக்கரக்காவு கோவில், மூவாட்டுப்புழா
  12. பரமேக்காவு கோயில்
  13. வடக்குநாதன் கோயில்
  14. சேர்ப்பு பகவதி கோவில், சேர்ப்பு
  15. தாமரகுளங்கரா கோவில், திரிபுனித்துரா
  16. கொட்டாரம் பகவதி கோவில். மரடு
  17. எர்ணாகுளம் சிவன் கோயில்
  18. பெருவனம் கோயில்
  19. ஆராட்டுப்புழா கோயில்
  20. சீனகதூர் கோயில்
  21. மல்லியூர் மகா கணபதி கோவில்
  22. இரிஞ்சாலகுடா கோயில்
  23. கொடுந்திரபுளி துர்காஷ்டமி (ம) மகாநவமி நவராத்திரி விழா, பாலக்காடு
  24. செர்புளச்சேரி பகவதி கோவில்
  25. பாலியம் சிவன் கோயில்
  26. மகாதேவா கோவில், ராஜாக்காடு
  27. பிலக்காடு இராமன்குளங்கரா ஐயப்பன் கோவில்
  28. திருவார்ப்பு கிருஷ்ண சுவாமி கோயில், கோட்டயம்
  29. மண்ணுத்ருக்கோவில் மகாவிஷ்ணு கோவில், புல்லாழி, திருச்சூர்

பெருவனம் குட்டன் மாராருடன் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் இசைக்கும் கலைஞர்களின் (பகுதி) பட்டியல். :

  1. திருவல்லா ராதாகிருஷ்ணன்
  2. பெருவனம் சதீஷன் மாரார்
  3. கெளத் அரவிந்தாக்ஷன் மாரார்
  4. பழுவில் ரகு மாரர்
  5. சோவல்லூர் மோகனன் நாயர்
  6. சோவல்லூர் மோகனன் வாரியர்
  7. பெருவனம் கார்த்திக் மாரார்
  1. அந்திக்காடு ராமச்சந்திரன்
  2. அந்திக்காடு பத்மனாபன்
  3. பெருவனம் சங்கரநாராயணன்
  4. பெருவனம் சிவன்
  5. பெருவனம் பிரகாசன்
  6. பெருவனம் கிருஷ்ணன்
  7. மணியம்பரம்பில் மணி நாயர்
  8. கிழூட் நந்தனன்

பரவலர் பண்பாட்டில்

[தொகு]

சி. வேணுகோபால் மற்றும் கே. ராமச்சந்திரன் ஆகியோர் குட்டன் மாராரைப் பற்றிய 45 நிமிட ஆவணப்படத்தை பிரணதி என்ற பெயரில் தயாரித்தனர். [5]

விருதுகள்

[தொகு]
  1. கேலி மேலசூர்யன் விருது 2012
  2. சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் 2012
  3. பல்லவூர் புரஸ்காரம் 2012
  4. 2011 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது
  5. 2010 இல் கேரள சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் [6]
  6. கேரள சங்கீத நாடக அகாடமி விருது 2001 [7]
  7. வீரஸ்ரிங்காலா 2000
  8. ஆராட்டுப்புழா ஸ்ரீ சாஸ்தா விருது
  9. ஸ்ரீ குருவாயூரப்பன் விருது
  10. கெலியின் நம்பிக்கைக்குரிய கலைஞர் விருது 1999
  11. கெலியின் தங்க சங்கு 2005
  12. கெலியின் வாழ்நாள் சாதனையாளர் விருது 2009
  13. கலா தர்பணா விருது
  14. நடா பூர்ணத்ராய் விருது
  15. ஆதாரனீயம் விருது
  16. மேள கால சக்ரவர்த்தி
  17. வாத்யோதம விருது
  18. மேலக்கலாநிதி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Padma Awards Announced ece". Press Information Bureau, Government of India. 25 January 2011. Retrieved 22 December 2019.
  2. "Melam artistes should not play to the gallery: Peruvanam". The Hindu. 8 May 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article2000986.ece.
  3. 1 2 "Peruvanam Kuttan Marar, percussionist". The Hindu. 2 March 2011. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/article1502165.ece.
  4. "Welcome to Thrissurpooramfestival.com". thrissurpooramfestival.com. Archived from the original on 2009-07-13.
  5. "Life as an ace helmsman". The Hindu. 13 January 2011. http://www.thehindu.com/arts/music/article1089899.ece.
  6. "Kerala Sangeetha Nataka Akademi Fellowship: Keraleeya Vadyangal". Department of Cultural Affairs, Government of Kerala. Retrieved 25 February 2023.
  7. "Kerala Sangeetha Nataka Akademi Award: Keraleeya Vadyangal". Department of Cultural Affairs, Government of Kerala. Retrieved 26 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவனம்_குட்டன்_மாரார்&oldid=4436392" இலிருந்து மீள்விக்கப்பட்டது