பெரும் சீனப்பஞ்சம்
சீனப் பெரும் பஞ்சம் Great Chinese Famine | |
---|---|
நாடு | சீனா |
இடம் | சீனப் பெரும்பரப்பு |
காலம் | 1959–1961 |
மொத்த இறப்புகள் | 15 மில்லியன் (அரசுத் தரவுகள்) 15 முதல் 30 மில்லியன் (புலமைசார் மதிப்பீடு)[1] குறைந்தது 45 மில்லியன் (டிக்கோட்டர்) |
அவதானிப்புகள் | சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரும் நெருக்கடியாக இது கருதப்பட்டது. பெரும் முற்போக்குப் பாய்ச்சல் இயக்கத்தின் ஒரு பகுதி. |
விளைவுகள் | பெரும் முற்போக்குப் பாய்ச்சல் இயக்கம் நிறுத்தப்பட்டது. |
பெரும் சீனப்பஞ்சம் (சீன மொழி: 三年大饑荒) என்பது 1959-61 ஆண்டுகளில் சீன மக்கள் குடியரசில் ஏற்பட்ட பஞ்சத்தைக் குறிக்கும். வறட்சி, மோசமான கால நிலையுடன் சீன அதிபர் மா சே துங் அவர்களின் கொள்கையும் இப்பஞ்சத்துக்கு காரணமாகும். மா சே துங் கின் கொள்கைகள் எந்தளவு பஞ்சத்திற்கு காரணம் என்பதில் கருத்து மாறுபாடு உள்ளது. இந்த பஞ்சத்தால் கோடிக்கணக்கானவர்கள் பட்டினியால் இறந்ததாக கருதப்படுகிறது.
சீனாவில் இப்பஞ்சம் மூன்று ஆண்டுகளின் பெரும் சீனப் பஞ்சம் (எழுமைபடுத்தப்பட்ட சீனம்: 三年大饥荒; மரபுவழி சீனம்: 三年大饑荒; பின்யின்: Sānnián dà jīhuāng) என்றும் சீன அரசாங்க தரப்பில் மூன்று ஆண்டுகளான இயற்கை பேரிடர் (எழுமைபடுத்தப்பட்ட சீனம்: 三年自然灾害; மரபுவழி சீனம்: 三年自然災害; பின்யின்: Sānnián zìrán zāihài) என கூறப்படுகிறது 1980இக்கு முன் மூன்றாண்டுகளான நெருக்கடி (எழுமைபடுத்தப்பட்ட சீனம்: 三年困难时期; மரபுவழி சீனம்: 三年困難時期; பின்யின்: Sānnián kùnnán shíqī) அல்லது பெரும் பாய்ச்சலின் பஞ்சம் எனவும் கூறப்பட்டது.
உருவான காரணம்
[தொகு]பெரும் சீனப்பஞ்சம் என்பது மோசமான காலநிலையாலும், சமூக காரணிகளாலும், மோசமான பொருளாதார நிருவாகத்தாலும் அரசின் திடீர் விவசாய கொள்கை மாற்றத்தாலும் ஏற்பட்டது.
சீன பொதுவுடமைக்கட்சி தலைவர் மா சே துங் விவசாய நிலங்கள் தனியாருக்கு சொந்தமில்லை போன்ற விவசாய கொள்கையில் திடீரென்று பெரும் மாறுதல்களை செய்தார், இக்கொள்ளைகளை கடைபிடிக்காதவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்றார். விவசாயமும் வணிகமும் அரசால் கட்டுபடுத்தப்பட்டன. அதனால் மக்கள் பெரும் சமூக அழுத்தத்திற்கு உள்ளானார்கள். இது முடிவில் அரசு உறுதியற்று இருப்பதற்கு காரணமாயிற்று.
பெரும் முற்போக்குப் பாய்ச்சல் காலத்தில் (1958-62) நிறைவேற்றப்பட்ட சட்டங்களால் ஏறக்குறைய மூன்றரை கோடி மக்கள் பசியால் இறந்ததாக யாங் சிச்எங் என்ற செய்தியாளர் ஆராய்ந்து கூறுகிறார். [2] 1980 வரை சீன அரசு மூன்று ஆண்டுகளான இயற்கை பேரிடர் என்றே இப்பஞ்சத்தைப் பற்றி கூறிவந்தது. இது மோசமான காலநிலை போன்ற இயற்கை சீற்றங்களை பெரிது படுத்தி அதனால் அரசின் சில திட்டமிடல்கள் தவறாகி விட்டன என அரசை காப்பாற்றும் படியான பெயராகும். சீனாவுக்கு வெளியிலிருந்த ஆராய்ச்சியாளர்கள் மோசமான பெரும் முற்போக்கு பாய்ச்சல் செய்த கொள்கை மாற்றமும் அரசு இயந்திரமுமே இப்பஞ்சத்தை உருவாக்கிய காரணிகள் அல்லது இப்பஞ்சத்தை தீவிரமாக்கிய காரணிகள் என்றனர்.[3][4]. 1980இக்கு பிறகே அரசாங்கம் கொள்கை முடிவின் தவறை ஏற்படுத்திய சீரழிவை உணர்ந்து இந்த பஞ்சத்திற்கு காரணம் 30% இயற்கையும் 70% மோசமான நிருவாகமும் என ஒத்துக்கொண்டது.[5]
பெரும் முன்னேற்ற பாய்ச்சலின் போது விவசாயம் சமூகத்தால் மட்டுமே செய்யப்பட வேண்டுமென என்வும் தனியார் செய்ய கூடாதெனவும் தடை விதிக்கப்பட்டது. இரும்புத்தாதும் இரும்பு தகடு உற்பத்தியும் பொருளாதார முன்னேற்றத்தாக்கான காரணிகாக கருதப்பட்டன. கோடிக்கணக்கான உழவர்கள் விவசாயத்தை விட்டு இரும்புத்தாதும் இரும்பு தகடும் உற்பத்தி செய்யும் ஆலைகளில் பணியாற்ற கூறப்பட்டார்கள்.
யாங் சிங்எங் என்பர் 2008இல் சின்யாங் மாகாணத்தில் தானிய கிடங்குகளின் வாயிலில் மக்கள் பசியால் வாடி இருந்தார்கள் எனவும் அவர்கள் இறக்கும் பொது பொதுவுடைமைக் கட்சி தலைவர் மா எங்களை காப்பாற்றுங்கள் என கதறினர். எனன்னிலும் எபையிலும் இருந்த தானிய கிடங்குகள் திறிக்கப்பட்டிருந்தால் யாரும் இறந்திருக்க மாட்டார்கள் ஏனென்றால் அந்நகரங்களை சுற்றியே இறப்புகள் இருந்தன என்கிறார். அலுவலர்கள் அவர்களை காப்பாற்ற நினைப்பதற்கு பதிலாக இன்னும் எத்தனை மூட்டை தானியம் வந்தால் கிடங்கு நிறையும் என்பதிலேயே குறியாய் இருந்தனர்.
சோவியத் போலி அறிவியலாளர் ரோபிம் லைசென்கோ கருத்தை அடிப்படையாக கொண்டு சீன அரசு விவசாய முறைகளில் பல மாறுதல்களை செய்ய ஆணையிட்டது.[6] விதைகளை மும்மடங்காக விதைத்து பின் மேலும் அதை இருமடங்காக்க வேண்டும் என்பது ஒரு கருத்து. ஒரே வகை பயிர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு வளராது என்பது இக்கருத்தின் அடிப்படை. ஆனால் நடைமுறையில் அவை போட்டி போட்டன இதனால் போதிய இடம் இல்லாததால் மற்ற விதைகளும் சத்துக்களை உறிஞ்சியதால் வளர்ச்சி குன்றி விளைச்சல் குறைந்தது. லைசென்கோ அவர்களின் கூட்டாளி மால்செவ் கருத்தின் அடிப்படையில் ஆழ உழுதல் என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக உழவர்கள் 15-20 செமீ ஆழம் தான் உழுவார்கள். இந்த புதிய கொள்கைப்படி 1-2 மீ உழ கூறப்பட்டார்கள். இப்படி ஆழ உழும் போது நிலத்துக்கு அடியில் உள்ள வண்டலை வேர்கள் பயன்படுத்தி நன்றாக வளரும் என்பதே. ஆனால் இதனால் தேவையற்ற கற்களும் மணலும் மண்ணும் மேலே வந்து மேலுள்ள வண்டலை மூடிவிட்டன இதனாலும் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Holmes, Leslie. Communism: A Very Short Introduction (ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் 2009). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-955154-5. p. 32 "Most estimates of the number of Chinese dead are in the range of 15 to 30 million."
- ↑ Jisheng, Yang "Tombstone: The Great Chinese Famine, 1958–1962". Book Review. New York Times. Dec, 2012. March 3, 2013. https://www.nytimes.com/2012/12/09/books/review/tombstone-the-great-chinese-famine-1958-1962-by-yang-jisheng.html
- ↑ Sue Williams (director), Howard Sharp (editor), Will Lyman (narrator).China: A Century of Revolution.WinStar Home Entertainment.
- ↑ Demeny, Paul; McNicoll, Geoffrey, eds. (2003), "Famine in China", Encyclopedia of Population, vol. 1, New York: Macmillan Reference, pp. 388–390
- ↑ Yang, Jisheng, Edward Friedman, Jian Guo, and Stacy Mosher. Tombstone: The Great Chinese Famine, 1958–1962. New York: Farrar, Straus and Giroux, 2012. Print. pp. 452–53
- ↑ Lynch, Michael (2008). The People's Republic of China, 1949–76 (second ed.). London: Hodder Education. p. 57.