பெரும் கிழிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரும் கிழிப்பு (Big Rip) என்பது 2003 ஆம் ஆண்டில் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஒரு பிரபஞ்சவியல் கருதுகோள் ஆகும். இது நமது பிரபஞ்சத்தின் இறுதி விதியைப் பற்றிச் சொல்கிறது. இதன் படி நமது பிரபஞ்சம் விரிவடைவதால் விண்மீன் திரள்களில் உள்ள பொருட்களில் உள்ள அணு மற்றும் துகள்கள் கிழிக்கப்பட்டுக் கொண்டே போகும். ஒரு துணியின் நீளத்தை நாம் இழுத்துக் கொண்டே போனால் அது கிழிந்து போவதைப் போல் நமது பிரபஞ்சத்தில் உள்ள அணு மற்றும் அணுத்துகளும் இறுதியாக கிழிந்து போகும் என இக்கருதுகோள் முன்வைக்கிறது.

இக்கருதுகோளின் முக்கிய அடிப்படை பிரபஞ்சத்தில் உள்ள கறுப்பு ஆற்றல் ஆகும். இதில் சுட்டப்படும் முக்கிய அளவான w என்பது கறுப்பு ஆற்றல் அழுத்தம் மற்றும் கறுப்பு ஆற்றல் செறிவுக்கிடையிலான செறிவின் விகிதம் ஆகும். w < −1 இருக்கும் போது பேய் ஆற்றல் உண்டாகி நமது பிரபஞ்சமே கிழிக்கப்பட்டு விடும்.

பேய் ஆற்றல் மிகுந்துள்ள பிரபஞ்சத்தில் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரித்துக் கொண்டே போகும். ஆகவே கட்புலனாகும் பிரபஞ்சத்தின் அளவு சுருங்கிக்கொண்டே போகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருப்பதாகத் தோன்றும் பொருள் அடுத்த நேரத்தில் இன்னும் அதிக தூரத்தை அடையும். இதன்படி ஒரு முடிவுள்ள காலத்தின் பின் எல்லாத் தொலைவுகளும் முடிவிலியாகி விடும்.

இக்கொள்கையை உருவாக்கியவர்களின் கணக்குப்படி அந்த முடிவுள்ள காலம் அதாவது பிரபஞ்சத்தின் இறுதி இன்னும் 22 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின் வரவுள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_கிழிப்பு&oldid=2744673" இலிருந்து மீள்விக்கப்பட்டது