உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும் இமயமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Annapurna I and Annapurna south on the right; Nilgiri South on the left of the Himalayas
நேபாளத்தில் பரவியிருக்கும் இமயமலையின் அன்னபூர்ணா என்ற மலைத்தொடரின் தோற்றம்

பெரும் இமயமலை (Greater Himalayas) (Great Himalayas) இமயமலை அமைப்பின் உள்ள ஒரு உயா்ந்த மலைத் தொடர் ஆகும்.[1][2] உலகின் மிக உயரமான சிகரமான எவரெசுட்டு சிகரமும், மற்றும் "அருகில் உள்ள-உயர்ந்த" சிகரங்களான கஞ்சன்ஜங்கா, இலோட்சே, நங்க பர்வதம் போன்றவையும் பெரும் இமயமலைத் தொடரின் ஒரு பகுதியாகும். பெரிய இமயமலை மேற்கிலிருந்து கிழக்கு வரை மொத்தம் 2400 கிமீ (1500 மைல்கள்) நீண்டுள்ளது. மேலும் இதன் சராசரி உயரம் 6000 மீ (20000 அடி) ஆகும்.

கங்கோத்ரி பனிப்பாறை மற்றும் சதோபந்த் பனிப்பாறை உட்பட பல பனிப்பாறைகள் இந்த மலைத்தொடரில் உள்ளன.

இந்த மலைத்தொடா் இந்தியா, சீனா, நேபாளம், பாக்கித்தான், பூட்டான், மற்றும் திபெத்து ஆகிய பகுதிகளில் பரவியுள்ளது.

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Greater Himalayas Encyclopædia Britannica
  2. Hussain, Majid, Geography of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_இமயமலை&oldid=4106506" இலிருந்து மீள்விக்கப்பட்டது