பெரும்பாணப்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரும்பாணப்பாடி (Perumbanappadi) என்பது முற்காலப் பல்லவர் காலத்தில் அவர்களின்கீழ் ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்களான பாணர் அல்லது வாணர் என்றழைக்கப்பட்ட மன்னர்களின் பூர்வீக ஆட்சிப்பகுதியாகும்.[1] இப்பகுதியானது  தென்பெண்ணை ஆற்றில் இருந்து, திருவேங்கட மலைகள் வரை பரவியிருந்தது. பெரும்பாணப்பாடியானது திருவேங்கடக் கோட்டம் (அல்லது வேங்கடக் கோட்டம்),[2]   தூநாடு,[3] புலிநாடு, வட புலிநாடு, சிலைநாடு [4] போன்ற பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. சோழர் காலத்தின்போது, பெரும்பாணப்பாடியானது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் பெரிய பிரிவாக இருந்தது.[5][6] மேலும் தொண்டை மண்டலத்தின் வடமேற்குப் பகுதிகளையும் கொண்டதாக இருந்தது.[7]

எல்லைகள்[தொகு]

பெரும்பாணப்பாடியானது பாணராட்டிரம் என்றும் அழைக்கப்பட்டது. பெரும்பாணப்பாடியில் எல்லைகளாக மேற்கில் கோலார், புங்கனூர் மற்றும் ஸ்ரீசைலம் போன்றவற்றையும் கிழக்கில் காளத்தி மற்றும் சோளிங்கர் ஆகியவற்றைக் கொண்டதாக இருந்தது. தெற்கெல்லையாக தென்பெண்ணையாற்றைக் கொண்டிருந்தது.[8][9][10] பெரும்பாணப்பாடியின் தலைநகரானது வேலூரில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள திருவல்லம் ஆகும்.[11] இது அக்காலத்தில் வணபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

பாலாற்றின் கரையை அடிப்படையாகக் கொண்ட பாண நாட்டின் மன்னன் மாவலி வாணாதிரயன் என்ற பெயரைப் பூண்டவர் ஆவார். இதன் பரப்பளவானது வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றமடைந்து வந்துள்ளது.[12] இதன் பரப்பளவு மாற்றங்களானது கல்வெட்டுகளின் வாயிலாக துல்லியமாக அறியப்படுகிறது. என்றாலும், பல வண மன்னர்களின் தனிப்பட்ட பெயர்கள் குறித்து அறியப்படவில்லை. குறிப்பாக அவர்கள் தங்கள் எதிரிகளுக்கு எதிராக போரிட்ட போர்கள் குறித்தும் அவ்வளவாக   அறியப்படவில்லை.  எடுத்துக்காட்டாக விஜய நந்திவிக்ரம வர்மனின் (கி.பி. 792 - 793) திருவல்லம் சாசணத்தில் மாவலி வாணராயன் ஆண்ட பகுதி வடுகவழி- 12000 என குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த மாவலி பணராஜாவின் தனிப்பட்ட பெயராகத் தெரியவில்லை.[13]

பெரும்பாலான கல்வெட்டுகள் பாண மன்னர்களின் பெயரை ''மகாபலி பாணராஜா'' என்றே குறிப்பிடுகின்றன. பாணர்கள் அவர்களின் நிலவியல் இடத்தைக் கொண்டும் புலிநாடு பாணர்கள், தூநாடு பாணர்கள் போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களின் மரபுவழியானது  புராணக் கதைகளுடன் தொடர்புடையதாக அவர்களின் செப்பேடுகளிலும், கோவில் கல்வெட்டுகளிலும் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு உதாரணமாக பாணன் மூன்றாம் விக்ரமாதித்யனின் உதயேந்திரம் சாசணத்தில்,  விஷ்ணுவின் மகாபலி பற்றிய புராணக் தொடர்புகளை விவரிக்கப்பட்டுள்ளது.[14]

பாண மன்னர்கள்[தொகு]

பாண மன்னர்கள் மகாபலி சக்கரவர்த்தியின் வழித்தோன்றல்களாக தங்களைக் குறிப்பிட்டுக்கொண்டனர். மேலும் அவர்கள் பெரும்பாணாதியரசர் அல்லது மகாபலி பாணராஜா என அழைக்கப்பட்டனர்.[15] துவக்கக் கால மன்னர்கள் பெரும்பண-அரைசர் போன்ற பெயர்களைக் கொண்டிருந்தது அவர்கள் காலத்திய நடுகற்களின் வழியாகத் தெரிகிறது.[16]  [17]

பாண மன்னர்களும் அண்டை மன்னர்களும்[தொகு]

மேலைக் கங்கர்களுக்கும் பாணர்களுக்கும் இடையில் திருமண உறவுகள் இருந்தன கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் பாண சிற்றரசன் முதலாம் விக்கிரமாதித்தனுடைய மகள் குந்தவை கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியை மணந்துகொண்டாள். கங்க மன்னன் சிறீபுருசன் ஆட்சியில் பாணர் சிற்றரசர்களாக தகடூரை ஆண்டுள்ளனர்.

பாணர்கள் தொடக்கக் காலத்தில் சாதவாகனப் பேரரசர்களுக்கு அடங்கிய குறுநில மன்னர்களாக இருந்தனர் என்றும், பின்னர் பல்லவர்களுக்கு அடங்கிய குறுநில மன்னர்களாகவும் இருந்தனர் என்றும் கருதப்படுகிறது. நுளம்பர்கள் கீழும், சோழ மன்னரின் கீழும் பாணர்கள் நாடாண்டுள்ளனர். பாண்டிய நாட்டிலும், கொங்கு நாட்டிலும் வாணாதிராயர்கள் பிற்காலத்தில் செல்வாக்குடன் இருந்துள்ளனர் என்பது அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Early inscriptions, by Sadhu Subrahmanya Sastry, p.55
  2. Early inscriptions, by Sadhu Subrahmanya Sastry, p.55
  3. Ancient India: collected essays on the literary and political history of Southern India, by Sakkottai Krishnaswami Aiyangar, p.166
  4. A study of Telugu place-names: based on inscriptions from the earliest to the 13th century, by S. S. Ramachandra Murthy, p.122
  5. A study of Telugu place-names: based on inscriptions from the earliest to the 13th century, by S. S. Ramachandra Murthy, p.122
  6. South Indian Inscriptions: Miscellaneous inscriptions in Tamil, by Eugen Hultzsch, Hosakote Krishna Sastri, Archaeological Survey of India, p. 89 and p.113
  7. Trade, ideology, and urbanization: South India 300 BC to AD 1300, by Radha Champakalakshmi, p.374
  8. Sailendra Nath Sen. (1988). Ancient Indian History and Civilization. New Age International Publishers. பக். 469–476. https://books.google.com/books?id=Wk4_ICH_g1EC&pg=PA470&lpg=PA470&dq=Bana+Kingdom&source=bl&ots=4Zx01EzL2n&sig=ygi1Dtr-Dkf1XXrn99lk8ammoJM&hl=en&ei=4eEpS6b9GIL8sQPft7zJBA&sa=X&oi=book_result&ct=result&resnum=8&ved=0CB8Q6AEwBw#v=onepage&q=Bana%20Kingdom&f=false. 
  9. Feudatories of South India, 800-1070 A.D, p.35-36
  10. The Tirumala Temple, by N Ramesan, p.17-18
  11. The early Chōḷas history, art, and culture, by S. Swaminathan, p.46
  12. History of the nayaks of Madura, by R. Sathianathaier and Sakkottai Krishnaswami Aiyangar, p.78
  13. Chittoor through the ages, by MD Sampath, p.37
  14. Chittoor through the ages, by MD Sampath, p.34
  15. Art and culture of Tamil Nadu, by Irāmaccantiran̲ Nākacāmi and R. Nagaswamy, p.13
  16. The political structure of early medieval South India, by Kesavan Veluthat, p.109
  17. Epigraphia Indica, Volume 15, p.108
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பாணப்பாடி&oldid=3737359" இலிருந்து மீள்விக்கப்பட்டது