பெருமை மற்றும் பாரபட்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெருமை மற்றும் பாரபட்சம்
நூலாசிரியர்ஜேன் ஆஸ்டின்
நாடுஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்டி.ஈகர்டன்,வெள்ளை மாளிகை

”பெருமை மற்றும் பாரபட்சம்” என்ற நாவல் 1821 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஜேன் ஆஸ்டனின் ஒரு காதல் நாவலாகும். இந்த கதை கதாப்பாத்திரத்தின் உணர்ச்சிவசமான வளர்ச்சியைக் காட்டுகிறது, எலிசபெத் பென்னட், அவசரமான தீர்ப்புகளைத் தவறுதலாகப் கற்றுக்கொள்வதோடு மேலோட்டமான மற்றும் அத்தியாவசியமானவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டை பாராட்டுகிறார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலப்பகுதியில் நடத்தை, கல்வி, திருமணம், பணம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இந்த நாவலின் நகைச்சுவைப்பகுதிகள் அமைந்துள்ளது.

திரு. பென்னட் லாங்க்பர்ன் தோட்டத்தின் சொந்தக்காரர் ஆவார்.இவருக்கு ஐந்து மகள்கள். ஆனால் இவருடைய சொத்துகள் யாருக்கும் விற்க முடியாதபடி சாசனமாக்கப்பட்டுள்ளது.அர்த்தம் என்னவெனில் இவருடைய ஐந்து மகள்களும் இதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. அவரது மனைவிக்கு எந்த பக்கபலமும் இல்லாத துரதிருஷ்ட நிலை. எனவே குறைந்தபட்சம் ஒரு மகளாவது நல்லபடியாக திருமணம் நடந்து,இவரது இறப்பிற்கு பிறகு மற்ற மகள்களை கரை சேர்க்க வசதியாக இருக்கும்.ஜேன் ஆஸ்டினின் தொடக்க வரி-உலகளாவிய ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை என்னவெனில் ஒரு நல்ல குணமுள்ள பெண்ணை திருமணம் செய்து மனைவியாக அடைவதே தனிமனிதன் அடையும் மிகச்சிறந்த அதிர்ஷ்டமாகும்.இந்த வரிகள் முரண்பாடானதாகவும் விளையாட்டுத்தனமிக்கதாகவும் உள்ளது.திருமணம் என்பது அன்பின் அடிப்படையில் அமைய வேண்டுமேயன்றி,பணத்திற்காகவும்,சமுதாய நிர்பந்தத்திற்காக பணத்தேவைகளை பூர்த்தி செய்யும் இணைப்பாகவும் இருக்கக்கூடாது.

ஆங்கில இலக்கியத்தில் 20 மில்லியனுக்கும் மேல் விற்பனையான மிகவும் பிரபலமான ஒரு புதினம் இது ஆகும். நவீன இலக்கியத்தில் பல புதுமைகள் கொண்டுவருவதற்கு இப்புதினம் வழிவகுத்தது. ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக தேர்வு பெற்ற மற்றும் கற்போரின் நாடக தழுவல்கள் மறுபதிப்புகள் தொடர்கள், படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் என இப்புதினம் கதை மற்றும் கதாபாத்திரங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. 2005 இல் வெளிவந்த இப்புதினத்தின் படம் இதில் நடித்த ஹாலிவுட் நடிகர்கள் கெய்ரா நைட்டி மற்றும் மாத்தீவ் மெக்பாடியனை கௌரவித்தது.   


செல்வம்[தொகு]

  திருமணச் சந்தையில் பணமே முக்கிய பங்கு வகிக்கிறது நல்ல கணவர்களை தேடும் பெண்களுக்கு மட்டுமல்ல அது நல்ல மனைவியை விரும்பும் கணவர்களுக்கும் இது பொருந்தும். இதற்கு விக்ஹேம் வீட்டைவிட்டு ஓடிப்போய் ஜார்ஜியானா டார்சியை மணக்க முயன்றவரும் கர்னல் பிட்ஸ்வில்லியம் ஆவார். பணக்கார பெண்ணை திருமணம் செய்வது என்பது உயர்ந்த குடும்பத்துடன் ஏற்படும் தொடர்பு ஆகும். பிங்ளேயின் சகோதரிகளின் விருப்பம் அவர்களது சகோதரர் ஜார்ஜியானா டார்சியை மணம் புரிய வேண்டும் என்பதிலேயே இந்த எண்ணம் தெளிவாகிறது. இக்கதையின் திருமதி பேனட் அவர்கள் அடிக்கடி அவரது மகள்களிடம் பணக்காரரை உயர்ந்த குடியைச் சேர்ந்த வரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஊக்குவிக்கின்றார் பரம்பரை என்பது வம்சா வழியைச் சார்ந்தது ஆனால் அது இன்றியமையாதது கிடையாது அதேபோல் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே சொந்தமானது கிடையாது இக்கதையில் பேனட் குடும்பத்தைப் பொறுத்தவரை திரு காலின்ஸ் எலிசபெத்தை திருமணம் செய்வதன் மூலம் அவரது எதிர்காலத்தை உறுதி செய்வதுடன் திருமதி பேனட்டின் மறைவிற்கு பிறகு குடும்ப மதிப்பைப் பெற்றுக் கொள்கிறார் ஆனால் எலிசபெத் முற்றிலும் மறுத்துவிடுகிறார் ஏனெனில் பரம்பரை சட்டங்கள் ஆண்களுக்கு அனுகூலமாய் இருந்தது. காரணம் பெரும்பாலான பெண்கள் சுயமரியாதை மற்றும் சட்ட உரிமைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை பெற்றிருக்கவில்லை .அதன் விளைவு பெண்கள் பொருளாதாரத்தில் ஆண்களை மட்டுமே நம்பி இருந்தனர் அரிஸ்டோகிராட்ஸ் மற்றும் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள வகுப்பு மக்களிடம் திருமணம் என்பது பெண்களுக்கு அந்த ஆணின் வருமானம் மட்டுமே சார்ந்தது.. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகா.ப்பு பணம் சார்ந்ததாகவே இருந்தது .இக் கதையின் முதல் வரி கூறுவதும் இதுவே பொதுவாக சமுதாயத்தில் ஒரு பெண் நல்ல வாழ்க்கையை தேடுவது என்பது பணக்காரனை தேடுவது என்று பொருள்படும்.. [1]

References[தொகு]

  1. Austen, Jane (1813). Pride and Prejudice. பக். 3.