பெருமாள் தேவன் பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெருமாள் தேவன் பட்டி , தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிலிருந்து தெற்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிள்ளையார்குளம் ஊராட்சியில் உள்ளது. 750 வீடுகள் கொண்ட இக்கிராம ஆண்களில் 90% இந்திய இராணுவம் (முப்படைகள்) மற்றும் துணை இராணுவப்படைப் பிரிவுகளில் பணிபுரிவதால் பெருமாள்தேவன்பட்டி கிராமத்தை இராணுவ கிராமம் என்றும் குட்டி பஞ்சாப் என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது.[சான்று தேவை]

வரலாறு[தொகு]

இக்கிராமத்தின் பெருமாள் என்பவர் 1952ல் இந்திய இராணுவத்தில் சேர்ந்து மேஜர் அளவில் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர். 1962ல் விடுமுறையில் தனது சொந்த கிராமத்திற்கு வந்த பெருமாள், பெருமாள்தேவன்பட்டி கிராம இளைஞர்களுக்கு தனது இராணுப் பணியின் அனுபவங்களைக் குறித்து விளக்கினார். இராணுவப் பணியின் சிறப்பை உணர்ந்த பெருமாள்தேவன்பட்டி கிராம இளைஞர்கள் பலர் பத்தாம் வகுப்பு கல்வி முடித்தவுடன், தங்கள் கிராமத்திலே சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டு, படைத் துறையின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று இந்திய இராணுவப் பணியில் சேர்க்கின்றனர்.

தற்போது இக்கிராம இளைஞர்களில் 375 பேர் இந்திய இராணுவத்திலும் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை போன்ற துணை நிலை இராணுவப் படைகளில் பணிபுரிகின்றனர். மேலும் இக்கிராமத்தில் 522 முன்னாள் இராணுவத்தினர் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Every house in this village boasts of an armyman

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_தேவன்_பட்டி&oldid=2552765" இருந்து மீள்விக்கப்பட்டது