உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங் கூடு மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Euteleostomi
பெருங் கூடு மான்
தென்னாப்பிரிக்காவின் குருகர் தேசியப் பூங்காவில் ஆண் மான்
நமீபியாவின் எத்தோசியாவில் பெண் மான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. strepsiceros
இருசொற் பெயரீடு
Tragelaphus strepsiceros
(Pallas, 1766)
Subspecies
  • Tragelaphus strepsiceros chora
  • Tragelaphus strepsiceros cottoni
  • Tragelaphus strepsiceros strepsiceros
Ranges of the subspecies

     T. s. cottoni      T. s. chora      T. s. strepsiceros

வேறு பெயர்கள்

Strepsiceros chora
Strepsiceros cottoni
Strepsiceros strepsiceros
Strepsiceros zambesiensis

பெருங் கூடு மான் ( Greater kudu ) என்பது கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா முழுவதும் காணப்படும் ஒரு மரக்காடு மறிமான் ஆகும். இத்தகைய பரவலான நிலப்பரப்பில் வாழுகின்ற போதிலும், வாழிடங்கள் குறைந்து வருதல், காடழிப்பு, வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் பெரும்பாலான பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது . [2] பெரிய கூடு என்பது பொதுவாக கூடு என அழைக்கப்படும் இரண்டு இனங்களில் ஒன்றாகும், மற்றொன்று சிறிய கூடு, டி. இம்பர்பிஸ் .

சொற்பிறப்பியல்

[தொகு]

கூடு ( / kuːd uː / koo-DOO ), அல்லது koodoo என்பது இந்த விலங்கின் பெயராகும். இதன் விலங்கியல் பெயரான Tragelaphus strepsiceros என்பதில் உள்ள Trag- (கிரேக்கம்) என்பது ஆட்டையும், elaphos (கிரேக்கம்) என்பது மானையும் குறிக்கிறது. Strepho (கிரேக்கம்) என்றால் "முறுக்கு" என்றும், strepsis என்றால் "முறுக்கல்" என்றும் பொருளாகும். Keras (கிரேக்கம்) என்பது விலங்கின் கொம்பைக் குறிக்கிறது. [3]

உடலமைப்பு

[தொகு]

பெருங் கூடு மான்கள் நீண்ட கால்கள் கொண்டும், குறுகிய உடலைக் கொண்டதாக உள்ளது. இவற்றின் உடல் நிறம் வெளுத்த சாம்பல் நிறத்தில் இருக்கும். இவற்றின் உடலின் பக்கங்களில் 4 முதல் 12 வெள்ளை நிறப்பட்டைகள் முதுகிலிருந்து அடி வயிறு வரை செங்குத்தாக காணப்படுகின்றன. இந்தப் பட்டைகள் இவை வாழும் இடத்திற்கு ஏற்ப மாறுபடும். இவற்றின் தலையானது உடலின் மற்ற பகுதிகளை விட இருண்ட நிறத்தில் இருக்கும். மேலும் கண்களுக்கு இடையில் ஒரு சிறிய வெள்ளை வெள்ளை நிறப் பட்டை இருக்கிறது. ஆண் பெருங் கூடு மான்கள் மாடுகளை விட மிகப் பெரியதாக இருக்கும். மேலும் அதிக குரல் எழுப்பக்கூடியனவாக இருக்கும். [4] ஆண் பெருங்கூடு மானிற்கு திருகு கொம்புகள் உண்டு. சுமார் இரண்டரை முறுக்குகள் கொண்டவையாக இருக்கும். இக் கொம்புகள் நேராக்கப்படுமானால், சராசரியாக 120 செமீ (47 அங்குலம்) நீளத்தை எட்டும். அதிகபட்சமாக 187.64 செமீ (73.87 அங்குலம்) பதிவாகி உள்ளது. [5] சில சமயம் பெண் மானிற்கு கொம்புகள் வளர்கின்றன. ஆனால் இக் கொம்புகள் நீளமற்றவை. இந்த மான்கள் ஓடும் பொழுது தன் கழுத்தைச் சாய்த்துக் கொம்புகளை முதுகில் படும்படி வைத்துக் கொள்ளும். ஆண் மான்களுக்கு 6 – 12 மாதங்கள் வரை கொம்புகள் வளர ஆரம்பிக்காது. கொம்புகள் சுமார் இரண்டு வயதில் முதல் திருகை அடைகின்றன. மேலும் அவை 6 வயது வரை முழு இரண்டரை சுழற்சியை அடைகின்றன. அரிதாக 3 முழு திருகைக் கொண்டிருக்கலாம்.

மான் வகைகளில் இது மிகவும் கம்பீரமானது ஒன்றாகும். ஆண் மானின் எடை 190–270 கிலோ (420–600 பவுண்டுகள்), அதிகபட்சம் 315 கிலோ (694 பவுண்டுகள்) வரை எட்டும். இதன் உயரமானது நிற்கும்போது தோள்வரை 160 செமீ (63 அங்குலம்) வரை இருக்கும். பெருங் கூடுவின் காதுகள் பெரியதாகவும் வட்டமாகவும் இருக்கும். பெண் மான்களின் எடை 120–210 கிலோ (260–460 எல்பி) இருக்கும். நிற்கும்போது தோள் வரையான உயரம் 100 செமீ (39 அங்குலம்) இருக்கும். பெண் மான்களுக்கு பொதுவாக கொம்புகள் இருப்பதில்லை. தலை உள்ளிட்ட உடலின் நீளம் 185–245 செமீ (6.07–8.04 அடி) ஆகும். அதனுடன் வாலின் நீளமான 30–55 செமீ (12–22 அங்குலம்) அய் சேர்க்கலாம். [3]

துணை இனங்கள்

[தொகு]

இந்த மான்களில் முன்னர் நான்கு துணையினங்கள் விவரிக்கப்பட்டன. ஆனால் அண்மையில் ஒன்று முதல் மூன்று கிளையினங்கள் மட்டுமே அவற்றின் நிறம், கோடுகளின் எண்ணிக்கை, கொம்பு நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன: [6]

  • டி.எஸ். ஸ்ட்ரெப்சிசெரோஸ் - தெற்கு கென்யாவிலிருந்து நமீபியா, போட்ஸ்வானா மற்றும் தென்னாப்பிரிக்கா வரையிலான எல்லையில் தெற்குப் பகுதிகள்
  • டி.எஸ். சோரா - வடகிழக்கு ஆப்பிரிக்கா வட கென்யாவிலிருந்து எத்தியோப்பியா வழியாக கிழக்கு சூடான், சோமாலியா மற்றும் எரித்திரியா வரை
  • டி.எஸ். கோட்டோனி - சாட் மற்றும் மேற்கு சூடான்

வேட்டையாடுதல்

[தொகு]
ஈக்களால் சூழப்பட்ட பெண் மான்

பெருங் கூடுவை இயற்கையாக வேட்டையாடுபவையாக பொதுவாக சிங்கங்கள், புள்ளிக் கழுதைப்புலிகள், ஆப்பிரிக்க காட்டு நாய்கள் போன்றவை உள்ளன. சிவிங்கிப்புலிகள் மற்றும் சிறுத்தைகள் அதிகமான கூடு மான்களை வேட்டையாடுகின்றன என்றாலும், அவை பொதுவாக முழுமையாக வளர்ந்த ஆண் மான்களை விட பெண் மான்கள் மற்றும் குட்டிகளை குறிவைக்கின்றன. நைல் முதலைகள் அதிக கூடு மான்களை இரையாக்கிய பல நிகழ்வுகள் உள்ளன. [7] [8] மந்தை வேட்டையாடிகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால் ஒரு வயது வந்த மான் (பொதுவாக பெண் மான்) மந்தையின் மற்ற பகுதிகளை எச்சரிக்க ஒரு எச்சரிக்கை ஒலியை எழுப்பும். பாறைகள் நிறைந்த குன்றுகள் மற்றும் மலைகளில் மிகவும் வேகமானதாக இருந்தாலும், பெருங் கூடு, திறந்த நிலப்பரப்பில் இதை வேட்டையிடும் முக்கிய வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்க போதுமான வேகம் இல்லாததால் இது புதர்கள் மற்றும் சிறிய மரங்கள் மீது குதித்து பின்தொடர்பவர்களை திணறச் செய்கிறது. [2] பெருங் கூடுகள் பார்வைப் புலன் மந்தமே. ஆனால் மோப்ப ஆற்றலும், கேட்டும் திறனும் நன்கு அமைந்துள்ளன. இவை வேட்டையாடிகள் நெருங்கி வருவதை எச்சரிக்கயான உணர உதவியாக உள்ளன. [3] இவற்றின் நிறம் மற்றும் அடையாளங்கள் கூடுவை உருமறைப்பால் பாதுகாக்கின்றன. எச்சரிக்கையாக இருக்கும்போது, இவை பொதுவாக அசையாமல் நிற்கின்றன. அப்போது இவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம். 

நடத்தை

[தொகு]

பெருங் கூடு மான்கள் காடுகளில் 7 முதல் 8 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. வளர்ப்படங்களில் 23 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. இவை 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இருக்கின்றன. பெண் மான்கள் பொதுவாக தங்கள் சந்ததியினருடன் 6-10 பேர் கொண்ட சிறிய மந்தையக உள்ளன. என்றாலும் சில நேரங்களில் அவை 20 மான்கள் என்ற எண்ணிக்கை வரை ஒரு மந்தையாக இருக்கலாம். ஆண் மான்கள் தனியே வாழக்கூடியன. இனச்சேர்க்கை காலத்தில் (தென்னாப்பிரிக்காவில் ஏப்ரல்-மே) அதுவரை தனித்திருந்த ஆண் மான்கள் பெண் மற்றும் கன்றுகளின் கூட்டத்தில் (பொதுவாக ஒரு குழுவிற்கு 6-10 நபர்கள்) இணையும்.


ஆண் கூடு மான்கள் பொதுவாக உடல் ரீதியாக ஒன்றோரு ஒன்று ஆக்ரோஷமாக மோதுவதில்லை. ஆனால் ஆண்களுக்கு இடையே சில சமயங்களில் மோதல் ஏற்படலாம், குறிப்பாக இரண்டும் ஒரே அளவு மற்றும் உயரமானதாக இருக்கும்போது. ஆண் கூடுகள் ஒன்றோடொன்று கொம்புகள் மூலமாக சண்டையிட்டு, ஒன்றையொன்று தள்ளுவதன் மூலம் சண்டையிடுகின்றன.[9] அரிதான சூழ்நிலைகளில், இரண்டு ஆண் மான்களின் கொம்புகளும் மாட்டிக் கொண்டு அவை தங்களை விடுவித்துக் கொள்ள முடியாமல் போகலாம். இதனால் இரண்டு விலங்குகளும் உணவு நீர் அருந்த முடியாமல் இறந்துவிடும்.

இனப்பெருக்கம்

[தொகு]

பெருங் கூடு மான்கள் ஒன்று முதல் மூன்று வயதில் பாலியல் முதிர்ச்சியை அடைகின்றன. பெண் மான் ஏழு மாதங்கள் கருவை சுமந்து ஒரு குட்டியை ஈணும். குட்டி சுமார் ஆறு மாதங்கள் பால் குடிக்கும். இனச்சேர்க்கை பருவம் மழைக்காலத்தின் முடிவில் ஏற்படுகிறது, இது பிராந்தியம் மற்றும் காலநிலைக்கு ஏற்ப சிறிது மாறுபாடு இருக்கலாம். இனச்சேர்க்கைக்கு முன், ஆண் பெண்ணின் முன் நின்று, அடிக்கடி கழுத்தை தடவி அதைக் கவரும். பெண் தன்னுடன் பழகுவதற்கு அனுமதிக்கும் வரை, ஆண், பெண்ணை பின்தொடர்கிறது. பெண் மானின் கர்ப காலம் சுமார் 240 நாட்கள் (அல்லது எட்டு மாதங்கள்) ஆகும்.[2] பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் (ஆஸ்திரேலிய கோடையின் பிற்பகுதி) இடையே, புல் மிக அதிகமாக இருக்கும் காலத்தில் கன்று ஈனும்.[10]

பெரு கூடு மான்கள் ஒரு குட்டியை ஈணும். அரிதாக இரண்டு குட்டிகளை ஈணுவதும் உண்டு. புதிதாகப் பிறந்த குட்டி சுமார் 4 முதல் 5 வாரங்கள் வரை தாவரங்களில் மறைந்திருக்கும் (வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்க). 4 அல்லது 5 வாரங்களுக்குப் பிறகு, குட்டிகள் அதன் தாயுடன் அவ்வப்போது செல்லும்; பின்னர் 3 முதல் 4 மாதங்கள் வரை, அது எல்லா நேரங்களிலும் தாயுடன் சுற்றும். குட்டிகள் ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதன் தாயிடம் இருந்து முற்றிலும் விடுபட்டு இருக்கும். பெரும்பாலான பிறப்புகள் ஈரமிக்க பருவத்தில் (ஜனவரி முதல் மார்ச் வரை) நிகழ்கின்றன.[3] முதிர்ச்சியின் அடிப்படையில், பெண் பெருங் கூடுகள் 15-21 மாதங்களில் பாலியல் முதிர்ச்சியை அடைகின்றன. ஆண்கள் மான்கள் 21-24 மாதங்களில் முதிர்ச்சி அடைகிறன.

குறிப்புகள்

[தொகு]
  1. IUCN SSC Antelope Specialist Group (2020). "Tragelaphus strepsiceros". IUCN Red List of Threatened Species 2020: e.T22054A166487759. doi:10.2305/IUCN.UK.2020-1.RLTS.T22054A166487759.en. https://www.iucnredlist.org/species/22054/166487759. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 2.2 Oddie, Bill (1994). Wildlife Fact File. IMP Publishing Ltd. pp. Group 1, Card 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0951856634.
  3. 3.0 3.1 3.2 3.3 Brent Huffman. "Greater Kudu. An Ultimate Ungulate Fact Sheet".
  4. "Kudu - East Cape". Noorsveld Safaris (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.
  5. "Kudu | African Wildlife Foundation". www.awf.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-29.
  6. Nersting, L. G.; Arctander, P. (2001). "Phylogeography and conservation of impala and greater kudu". Molecular Ecology 10 (3): 711–719. doi:10.1046/j.1365-294x.2001.01205.x. பப்மெட்:11298982. https://archive.org/details/sim_molecular-ecology_2001-03_10_3/page/711. 
  7. Mills, M. G. L., & Biggs, H. C. (1993).
  8. Cronje, H. P.; Reilly, B. K.; MacFadyen, I. D. (2002). "Natural mortality among four common ungulate species on Letaba Ranch, Limpopo Province, South Africa". Koedoe 45 (1): 79–86. doi:10.4102/koedoe.v45i1.12. 
  9. "Information About the Greater Kudu". The Nature Conservancy. Archived from the original on 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2015-04-29.
  10. "Toronto Zoo | Animals". www.torontozoo.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்_கூடு_மான்&oldid=3631510" இலிருந்து மீள்விக்கப்பட்டது