பெருங்கொன்றை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்ட்டோபோரம் டெரோகார்பம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மேக்னோலியோஃபைடா
(பூக்கும் தாவரம்)
வகுப்பு: மேக்னோலியோப்சிடா
வரிசை: ஃபேபேல்சு
குடும்பம்: பபேசியே
துணைக்குடும்பம்: Caesalpinioideae
பேரினம்: பெல்ட்டோபோரம்
இனம்: P. pterocarpum
இருசொற் பெயரீடு
Peltophorum pterocarpum
(DC.) K. Heyne
பெருங்கொன்றை பூ, மொட்டுகள், இலைகள், பழங்களுடன் அணில்

பெருங்கொன்றை அல்லது இயல்வாகை (Peltophorum pterocarpum), ஒரு அழகூட்டும் மரமாகும். இது காப்பர் பாட் (Copperpod), யெலோ ஃபிளேம் (Yellow Flame) என்ற பெயர்களால் அறியப்படுகிறது[1][2][3]. இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்சு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைத் தன் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது இத்தாவரம் என்று அறியப்பட்டுள்ளது[4]. இவை நன்கு பெரிதாக வளர்ந்து நிழல் தரும் என்பதால் சாலையோரம் நடுவதற்காக ஆங்கிலேயர்களால் பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அயல் மரம் ஆகும். [5]

நோக்குக் குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்கொன்றை&oldid=3653977" இருந்து மீள்விக்கப்பட்டது