உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்குரங்கினத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருங்குரங்கினத் திட்டம்
உருவாக்கம்1993
நிறுவனர்பீட்டர் சிங்கர் மற்றும் பாவோலா கவாலியேரி
நோக்கம்விலங்குரிமை
வலைத்தளம்www.projetogap.org/en/

பெருங்குரங்கினத் திட்டம் (The Great Ape Project அல்லது GAP) என்பது பொனொபோக்கள், சிம்பன்சிகள், கொரில்லாக்கள் மற்றும் ஒராங்குட்டான்கள் ஆகிய மனிதரல்லாப் பெருங்குரங்குகளுக்கு அடிப்படை சட்ட உரிமைகளை வழங்குதலை முன்னெடுக்கும் ஒரு சர்வதேச அமைப்பாகும். 1993-ம் ஆண்டு நிறுவப்பட்டு முதனியியலாளர்கள், மானுடவியலாளர்கள், நெறிமுறை வல்லுநர்கள் மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த அறிஞர்களைக் கொண்ட இவ்வமைப்பானது ஐக்கிய நாடுகளின் பெருங்குரங்கின உரிமைப் பிரகடனத்தை ஆதரித்து அதனடிப்படையில் இச்செயற்பாட்டினை முன்னெடுக்கின்றது.

2005-ல் பெய்ஜிங் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் 2 வயது சிம்பன்சி குட்டி.

வாழும் உரிமை, தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாத்தல், மற்றும் சித்திரவதையிலிருந்து விடுதலை ஆகியன இவ்வமைப்பு பரிந்துரைக்கும் உரிமைகளாகும். கூடுதலாக இந்த அமைப்பு ஒரு எண்ணிக்கைக் கணக்கெடுப்புத் திட்டத்தின் மூலம் ஐக்கிய அமெரிக்காவில் தனிப்பட்ட பெருங்குரங்கு வகைகளின் செயற்பாட்டையும் கண்காணிக்கிறது. இவ்வுரிமைகள் நிறுவப்பட்டதும், சிறைபிடிக்கப்பட்டுள்ள பெருங்குரங்கு வகை விலங்குகளை அனைத்தையும் விடுவிக்க இவ்வமைப்பு முனையும். ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் தற்போது 3,100 பெருங்குரங்கு வகை விலங்குகள் மனிதர்கள் பிடியில் வைக்கப்பட்டுள்ளன, இதில் 1,280 குரங்குகள் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக் கூடங்களில் உள்ளன.

இவற்றையும் காண்க

[தொகு]

References

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • The Great Ape Project: Equality beyond humanity. 1993. Editors, Peter Singer and P. Cavalieri., Fourth Estate publishing, லண்டன், இங்கிலாந்து. Pp. 312.
  • Poala Cavalieri. 2015. "The Meaning of the Great Ape Project". Politics and Animals. 1 (1): 16-34. open access publication - free to read
  • Peter Singer. 1993. Practical Ethics. 2nd ed. Cambridge University Press, நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா, Pp. 395.
  • Peter Singer. 2002. Animal Liberation. HarperCollins, நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா, Pp. 324.

வெளியிணைப்புகள்

[தொகு]