பெருங்குடி, மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெருங்குடி, மதுரை மாவட்டத்தின் தெற்கு வருவாய் வட்டத்தில் அமைந்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த கிராமம் ஆகும். பெருங்குடி கிராமம், மதுரை நகரத்திற்கு தெற்கில், 12 கிமீ தொலைவில், மதுரை வானூர்தி நிலையம் செல்லும் வழியில், மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. பெருங்குடி கிராமம், திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)க்கும்; விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1][2]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

973.75 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பெருங்குடி கிராமத்தின் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2,397 வீடுகள் உடைய பெருங்குடி கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 9,081 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 1,824 (20.09 %) ஆக உள்ளனர். 4,122 தொழிலாளர்கள் இக்கிராமத்தில் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.99% ஆகும். மக்கள்தொகையில் ஆறு வயதிற்குட்பட்டோர் 1,104 ஆக உள்ளனர். இக்கிராமாத்தில் தமிழ், சௌராட்டிரம் மற்றும் தெலுங்கு மொழிகள் பேசப்படுகிறது. [3]

அவனியாபுரம் எனும் ஊர் பெருங்குடி கிராமத்திற்கு அருகில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625022 ஆகும்.

அருகில் உள்ள நகரங்களும், ஊர்களும்[தொகு]

அருகில் உள்ள நிறுவனங்கள்[தொகு]

  1. இந்திய அஞ்சல் பயிற்சி நிறுவனம்
  2. சரஸ்வதி நாராயணன் கலை & அறிவியல் கல்லூரி
  3. மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Perungudi village, Madurai district
  2. Perungudi village
  3. Perungudi Population - Madurai, Tamil Nadu

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்குடி,_மதுரை&oldid=2516170" இருந்து மீள்விக்கப்பட்டது