பெருங்குடி, திருச்சிராப்பள்ளி
பெருங்குடி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°49′25″N 78°38′15″E / 10.823648°N 78.63739°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஏற்றம் | 77 m (253 ft) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
பெருங்குடி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், ஆண்டநல்லூர் வட்டத்துக்கு உட்பட்ட, உள்ள ஒரு சிற்றூராகும். மல்லியம்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊர் திருச்சிராப்பள்ளியிலிருந்து, வயலூர் செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவிலும், ஆண்டநல்லூரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில், சோமரசம் பேட்டைக்கு அருகில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]சோழர் காலக் கல்வெட்டுகளில் இந்த ஊரானது பெருமுடி, திருப்பெருமுடி என்று அழைக்கப்பட்டுள்ளது. அது இப்போது மருவி பெருங்குடி என்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் இந்த ஊரில் உள்ள சிவன் பெருமுடி பரமேசுவரனார் என்று அழைக்கப்படுகிறார்.[1] 13 ஆம் நூற்றாண்டில் போசள மன்னன் வீர இராமநாதன் ஆட்சிக் காலத்தில் பெருங்குடியானது ஜகதேகவீரச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. அவன் காலக் கல்வெட்டுகளால் அறியப்படுகிறது.[2]
போக்குவரத்து
[தொகு]திருச்சிராப்பள்ளி கோட்டை தொடருந்து நிலையமும், திருச்சிராப்பள்ளி தொடருந்து நிலையமும் அருகிலேயே உள்ளன.
கல்வி
[தொகு]- காவேரி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- காமாட்சி பலதொழிநுட்பக் கல்லூரி
பெருங்குடிக்கு அருகே உள்ள பள்ளிகள்
[தொகு]- பாரதி உயர்நிலைப்பள்ளி
- எஸ். எஸ். எம். எஸ்., அரும்புகழ் நகர்
- புனித கேப்ரியல்ஸ் எம். எஸ்.
- ஜி. எச். எஸ்., திருச்செந்துறை
கோயில்
[தொகு]இந்த ஊரில் சோழர் காலத்தில் கட்டபட்ட பழமையான அகத்தீசுவரம் கோயில் என்னும் சிவன் கோயில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சி.வெற்றிவேல் (2020-04-01). "பிணி போக்கும் பெருங்குடி அகத்தீஸ்வரர்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ "பார்வையிழப்பின் மூவருலா". 2024-05-05.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)