பெருங்களூர்
பெருங்களூர் | |
|---|---|
பெருங்களூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 10°29′15″N 78°56′04″E / 10.4875°N 78.9345°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| ஏற்றம் | 99.58 m (326.71 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 6,474 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| • பேச்சு | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 622203 |
| புறநகர்ப் பகுதிகள் | வைத்தூர், வண்ணாரப்பட்டி, அண்டக்குளம் |
| மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
| சட்டமன்றத் தொகுதி | புதுக்கோட்டை |
பெருங்களூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 99.58 மீ. உயரத்தில் (10°29′15″N 78°56′04″E / 10.4875°N 78.9345°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பெருங்களூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பெருங்களூர் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 6,474 ஆகும். இதில் 3,169 பேர் ஆண்கள் மற்றும் 3,305 பேர் பெண்கள் ஆவர்.[1]
பழைமை தொடர்பு
[தொகு]சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பெருங்கற்காலத்திற்கு முந்தைய இரும்புக் காலத்தில் பெருங்களூர் பகுதியில் இரும்பு உருக்காலை இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.[2]
சமயம்
[தொகு]இந்துக் கோயில்கள்
[தொகு]தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் வம்சோத்தாரகர் கோயில் மற்றும் உருமநாதர் கோயில் ஆகிய இரண்டு இந்துக் கோயில்கள் பெருங்களூர் கிராமத்தில் உள்ளன.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Perungalur Village Population - Pudukkottai - Pudukkottai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2024-12-16.
- ↑ "2000 வருடங்களுக்கு முந்தைய உருக்கு கழிவுகள்... விரிந்த பனை ஓலையில் கொட்டிய தடயங்கள் கண்டுபிடிப்பு!". nakkheeran (in ஆங்கிலம்). 2022-07-11. Retrieved 2024-12-16.
- ↑ "Arulmigu Vamsotharagar Temple, Perungalur, Pudukkottai Taluk - 622203, Pudukkottai District [TM025512].,Vamsoththaragar,Vamsoththaragar,Mangalanayagi". hrce.tn.gov.in. Retrieved 2024-12-16.
- ↑ "Arulmigu Urumanathar Temple, Perungalur, Pudukkotttai Taluk - 622203, Pudukkottai District [TM025534].,urumanathar,urumanathar,Urmachiamman". hrce.tn.gov.in. Retrieved 2024-12-16.