பெருங்கதைப் பெயரடைவு
பெருங்கதை நூலில் வரும் கதைமாந்தர் பெயர்களையும், நாடு, நகரம், மலை முதலான இடப்பெயர்களையும், யாழ், யானை முதலான பொருள்களுக்கு இட்டு வழங்கப்பட்ட பெயர்களையும், அவற்றைப் பற்றிய சிறு குறிப்புகளையும் இங்குக் காணலாம்.
பெயரடைவு
[தொகு]அச்சுவப்பெருமான் – கேகய நாட்டு அரசன்
அடவி - தருசகனின் பகையரசன்
அநங்கவிலாசனி- நீலவேகனின் மகள்,நரவாணனின் மனைவி
அயோத்தியரசன் - தருசகனின் பகையரசன்
அரிசிகன்- உருமண்ணுவாவின் புதல்வன்
அரிமான் - தருசகனின் பகையரசன்
அருஞ்சுகன் - உதயணனின் கோடபதி யாழைக் கொண்டு வந்து உதயணனிடம் கொடுத்தவன்.இவன் வேதம் ஓதும் அந்தணன். யாழிசைப் பயின்றவன்
அவந்தி – பிரச்சோதனன் (வாசவதத்தையின் தந்தை) ஆண்ட நாடு
ஆதித்தியதருமன்- உதயணனுடைய போர்வீரன்
ஆரியை- பதுமாபதியின் தோழி பந்தாட்டத்தில் வல்லவள்
ஆருணி – பாஞ்சால நாட்டு அரசன்
ஆலங்கானம் – விபுல மலைச் சாரலில் உள்ள இடம்
இசைச்சன் – உதயணனின் பார்ப்பனத் தோழன்
இடபகன்- கடகம் என்ற ஊரில் வாழ்ந்தவன்
இடவகன் – உதயணனின் அமைச்சன்
இராசகிரியம் – மகதநாட்டின் தலைநகர்
இராசனை- பதுமையின் தோழி உருமண்ணுவாவின் மனைவி
இலாமயன் – வித்தைநில் வல்ல முனிவன். இவன் வனங்கூடத் தீயில் எரிந்துவிட்டது
உச்சையினி (உஞ்சை) – அவந்தி நாட்டுத் தலைநகர்
உதயணன் – பெருங்கதை நூலின் காப்பியத் தலைவன்
உதயையோடை – பதுமாபதியின் தாய்
உருமண்ணுவா – உதயணனின் அமைச்சன்
எலிச்செவி - தருசகனின் பகையரசன்
ஏனாதி- உதயணனின் பெயர் பொறிக்கப் பட்ட மோதிரம் இதை உருமண்ணுவாவிற்கு அணிவித்தான்
ஐராவதி - பதுமாபதியின் தோழி
கடகம்- சாலு என்னும் நாட்டில் உள்ள ஊர்
கடகன் – உதயணனின் தம்பி
கருப்பாசம் – காட்டாறு, சயந்தி நகரிலிருந்து இராசகிரியம் செல்லும் வழியில் உள்ளது
கலிங்கசேனை- கௌசாம்பி நகரில் கல்வி கேள்விகளில் சிறந்த 2,500 கணிகையர்எளில் சிறந்தவள் மதனமஞ்சிகையின் தாய்
காகதுண்டகர் – மந்திரவாதி போல் நடிக்கும் ஒரு பெரியார்.. இறந்த வாசவதத்தையைப் பெறலாம் என்றவர்
காசிராசன் – பதுமாபதியின் தந்தை
காஞ்சுகியர் - பதுமாபதியின் தோழி
காளவனம் – புன்றாளகம் – இராசகிரியம் வழியில் உள்ள காடு
குஞ்சரச்சேரி – உஞ்சை நகரின் ஒர் பகுதி, உதயணன் தங்க வழங்கப்பட்ட இடம்
கும்பன் – பாஞ்சால ராசனின் நண்பன்
கேகயம் – அச்சுவப்பெருமான் ஆட்சி செய்த நாடு
கோசிகன் – சாங்கியத்தாய்க்கு நல்ல தீர்ப்புக் கூறிய சேனைக் கணிமகன்
கோடபதி – யாழின் பெயர். இந்திரன் பிரமசுந்தர முனிவருக்கும், முனிவர் உதயணனுக்கும் வழங்கியது
கோபாலகன் – பிரச்சோதன மன்னரின் மகன்
கோமுகன் இருவர்- இடவகனின் புதல்வன், பதுமாபதிக்கும் உதயணனுக்கும் பிறந்த புதல்வன்
கௌசாம்பி – வத்தவ நாட்டின் தலைநகரம்
சகோரம் – தீயநிமித்தம் காட்டும் பறவை
சங்கரன் - தருசகனின் பகையரசன்
சண்பை – அங்கநாட்டுத் தலைநகர்,
சத்தியகாயன் – தருசகனின் அமைச்சன்
சத்தியகாயன்- போரில் வீரமரணம் அடைந்தவன்
சதானிகன் – உதயணனின் தந்தை
சம்புத்தீவு – சம்புத்தீவு என்றும் உலகத்தை வழங்கினர்.
சயந்தி – உதயணனின் ஆட்சிக்கு உட்பட்ட பெரிய நகரம்
சாங்கியத்தாய் - உதயணனால் காப்பாற்றப் பட்டவள், வாசவதத்தையின் செவிலித் தாய்
சாண்டியன் – உதயணன் தன் தந்தையின் பெயர் என்று ஐராவதியிடம் கூறினான்
சாதகன் – யூகிக்கு உதயணனை மீட்க உதவியவன்
சாலங்காயன் – பிரச்சோதன மன்னரின் அமைச்சன்
சாலி- இடபகனின் மனைவி
சிவமதி – தருசகனின் தாய்
சிவேதன் - பிரச்சோதன மன்னரின் அமைச்சன்
சீதரம்- நரவாணன் தங்கிய நகரம்
சீதரன் – ஆலங்கானத்தில் தவம் செய்த முனிவன்
சுதர்சன மலை – இமயமலை
சுமித்திரன்- நீலவேகன் மகளின் கனவிற்கு பயன் கூறிய முனிவர்
சூவ்ருதர் – உதயணனும் மிருகாபதியும் இருக்கும் இடத்தைக் கூறிய முனிவன்
சேடகன் – உதயணனின் தாய்வழிப் பாட்டன்
சேதிநாடு – சேடகன் ஆட்சி செய்த நாடு
சோதவன் – உதயணனுக்குப் புத்திரனாக சௌதர்மேந்திரன் கட்டளைப்படி வந்த முனிவன்
சௌதர்மேந்திரன்- விண்ணுலகத்தின் தலைவன்
தர்மவீரர்- தவத்தால் சித்தி பெற்ற சாரணர்களின் தலைவர்
தருசகன் – மகதநாட்டின் அரசன்
தருமச்சுருதி- உதயணனுக்கு சினதருமங்களை உபதேசித்த முனிவன்
தருமதத்தன் – தருசகனின் அமைச்சன்
தவந்தகன்- வயந்தகனின் புதல்வன்
தனமித்திரன் – உதயணன் தாத்தா சேடகனின் மூத்த மகன்
தாரகாரி — தருசகனின் அமைச்சன்
திலகசேனை- பரதகனின் தங்கை யூகியின் மனைவி
தெய்வயானை – உதயணன் யாழிசையால் பெற்ற யானை
நஞ்சுகன் – குபேரனின் இயக்கத் தொண்டன், உதயணனுக்குத் தண்ணீர் தந்து உதவியவன்
நரவாணதத்தன்- உதயணனின் புதல்வன்
நருமதை உதயணன் மாளிகையில் ஒரு நாள் தங்கிச் சென்றவள் இவள் கணிகையின் மகள்
நளகிரி – பிரச்சோதன மன்னனுடைய பட்டத்து யானை, உதயணனால் அடக்கப் பட்டது
நாகதத்தை- நீலவேகனின் மனைவி
நீலகேசி- காசிராசன் மகள் விரிசிகையின் தாய்
நீலவேகன்- கந்தருவபுரத்தின் அரசன்
பத்திராபதி – உதயணனைச் சுமந்து வந்த பெண்யானை
பதுமகாரிகை – பிரச்சோதன மன்னனின் மனைவி, வாசவதத்தையின் தாய்
பதுமை (அ) பதுமாவதி – உதயணனின் இரண்டாவது மனைவி
பரதகன்- பிரச்சோதன ராசனுடைய அமைச்சன்
பரமசுந்தரி – பிரமசுந்தர முனிவரின் மனைவி
பருப்பதம் – நருமதை ஆற்றின் கரையிலுள்ள மலை. இதில் குபேரன் தன் ஒனபது மனைவியருடன் மகிழ்ந்திருந்தான்
பாகீரதி – தெய்வாவேசம் கொண்டவள் போல நடித்தவள்
பாஞ்சாலம் – உதயணன் இல்லாத போது கௌசாம்பியைக் கைப்பற்றிய ஆருணி அரசன் ஆண்ட நாடு
பாலகன் – பிரச்சோதனனின் மகன்
பாலகுமரன் – பிரச்சோதனனின் மகன்
பிங்கலன் – உதயணனின் தம்பி
பிரச்சோதனன் – அவந்தி நாட்டு அரசன், உதயணனைச் சிறைப்படுத்தியவன்
பிரமசுந்தர முனிவர் –உதயணனை வளர்த்து கலைகள் பல கற்பித்தவர், யூகியின் தந்தை
புட்பகம் – உதயணனின் ஆட்சிக்கு உட்பட்ட நாடு இந்நாடு உதயணனால் இடவகனுக்கு கொடுக்கப் பட்டது
புண்டரநகரம்- யூகி தத்தை முதலியோர் தங்கிய இடம்
புன்றாளகம் – சயந்தியிலிருந்து இராசகிரியம் செல்லும் வழியில் உள்ள நாடு
பூரணகுண்டலன் – பாஞ்சால ராசனின் அமைச்சன்
மதனமஞ்சிகை- கலிங்கசேனையின் மகள் நரவாணதத்தனின் மனைவி
மதுகாம்பீரம்- கௌசாம்பியின் புறத்தே உள்ள வனம்
மந்தரவரசன்- வெள்ளியங்கிரியின் அரசன் விரிசிகையின் தந்தை
மருபூதி- யூகியின் புதல்வன்
மல்லன் - தருசகனின் பகையரசன்
மாகாள வனம் – உச்சைனியைச் சார்ந்த மிகப்பெரிய நகரம், இதை மகாகாள வனம் என்றும் கூறுவர். யூகி உதயணனை மீட்கச் சென்ற போது இங்கு தான் முதலில் தங்கினான்.
மாணகன் – உதயணன் தன் பெயர் என்று ஐராவதியிடம் கூறினான்
மானசவேகன்- வித்தியாதர நகரத்தின் அரசன்.
மானனீகை- கோசலராசன் மகள், உதயணன் மூன்றாவது மனைவி
மித்திரகாமன் – சண்பை நகரத்து வணிகன்
மிருகாபதி – உதயணனின் தாய்
மிலைச்சன் - தருசகனின் பகையரசன்
முனையூர்- உதயணன் இடவகனுக்கு அளித்த தலைநகர்
யாப்பி- சாலங்காயனின் தங்கை யூகியின் மனைவி
யாப்பியாயினி – பதுமாபதியின் தோழி
யூகி – உதயணனின் உயிர் நண்பன்
வசுந்தரி கோசல தேசத்து பெருந்தேவி
வத்தவ நாடு - உதயணன் ஆட்சி புரிந்த நாடு
வயந்தகன் – உதயணனின் அமைச்சன்
வயவன் – தீய நிமித்தம் காட்டும் பறவை
வராகன் – உதயணன் வாசவத்தையோடு யானை மேலேறி வந்த போது தடுத்த வீரன் தத்தையைக் காப்பவன்
வருடகாரன் — தருசகனின் அமைச்சன்
வாசவதத்தை – உதயணனின் முதல் மனைவி
விக்கிரன் – உதயணனின் தாய் மாமன்
விச்சுவலேகை- வாசவதத்தையின் தோழி பந்தாட்டத்தில் வல்லவள்
விசயவரன் – உருமண்ணுவா அமைச்சனின் தந்தைக்குத் தோழன்
விசயார்த்தம்- சீதரம் என்னும் நகரத்தைச் சார்ந்த மலை
விண்ணுத்தராயன்- யூகிக்கு மெய்காப்பாளனாக உதயணன் அனுப்பினான்
விபுலமலை – உதயணன் பிறந்து வளர்ந்த இடம்,
விரிசிகன் – தருசகனின் பகையரசன்
விரிசிகை – அரசமுனிவன் ஒருவனின் மகள். உதயணனின் நான்காவது மனைவி
வேகவதி- மானசவேகனின் தங்கை நரவாணனின் மனைவி
வேசாலி - தருசகனின் பகையரசன்
வைசாலி – உதயணன் முதலில் தாய் மாமன் ஆசைப்படி ஆட்சி புரிந்த நாடு
வையாக்கிரம்- யூகிக்கு உதயணன் கொடுத்த தேர்
மேற்கோள் கருவிநூல்
[தொகு]- கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை, பகுதி 1, 2, 3, 4 , உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம் பதிப்பு, பெசண்ட் நகர், சென்னை 90 - பதிப்பு, ஆண்டு 2000.