பெருக்கஞ்சீலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருக்கஞ்சீலா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. forsteri
இருசொற் பெயரீடு
Sphyraena forsteri
(Cuvier, 1829)

பெருக்கஞ்சீலா (Sphyraena forsteri) என்பது பேர்சிஃபார்மீசு வரிசையைச் சேர்ந்த சீலா குடும்ப மீன் இனம் ஆகும். [1] இதன் கண்கள் சற்று பெரியதாக உள்ளதால் பெருங்கண்சீலா என அழைக்கப்பட்டு, அது பெருக்கஞ்சீலா என மருவியதாக கூறப்படுகிறது.

உருவவியல்[தொகு]

இவை 75 செ.மீ. வரை வளரக்கூடியன. [2] இதன் உடலானது சற்றே ஒருங்கிய குழாய் போன்று இருக்கும். வெள்ள நிறமான இந்த மீனின் முதுகில் நீளமான கறுப்புக் கோடு காணப்படும். இரண்டு முதுகுத் துடுப்புகள் தனித்தனியாக உண்டு. இதன் உடலில் வட்டவடிவ சிறிய செதில்கள் காணப்படும். இதன் கன்னத் துடுப்புக்கு அருகில் கறுப்பு நிறத் திட்டு காணப்படும். பிற சீலா மீன்களைப் போலவே இதன் அடித்தாடை மேல் தாடையைவிட சற்று நீண்டு இருக்கும்.

நடத்தை[தொகு]

பெருக்கஞ்சீலா பொதுவாக இரவில் முகுதியாக நடமாடும். இவை கூட்டமாக திரியக்கூடியன. இவை மீன் கணவாய், இறால் போன்றவற்றை இரையைகக் கொள்ளும்.

பரவல்[தொகு]

இவை தென்கிழக்கு ஆசியா, மார்க்கெசசுத் தீவுகள், சொசைட்டி தீவுகள், தெற்கு யப்பான் மற்றும் நியூ கலிடோனியாவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைகளில் காணப்படுகின்றன. [2]

குறிப்புகள்[தொகு]

  1. The Taxonomicon (en inglés)
  2. 2.0 2.1 FishBase (en inglés)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருக்கஞ்சீலா&oldid=3291110" இலிருந்து மீள்விக்கப்பட்டது