உள்ளடக்கத்துக்குச் செல்

பெரி. கபிலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரி. கபிலன் (Peri Kabilan)(பிறப்பு: 24 சூலை 1978) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேய்ச்சலியச் செயல்பாட்டாளர் ஆவார்.[1] அவர் தொழுவம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 2022ஆம் ஆண்டு விகடனின் முதன்மை பத்து இளைஞர்கள் நம்பிக்கை விருதினைப் பெற்றவராவார்.[2]

செயல்பாடுகள்

[தொகு]

இயற்கைச் சமநிலை, பல்லுயிர்மைப் பாதுகாப்பு, மேய்ச்சல் பண்பாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் அவர் ஆய்வுகளும் உரையாடல்களும் செய்து வருகிறார்.[3][4] 2020-21 இல் யுனஸ்கோ ஆய்வுதவியில் தென் தமிழ்நாட்டில் வாழும் பகுதி இடம்பெயரும் மேய்ச்சலிய சமூகமான வரத்தட்டு கீதாரிகள் குறித்த இனவரைவியல் ஆய்வு செய்தார்.[5]

தொழுவம் அமைப்பு

[தொகு]

மேய்ச்சலிய சமூகங்களின் நிலையான வாழ்வாதாரம், பல்லுயிர்மை பாதுகாப்பு மற்றும் சூழலியல் சமநிலையை ஊக்குவிப்பதற்காக 2020ஆம் ஆண்டு தொழுவம் அமைப்பை இவர் நிறுவினார்.[6][7]

வெளியிட்ட நூல்கள்

[தொகு]
  1. கீதாரிகள் இனவரைவியல், சந்தியா பதிப்பகம், 2021[8]
  2. தமிழ்நாடு பாஸ்டோரலிசம், யாம் பதிப்பகம், 2024 (தொகுப்பாசிரியர்)

விருதுகளும் அங்கீகாரங்களும்

[தொகு]
  1. 2022 டாப் டென் இளைஞர்கள் விருது, ஆனந்த விகடன், சென்னை (21 பிப்ரவரி 2023)[9]
  2. 2022, வளர்தமிழ் மாமணி விருது உலக தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு, சென்னை (12 ஆகத்து 2022)
  3. 2024, வொகேசனல் எக்சலன்ஸ் விருது, சென்னை சுழற்கழகம்[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அழிந்து வரும் மேய்ச்சல் நிலங்கள்; அரசுக்கு அக்கறையே இல்லையா?". விகடன். https://www.vikatan.com/environment/endangered-grazing-lands-does-the-government-not-care. பார்த்த நாள்: 15 December 2025.
  2. "Nambikkai Awards 2022: Celebrating the voice of the voiceless - the various icons of Tamil Society!". விகடன். https://www.vikatan.com/editorial/announcements/nambikkai-awards-2022-celebrating-the-voice-of-the-voiceless-the-various-icons-of-tamil-society. பார்த்த நாள்: 15 December 2025.
  3. "Herding for a green economy". gotn.in.
  4. "மேய்ச்சல் சமூக மேம்பாட்டு நல வாரியம் அமைக்கப்படுமா? கிடை மாடு, ஆடுகள் வளர்ப்போர் எதிர்பார்ப்பு". இந்து தமிழ். https://www.hindutamil.in/629876-.html. பார்த்த நாள்: 15 December 2025.
  5. "வரத்தாட்டுக் கீதாரிகளின் இனவரைவியல் - ஓர் அறிமுகம்". sahapedia. Retrieved 15 December 2025.
  6. "TSM, Thozhuvam sign MoU to promote green economy". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/madurai/tsm-and-thozhuvam-join-forces-to-promote-sustainable-pastoral-practices-in-tamil-nadu/articleshow/115462855.cms. பார்த்த நாள்: 15 December 2025.
  7. "about us". தொழுவம். Retrieved 15 December 2025.
  8. "கீதாரிகள் தலைமைப்பண்பு மிக்கவர்கள்: எழுத்தாளர் சோ.தர்மன் பேச்சு". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/blogs/710083-book-release-function-in-madurai.html. பார்த்த நாள்: 15 December 2025.
  9. "நம்பிக்கை விருதுகள் 2022: "ஆவின் பால் ஆந்திராவிலிருந்து வருது. ஆடு, மாடு மேய்ப்பது ஒன்றும் அவமானம் இல்லை!"- சீமான்". விகடன். https://www.vikatan.com/lifestyle/culture/ananda-vikatan-nambikkai-awards-2022-live-updates. பார்த்த நாள்: 15 December 2025.
  10. "Vocational Excellence Award for Madurai-based green economy campaigner; Chennai Rotary Club honours 'Thozhuvam' founder". Retrieved 2025-12-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரி._கபிலன்&oldid=4424051" இலிருந்து மீள்விக்கப்பட்டது