பெரிலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெரிலீன்[1]
Perylene.svg
Perylene-3D-balls.png
Perylene sample.jpg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பெரிலீன்
வேறு பெயர்கள்
பெரி-இருநாப்தலீன்; பெரிலீன்; இருபென்சி[டி,கே1]ஆந்தரசீன்
இனங்காட்டிகள்
198-55-0 Yes check.svgY
ChEBI CHEBI:29861 N
ChEMBL ChEMBL1797415 N
ChemSpider 8788 N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19497 N
பப்கெம் 9142
UNII 5QD5427UN7 N
பண்புகள்
C20H12
வாய்ப்பாட்டு எடை 252.32 g·mol−1
தோற்றம் பழுப்பு நிறத்திண்மம்
உருகுநிலை
தீங்குகள்
S-சொற்றொடர்கள் S22 S24/25
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பெரிலீன் அல்லது பெரைலீன் (Perylene or perilene) என்பது C20H12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் ஆகும். பழுப்பு நிறத்தில் திடப்பொருளாக இச்சேர்மம் தோன்றுகிறது. பெரிலீன் அல்லது பெரிலீனுடைய வழிப்பொருட்கள் புற்றுநோயாக்க வேதிப்பொருட்களாக உள்ளன. எனவே இச்சேர்மம் ஒரு தீங்கு விளைவிக்கும் மாசாகக் கருதப்படுகின்றன. உயிரணுப் படல உயிரணுவேதியியலில் பெரிலீன் ஒளிர் கொழுப்பு நுண்ணாய்வு செயல்முறையில் பயன்படுகிறது. இரைலீன் வகைச் சாயங்கள் தயாரிப்பதற்கான மூலச்சேர்மமாகவும் பெரிலீன் உள்ளது.

உமிழ்வு[தொகு]

பெரிலீன் நீல நிற உடனொளிர்வை வெளிப்படுத்துகிறது. கரிம ஒளியுமிழும் இருமுனையங்களில் தூய்மையான நிலை அல்லது பதிலீடு செய்யப்பட்ட நிலையில் நீல நிறத்தை உமிழும் மாசுப் பொருளாக பெரிலீன் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கரிம ஒளிமின் கடத்தியாகவும் பெரிலீன் பயன்படுத்தப்படுகிறது. இதன் அதிகபட்ச ஈர்ப்பளவு 434 நா.மீ ஆகும். அனைத்து பல்வளைய அரஒமாட்டிக் சேர்மங்களையும் விட பெரிலீன் மிகக்குறைந்த அளவே தண்ணீரில் கரைகிறது. (1.2 x 10−5 மில்லிமோல்/லிட்டர்) மேலும் 435.7 நானோமீட்டரில் இதன் மூலக்கூற்று பரப்பு கவர்திறன் அளவு மதிப்பு 38500 மீ−1செ,மீ−1 ஆகும்.

கட்டமைப்பு[தொகு]

பெரிலீன் உள்ளகத்துடன் கூடிய குறிப்பிடத்தக்க ஒரு எடுத்துக்காட்டாக தொட்டிச் சாயம் 29

.

பெரிலீன் மூலக்கூறில், இரண்டு நாப்தலீன் மூலக்கூறுகள் 1 மற்றும் 8 நிலைகளில், ஒரு கரிமம்-கரிமம் பிணைப்பால் இனைக்கப்பட்டுள்ளன. பெரிலீனிலுள்ள அனைத்து கார்பன் அணுக்களும் sp2 கலப்பினத்தைச் சேர்ந்தவையாகும். மேலும், பெரிலீனின் கட்டமைப்பை எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகள் விரிவாக தெரிவிக்கின்றன[2]

.

மேற்கோள்கள்[தொகு]

  1. Perylene at Sigma-Aldrich
  2. Donaldson, D. M.; Robertson, J. M.; White, J. G. (1953). "The crystal and molecular structure of perylene". Proceedings of the Royal Society A 220 (1142): 311–321. doi:10.1098/rspa.1953.0189. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிலீன்&oldid=3387368" இருந்து மீள்விக்கப்பட்டது