பெரிய முனியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல ஊர்களை சேர்ந்த மக்களுக்கு காவல் மற்றும் எல்லை தெய்வமாக இருக்கும் கடவுள் தான் இந்த பெரிய முனியார்.இந்த ஆலயம் நெய்வேலி நகருக்கு வடக்கே மற்றும் நெய்வேலி மயானத்திகு தெற்கேயும் உள்ள இடைப்பட்ட காடு போன்ற பகுதியில் அமைந்துள்ளது.
அடிப்படையில் இந்த கடவுள் சைவம், ஆனால் இந்த தெய்வத்தை வழிபடும் மக்கள் வேண்டுதலுக்காக ஆடு , கோழி போன்றவற்றை இதே ஆலயத்தில் உள்ள வீர பத்திரனுக்கு பலியிடுகிறார்கள். மேலும் கார்த்திகை தீபத்தின் போது, இந்த தெய்வத்தை வழிபடுபவர்கள் மாவிளக்கு படைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் தங்கள் வீடுகளில் நடைபெரும் நல்ல காரியங்களுக்கு முன்னாள் இந்த கோவிலில் வணங்கி செல்வது வழக்கம்.இந்த கோவிலுக்கு சாப்பிடும் இடம் , 24 மணி நேர தண்ணீர் வசதி , மின்சார வசதி , புதிய சிலைகள் போன்றவை இங்கு வாடிக்கையாக வரும் பக்தர்களால் செய்து தரப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_முனியார்&oldid=2082076" இருந்து மீள்விக்கப்பட்டது