பெரிய மரமூஞ்சூறு
| பெரிய மரமூஞ்சூறு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | மர மூஞ்சூறு
|
| குடும்பம்: | துபாலிடே
|
| பேரினம்: | துபையா
|
| இனம்: | து. தானா
|
| இருசொற் பெயரீடு | |
| துபையா தானா[2] | |
| பெரிய மரமூஞ்சூறு பரம்பல் | |
பெரிய மரமூஞ்சூறு (துபையா தானா) என்பது துபாயிடே பேரினத்தினைச் சார்ந்த ஒரு மரமூஞ்சூறு சிற்றினமாகும்.[2] இது சுமாத்திரா, சுமாத்திரா தீவின் அருகிலுள்ள சிறிய தீவுகள், போர்னியோவின் தாழ்நிலங்கள் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாழ்கிறது.[3]
வாழிடம்
[தொகு]பெரிய மரமூஞ்சூறு அனைத்து மரமூஞ்சூறு இனங்களிலும் மிகவும் பிரதானமாக நிலப்பரப்பில் வாழ்கின்றன. இவை பொதுவாக காடுகளில் தரைப்பகுதியில் காணப்படும். இவை இவற்றின் உணவு தேடலுக்கான முதன்மை இடமாகும். இருப்பினும் இவை தங்கள் நேரத்தின் ஒரு பகுதியை மரங்களில் செலவிடுகின்றன.[4] கள அவதானிப்புகளும் அவற்றின் உருவவியல் பண்புகளின் அடிப்படையிலும் து. டானா முக்கியமாக நிலப்பரப்பில் வாழும் விலங்கு என்று விவரிக்கப்பட்டுள்ளது.[5][6][7] பெரிய மரமூஞ்சூறு முதன்மையாக வெப்பமண்டல மழைக்காடுகளில் மிகுதியாக வாழ்கின்றன. ஆனால் சதுப்பு நிலக் காடுகளிலும், இரண்டாம் நிலை வளர்ச்சி காடுகளிலும் காணப்படுகின்றன. து. டானாவினை பளிங்குப் பூனை, சிறுத்தை, படைச்சிறுத்தை போன்ற பல சாத்தியமான விலங்குகள் வேட்டையாடுகின்றன.
பெரிய மரமூஞ்சூறு விதைகளைப் பரப்புவதன் மூலம் iவற்றின் தாழ்நில மழைக்காடு சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிக்க பங்களிக்கின்றன.
விளக்கம்
[தொகு]துபையா டானா பொதுவான மரமூஞ்சூறுவினை (டா. கிளிசு) விடச் சற்று பெரியது.[8] பின்புற உரோமம் சிவப்பு பழுப்பு நிறத்தில் உள்ளது. பின்புறம் கிட்டத்தட்ட கருப்பு நிறத்தில் நிழலாடுகிறது. கழுத்தில் பாதி முதல் மூன்றில் இரண்டு பங்கு வரை பின்புறம் கீழே ஒரு கருப்பு பட்டை காணப்படும். இது இருண்ட பின்புற ரோமத்தில் மறைந்து காணப்படும்.
இந்த சிற்றினத்தின் உடல் அளவு அளவீடுகள்:
- தலை மற்றும் உடல்: 165–321 mm (6.5–12.6 அங்)
- வால்: 130–220 mm (5.1–8.7 அங்)
- பின் கால்: 43–57 mm (1.7–2.2 அங்)
- எடை: 154–305 g (5.4–10.8 oz)
மூக்கு நீளமானது: கண்ணின் மையத்திலிருந்து முகவாய் நுனி வரையிலான தூரம் 37 mm (1.5 அங்) மேல்.[9]
துபையா டானா நன்கு உணர்திறன் வாய்ந்தது. கேட்கும் திறனும் கொண்டது. பெரிய கண்களும் உள்ளன. இவை கூர்மையான இரவுப் பார்வையைக் கொடுக்கின்றன.[10] ஆனால் பகல் பார்வை குறைவாக உள்ளது.
உணவு
[தொகு]துபையா டானாவின் உணவில் மண்புழுக்கள், மரவட்டை, வண்டு போன்ற கணுக்காலிகள் உள்ளன. மேலும் சில பழங்களும் உண்ணப்படும் உணவாக உள்ளன.[11] குறைவான விரும்பத்தக்க கணுக்காலிகளில் எறும்புகள், வண்டுகள், சிலந்திகள், கரப்பான் பூச்சிகள், கிரிக்கெட்டுகள் அடங்கும்.
இனப்பெருக்கம்
[தொகு]ஆண் மற்றும் பெண் இருவருக்கும் இனப்பெருக்க முதிர்ச்சியின் சராசரி வயது சுமார் ஒரு வருடம் ஆகும். பெண் எப்போதும் இரண்டு முதிர்வடைந்த குட்டிகளைப் பெற்றெடுக்கிறது. தரம் குறைந்த பிரதேசங்களில் அல்லது வள பற்றாக்குறை காலங்களில் பெண்களின் கருவுறுதல் குறைகிறது.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Cassola, F. (2016). "Tupaia tana". IUCN Red List of Threatened Species 2016: e.T41501A22279356. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T41501A22279356.en. https://www.iucnredlist.org/species/41501/22279356. பார்த்த நாள்: 26 January 2022.
- ↑ 2.0 2.1 Helgen, Kristofer M. (November 16, 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. {{{pages}}}. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}:|edition=has extra text (help);|editor=has generic name (help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ Payne, J., Francis, C. M., Phillipps, K. (1985).
- ↑ Yasuma, S., Andau, M., Apin, L., Yu, F.T.Y., and Kimsui, L. (2003).
- ↑ Emmon, L. (2000).
- ↑ Wells, K., Pfeiffer, M., Lakim, M. B., and Kalko, E. K. V. (2006).
- ↑ Sargis, E. J. (2001).
- ↑ Yasuma, S., Andau, M., Apin, L., Yu, F.T.Y., and Kimsui, L. (2003).
- ↑ Payne, J., Francis, C. M., Phillipps, K. (1985).
- ↑ Harwood, R. "Geology 102: Humans". Archived from the original on 2010-06-25. Retrieved 2009-08-03.
- ↑ Payne, J., Francis, C. M., Phillipps, K. (1985).
- ↑ Munshi-South, J. (2008). "Female-biased dispersal and gene flow in a behaviorally monogamous mammal, the large treeshrew (Tupaia tana)". PLOS ONE 3 (9): e3228. doi:10.1371/journal.pone.0003228. பப்மெட்:18797506. Bibcode: 2008PLoSO...3.3228M.