பெரிய போரதீவு
தோற்றம்
பெரிய போரதீவு | |
|---|---|
கிராமம் | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | கிழக்கு |
| மாவட்டம் | மட்டக்களப்பு |
| பிசெ பிரிவு | போரதீவுப்பற்று |
| மக்கள்தொகை (2010) | |
| • மொத்தம் | 1,356 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
| • கோடை (பசேநே) | ஒசநே+6 (கோடை நேரம்) |
பெரிய போரதீவு (periya Porativu) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். மட்டக்களப்பு மாநகரின் தெற்கே படுவான்கரை எனும் இடத்தில் அமைந்துள்ள இக்கிராமம் போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தின் நிருவாகத்தில் உள்ளது.[1] பெரிய போரதீவு வடக்கே பழுகாமத்தையும் கிழக்கேயும் தெற்கேயும் மட்டக்களப்பு வாவியையும் மேற்கே முனைத்தீவையும் பட்டாபுரத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
பெரிய போரதீவின் மக்கள்தொகை 1,356 (2010 ஆம் ஆண்டில்) 1,356 ஆகும். இவர்களில் 661 பேர் ஆண்கள், 695 பேர் பெண்கள் ஆவர்.[1] பெரும்பான்மையானோர் தமிழர்கள் ஆவர்.
இங்குள்ள கோயில்கள்
[தொகு]- போரதீவு பத்திர காளி அம்மன் கோவில்
இங்குள்ள பாடசாலைகள்
[தொகு]- பெரிய போரதீவு பாரதி வித்தியாலயம்
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "போரதீவுப் பற்று பிரதேச செயலகம்". Archived from the original on 2014-11-13. Retrieved 2014-08-18.