பெரிய புள்ளிக்கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய புள்ளிக்கழுகு
இராசத்தானின், தால் சாப்பர் சரணாலயத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கிளாங்கா
இனம்:
கி. கிளாங்கா
இருசொற் பெயரீடு
கிளாங்கா கிளாங்கா
பாலாசு, 1811
பெரிய புள்ளிக் கழுகு பரம்பல்     இனப்பெருக்கம்      பெயர்ச்சிக் காலம்      சாதாரண காலம்

பெரிய புள்ளி கழுகு (கிளாங்கா கிளாங்கா), எப்போதாவது புள்ளி கழுகு என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு பெரிய கொன்றுண்ணிப் பறவையாகும். இது பிற வழக்கமான கழுகுகளைப் போலவே, பாறுக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இதன் இறகுகள் கொண்ட கால்களுக்காக இது "பூட் கழுகுகள்" என்றும் அழைக்கப்படும் அக்விலினே என்ற துணைக் குடும்பத்தின் உறுப்பினராக உள்ளதைக் காட்டுகிறது.[2] இந்த இனம், அக்விலா இனத்தில் உள்ளடங்குவதாக ஒரு காலத்தில் கருதப்பட்டாலும், இப்போது மற்ற இரண்டு வகையான புள்ளி கழுகுகளுடன் கிளாங்கா என்ற தனித்துவமான இனத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.[3] பெரிய புள்ளிக் கழுகுகுள் கிழக்கு ஐரோப்பா மற்றும் பகுதியளவில் நடு ஐரோப்பா முழுவதும் நடு உருசியா மற்றும் நடு ஆசியா முழுவதும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை குளிர்காலத்தில் தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல் படுகை மற்றும் ஓரளவு கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு வலசை போகின்றன.[4] இந்த கழுகு பிற, பூட் கழுகுகளை விட நீர்நிலையை ஒட்டிய விரும்புகிறது. ஆறுகள், சதுப்பு நிலங்கள், ஏரிகள், குளங்கள், சில கடலோரப்பகுதிகள் மற்றும் சில வனப்பகுதி அல்லது காடுகளை சுற்றியுள்ள நீர் கரையோரப் பகுதிகளை விரும்புகிறது. இவை வெள்ளச் சமவெளிகளில் முதன்மையாக இனப்பெருக்கம் செய்கின்றன. அதிக நீர் மட்டம் உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. இவை குளிர்காலத்தில் இடம்பெயர்வின் போது இதேபோன்ற ஈரநில வகை வாழ்விடத்தைத் தேடுகின்றன. இருப்பினும், சில சமயங்களில் இவை சவன்னா பீடபூமிகள் போன்ற வறண்ட மேட்டு நிலப்பகுதிகளுக்கும் செல்லலாம்.[4][5]

பெரிய புள்ளிக் கழுகுகள் முதன்மையாக சிறிய பாலூட்டிகளை வேட்டையாடுகின்றன. முக்கியமாக இவை கொறிணிகள் மற்றும் பெரும்பாலும் ஈரநில வாழ்விட உயிர்களான தவளைகள் மற்றும் பலவகையான பறவைகள், பெரும்பாலும் நீர் பறவைகளை வேட்டையாடுகின்றன. பொதுவாக ஊர்வன மற்றும் பூச்சிகளை மிகவும் அரிதாகவே உண்கின்றன. ஆனால் மிகவும் குளிர் நிலவும் காலத்தில் (இதை ஒத்த மற்ற புலம்பெயர் கழுகுகளைப் போல), இந்த இனங்களின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப உணவு தேடக்கூடியனவாக இருக்கின்றன.மற்றும் அழுகிய உடல்கள் கிடைத்தால் உடனடியாக தோட்டி விலங்காகவும் மாறும். பெரிய புள்ளிக் கழுகுகள் முதன்மையாக வான்வழியாக உணவு தேடுபவை. சதுப்பு நிலங்கள் மற்றும் அது போன்ற அல்லது ஈர நில வயல்களுக்கு மேல் உள்ள மறைவிடத்தில் இருந்து பாய்ந்து வந்து இரையை வேட்டாயாடும்.[4][5][6] இந்த இனம் பெரிய வனப்பகுதியில் உள்ள மரத்தில் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டி, 1 முதல் 3 முட்டைகளை தொடர்ச்சியாக இடுகிறது. பெண் பறவைகள் முதன்மையாக அடைகாத்து, குஞ்சு பொரிக்கிறன. அதே நேரத்தில் ஆண் இரையை கொண்டு வருகிறது. அரிதாக ஒன்றுக்கு மேற்பட்ட குஞ்சுகள் பொறிக்கின்றன.[7][8] மற்ற வேட்டையாடும் பறவைகளைப் போலவே, பெரும்பாலும் மூத்த குஞ்சு அதன் இளைய உடன்பிறப்பு குஞ்சுகளை விட பெரியதாக இருக்கும், மேலும் பெரும்பாலும் இளைய கழுகுக்குஞ்சைத் தாக்கி கொல்லும்.[9] இந்த இனம் பெரும்பாலும் சிறிய புள்ளிக் கழுகுடன் ( கிளாங்கா பொமரினா ) நெருங்கிய தொடர்புடையதாக பரந்த அளவில் ஒன்றுடன் ஒன்று இணைகிறன்ன. மேலும் இரண்டு இனங்களும் இப்போது அவ்வப்போது கலப்பினமாக அறியப்படுகின்றன. இதனால் பெரும்பாலும் அரிதான பெரிய புள்ளிக் கழுகுகளின் எண்ணிக்கை குறைக்கின்றது.[10] பெரிய புள்ளிக் கழுகு மிகவும் அரிதானதாக உள்ளது. முதன்மையாக மனிதர்களால் வசிப்பிட அழிவால் இவை பாதிக்கப்படுகின்ற. அதைத் தொடர்ந்து துன்புறுத்தல் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களுடன் மோதல், சிறிய புள்ளிக் கழுகுகளுடன் கலப்பினமானது போன்றவை இந்த கழுகினத்துக்கு அதிக தீங்கு விளைவிப்பவையாக உள்ளன.[4][11] இதன் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக, பெரிய புள்ளிக் கழுகு பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Clanga clanga". IUCN Red List of Threatened Species 2017: e.T22696027A110443604. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22696027A110443604.en. https://www.iucnredlist.org/species/22696027/110443604. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Helbig, A. J., Kocum, A., Seibold, I., & Braun, M. J. (2005).
  3. Helbig, A. J., Seibold, I., Kocum, A., Liebers, D., Irwin, J., Bergmanis, U., Meyburg, B.-U., Scheller, W., Stubbe, M. & Bensch, S. (2005).
  4. 4.0 4.1 4.2 4.3 Ferguson-Lees, J.; Christie, D. (2001). Raptors of the World. Houghton Mifflin Harcourt. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-618-12762-3. https://archive.org/details/raptorsofworld0000ferg. 
  5. 5.0 5.1 Naoroji, R., & Schmitt, N. J. (2007).
  6. Karyakin, I. V. (2008).
  7. Brown, L. & Amadon, D. (1986) Eagles, Hawks and Falcons of the World.
  8. Väli, Ü. (2004).
  9. Watson, Jeff (2010). The Golden Eagle. A&C Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-1420-9. 
  10. Väli, Ü., Dombrovski, V., Treinys, R., Bergmanis, U., Daroczi, S. J., Dravecky, M., Ivanovski, V., Lontkowski, J, Maciorowski, G., Meyburg, B.-U., Mizera, T., Zeitz, R. & Ellegren, H. (2010).
  11. Väli, Ü. (2015).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_புள்ளிக்கழுகு&oldid=3849221" இலிருந்து மீள்விக்கப்பட்டது