பெரிய புத்தர் சிலை, புத்த கயா

ஆள்கூறுகள்: 24°41′25.7″N 84°58′54.5″E / 24.690472°N 84.981806°E / 24.690472; 84.981806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய புத்தர் சிலை
Great Buddha Statue, Bodh Gaya.jpg
பெரிய புத்தர் சிலை, புத்தகயை
பெரிய புத்தர் சிலை is located in பீகார்
பெரிய புத்தர் சிலை
பெரிய புத்தர் சிலை
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் புத்தகயையில் பெரும் புத்தர் சிலையின் அமைவிடம்
ஓவியர்வை. கணபதி சிற்பி
ஆண்டு1982 (1982) (துவங்கியது)
18 நவம்பர் 1989 (நிறுவப்படல்)
வகைசிலை
ஆக்கப் பொருள்மணற்கல் மற்றும் செம்கருங்கல்
பரிமாணம்உயரம் 19.5 m (64 ft) / தாமரைச் சிற்பத்தின் உயரம் 6 அடி
இடம்புத்தகயை, பிகார் மாநிலம், இந்தியா
ஆள்கூறுCoordinates24°41′25.7″N 84°58′54.5″E / 24.690472°N 84.981806°E / 24.690472; 84.981806
உரிமையாளர்ஜப்பானின் டைய்ஜொக்கியா பௌத்தக் கோயில்

பெரிய புத்தர் சிலை ('Great Buddha statue), இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள புத்தகயை நகரத்தில் அமைந்துள்ளது இது கௌதம புத்தர் தியானத்தில் தாமரையில் அமர்ந்த நிலையில் திறந்த வெளியில் அமைந்த இந்த கல் சிலை 19.5 m (64 ft) உயரம் கொண்டது.[1][2] இதன் மொத்த கட்டுமான உயரம் 80 ft (24 m) கொண்டது. கௌதம புத்தர் சிலையின் உயரம் 64 ft (20 m) மற்றும் அகலம் 60 ft (18 m) ஆகும்.

இதனை நிறுவிய சிற்பி தமிழகத்தைச் சேர்ந்த வை. கணபதி சிற்பி ஆவார்.[3] இக்கட்டுமானத்தை நிறுவ மணற்கல் மற்றும் செம்கருங்கற்கல், 12,000 கல் தச்சர்களைக் கொண்டு 7 ஆண்டுகள் காலம் ஆனது.[4] இச்சிலையின் உட்புறத்தில் கால் முதல் நெஞ்சு வரை செல்லும் சுருள் வடிவ படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் உட்புறத்தில் கௌதம புத்தரின் 16,300 செப்புச் சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளது.[5] இந்த பெரும் புத்தர் சிலை ஜப்பானிய டைய்ஜொக்கியா பௌத்தக் கோயில் வளாகத்தில் திறந்த வெளியில் அமைந்துள்ளது. இச்சிலையின் இருபுறத்திலும் புத்தரின் 10 சீடர்களின் சிற்பங்கள் வரிசைக்கு ஐந்து வீதம் நிறுவப்பட்டுள்ளது.[6]

இந்தியாவில் உயரமான இச்சிலை 18 நவம்பர் 1989 அன்று 14வது தலாய் லாமா திறந்து வைத்தார்.[7]இதன் அடிக்கல் நாட்டு விழா 1982ம் ஆண்டில் நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Daijokyo Buddhist Temple". daijokyo.or.jp. 2017-01-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2023-01-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The Great Buddha Statue in Bodhgaya, India". great-buddha-statue.com.
  3. Geary, David (2017). The Rebirth of Bodh Gaya: Buddhism and the Making of a World Heritage Site. University of Washington Press. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780295742380. https://books.google.com/books?id=meA5DwAAQBAJ. 
  4. "Bodh Gaya City Information". holidaymasti.com. 11 May 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. Geary (2017), ப. 68.
  6. "Great Buddha Statue". Lonely Planet. 3 March 2021 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Buddhist devotees participate in 20th anniversary celebrations of Buddha statue in Gaya". 22 November 2007. Archived from the original on 3 மார்ச் 2016. https://web.archive.org/web/20160303175543/http://www.thaindian.com/newsportal/india-news/buddhist-devotees-participate-in-20th-anniversary-celebrations-of-buddha-statue-in-gaya_1006189.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Great Buddha Statue, Bodh Gaya
என்பதின் ஊடகங்கள் உள்ளன.