உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் உள்ள அரண்மனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோன்வி அரண்மனை, வேல்சு
இலண்டன் கோபுரம், இங்கிலாந்து

1066 நார்மன் படையெடுப்பிலிருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள அரண்மனைகள் படைகள், பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் பெரும்பங்கு வகித்தன. 1050-களில் குறைவான அளவிலேயே அரண்மனைகள் இங்கிலாந்தில் கட்டப்பட்டிருந்த போதும், நார்மன்கள் மரத்தாலான, கோட்டை வெளிச்சுவர் கொண்ட, வலைய வடிவிலான அரண்மனைகளை தாங்கள் புதிதாகக் கைப்பற்றிய பகுதிகளான இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் பெருமளவில் கட்டினர். 12-ம் நூற்றாண்டுகளில் நார்மன்கள் கற்களைக் கொண்டு சதுர வடிவிலான ஏராளமான அரண்மனைகளைக் கட்டினார்கள். இவ்வகை அரண்மனைகள் அரசியல் மற்றும் படைகளில் பெரும்பங்காற்றின. அரச குடுபத்தினர் வாழும் அரண்மனைகள் முக்கியமான நகரங்களையும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த காடுகளையும் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுகின்றன. பெருங்குடியினர் வாழும் அரண்மனையானது நார்மன்களால் பயன்படுத்தப்பட்டவை. 12- நூற்றாண்டுகளில் முதல் பகுதியில் டேவிட் I ஆங்கிலோ-நார்மன் செல்வ சீமான்களை அழைத்து, காலனி ஆதிக்கத்தை உருவாக்கவும், அவருடைய நாட்டை நிர்வகிப்பதற்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டார். புதிதாக வந்த செல்வ சீமான்கள் தங்களுடன் அரண்மனைத் தொழில்நுட்பத்தை எடுத்து வந்தனர். நாட்டின் தெற்குப்பகுதியில் மரத்தாலான அரண்மனைகள் உருவாக்கப்பட்டன. 1170-ல் நார்மன்கள் படையெடுப்பைத் தொடர்ந்து, இரண்டாம் என்றி அயர்லாந்திலும் அரண்மனைகளை உருவாக்கினார்.

செப்ஸ்டோ அரண்மனை, வேல்சு (ரோமனெஸ்க் கட்டிடக்கலை)

12-ம் நூற்றாண்டில் படைகளி்ன் பயன்பாட்டிற்காக அரண்மனைகள் பெருகின. அதே சமயத்தில் அயர்லாந்து மற்றும் வேல்சில் அரண்மனைக் கட்டிடக் கலையானது இங்கிலாந்தைப் பின்பற்றியே இருந்தது. மூன்றாம் அலெக்சாந்தரின் இறப்பிற்குப் பிறகு இசுக்காட்லாந்து பொிய அரண்மனைகள் கட்டுவது விடுத்து சிறிய கோபுர வீடுகளைக் கட்டுவதற்கு மாறினர். பிற்காலங்களில் காேபுர வீடு கட்டும் செயற்பாணியை வடஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் பின்பற்றின. 1270-ல் கடைசி வேல்ஸ் ஆட்சியாளர்கள் அழிவிற்குப் பிறகு முதலாம் எட்வர்டு தொடர்ச்சியான படைபல மிக்க அரண்மனைகளை வடக்கு வேல்சில் கட்டினார். 14-நூற்றாண்டு அரண்மனைகள் பாதுகாப்பு மற்றும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் பெருமளவு தோட்டம் பூங்காக்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது.

பெரும்பாலான அரச மற்றும் பெருங்குடி மக்களின் அரண்மனைகள் அழிந்து விட்டன. 15-ம் நூற்றாண்டுகளில் ஒருசல அரண்மனைகள் மட்டும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிர்வகிக்கப்பட்டு வந்தன. சிறு எண்ணிக்கை இருந்த இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அரண்மனைகள் மறுமலர்ச்சிக்கான பொிய சொகுசு அரண்மனைகளாக மாறியது. அங்கு ஆடம்பர விழாக்கள் மற்றும் விருந்துகள் காெண்டாடப்பட்டன. இவ்வகையான அரண்மனைகள் சாதாரண மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டிருந்தது. அரச மற்றும் பெரு முதலாளிகள் மட்டுமே இவ்வகை அரண்மனைகளை பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.

இரண்டாம் உலகப்போாின் போது ஸ்காட்லாந்தில் ஒருசில அரண்மனைகள் இராணுவ முகாம்களாக பயன்படுத்தப்பட்ட போதும், அரண்மனைகளின் இராணுவப் பயன்பாடு அடுத்தடுத்த வருடங்களில் வேகமாக குறைந்தது. 19-ம் நூற்றாண்டு நாடாளுமன்ற சட்டத்தில் பெரும்பாலான அரண்மனைகள் முடப்பட்டன. அதற்கு முன் பயன்படுத்தப்பட்டன.. பிறகு அரண்மனைகள் மறுதோற்றம் பெற்று இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் சமுதாய மற்றும் கலாச்சார தோற்றமாகத் திகழ்ந்தன. பிாி்ட்டிஷ் தீவுகளில் உள்ள அரண்மனைகளைக் காக்கும் பொருட்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அரண்மனைகளைச் சுற்றுலாத் தலங்களாக பயன்படுத்துவதன் வாயிலாக தேசிய பாரம்பாிய தொழிற்சாலையில் இது ஒரு அங்கமானது.

பிக்கரிங்கு அரண்மனை, இங்கிலாந்து (வலது), கவுண்டர் அரண்மனை (மேல் இடது)

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]