பெரிய பள்ளிவாசல், சனா
சனா பெரிய பள்ளிவாசல் | |
---|---|
சனா பெரிய பள்ளிவாசல் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 15°21′11″N 44°12′54″E / 15.3531°N 44.2149°E |
சமயம் | இசுலாம் |
மண்டலம் | யேமன் |
மாநிலம் | யேமன் |
ஆட்சிநிலம் | சனா |
மாவட்டம் | சனா |
மாநகராட்சி | சனா |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 7 -8 நூற்றாண்டுகள் |
நிலை | செயல்பாடில் உள்ளது. |
தலைமை | இசுலாமிய இறைதூதர் முகமது முதலில் கட்டினார். பின்பு உமையா கலீபா முதலாம் அல்-வலித் பள்ளிவாசல் பெரிய அளவில் விரிவாக்கி கட்டினார். |
சனா பெரிய பள்ளிவாசல் (Great Mosque of Sana'a) (அரபு மொழி: الجامع الكبير بصنعاء யேமன் நாட்டின் தலைநகரான சனா நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் கி.பி.630 இல் ஆரம்பித்து கி.பி. 705 க்கும் 715 க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.இது குத்மான் மாளிகைக்கு கிழக்கில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]
இப்பள்ளிவாசல் யேமன் நாட்டின் தலைநகரான சனா நகரில் அல் குவாத்தி மற்றும் அல்சாலிஹ் பகுதிகளுக்கு இடையே குத்மான் மாளிகைக்கு கிழக்கில் உள்ளது. [1] ஓட்டோமான் பேரரசு காலத்தில் இப்பள்ளிவாசல் அருகே இராணுவம் நிலைகொண்டு இருந்தது.[2][3] யேமன் நாட்டின் தலைநகரான சனா நகரில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் இருந்தாலும் இதுவே மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும்.[4]
வரலாறு
[தொகு]
உள்ளூர் மக்களின் கருத்து படி இசுலாமிய இறைதூதர் முகமது அவர்களின் காலத்தில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டது.[4] பிற்காலத்தில் கட்டிடத்தில் பல புனரமைத்தல் நடைபெற்றுவிட்டன.[5] 1972 இல் இங்கு நடந்த தொல்லியல் ஆய்வின் போது இங்கு இசுலாமிய இறைதூதர் முகமது அவர்களின் காலத்தில் கையால் எழுதப்பட்ட குர்ஆன் பிரதிகள் கிடைத்தன.
உறுதி வரலாறு நிகழ்வுகள் படி கி.பி.705 இருந்து கி.பி.715 வரை (86-96 AH) உமையா கலீபா முதலாம் அல்-வலித் பள்ளிவாசல் பெரிய அளவில் விரிவாக்கி கட்டினார்.
பள்ளிவாசல் முற்றத்தில் காணப்படும் மற்றொரு கல்வெட்டு தகவலின்படி கி.பி.753 இல் பள்ளிவாசல் ஒரு பகுதி அப்பாசிய கலிபா காலத்தில் கட்டப்பட்டது.
இப்பள்ளிவாசல் இரண்டு வெள்ளை நிற மினார்களைக் கொண்டுள்ளது.கிழக்கு பகுதி மினார் 9 ஆம் நூற்றாண்டிலும் மேற்கு பகுதி மினார் 12 ஆம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டது.[5] கி.பி.1130 இல் இசுமாலி அரசி அர்வா இபின் அகமத் மேற்கு மினாரைக் கட்டினார்.[6]
கட்டிடக்கலை
[தொகு]பள்ளிவாசல் அடுக்குகளில் உள்ள அப்லாக் வடிவமைப்பு, முன் இஸ்லாமிய காலம் போன்ற வடிவமைப்பில் உள்ளது.மேல்மட்டத்தில் லகுனாரி மரத்தில் செய்யப்பட்ட செதுக்கப்பட்ட பலகைகள் வர்ணம் பூசப்பட்டு உள்ளது.[7] இக்கட்டிடத்தில் பழமையான கையெழுத்து பிரதிகள் உள்ளன.[4][6]
அகழ்வாராய்ச்சி
[தொகு]பள்ளிவாசலில் உள்ள மினாருக்கு செல்லும் மாடி படிக்கட்டுகளுக்கு அடியில் பழமையான ஆவணங்களை சேர்த்து உருளைக்கிழங்கு சாக்குகளில் நிரப்பி வைக்கப்பட்டதை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க பட்டது.[8] 4000 அரபி மொழி பழமையான கையெழுத்து பிரதிகள் கிடைத்தன.கலிபா அலீ தொகுத்துள்ளேன் குர்ஆன் பிரதி கிடைத்தது.[9]
பாதுகாப்பு
[தொகு]சனா பெரிய பள்ளிவாசல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் வெளியிட்ட உலகப் பாரம்பரியக் களம் பட்டியலில் 1986 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. [10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Elsheshtawy, Yasser (2004). Planning Middle Eastern Cities: An Urban Kaleidoscope in a Globalizing World. Routledge. pp. 91–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-41010-1. பார்க்கப்பட்ட நாள் 29 December 2012.
- ↑ McLaughlin, Daniel (12 February 2008). Yemen: the Bradt travel guide. Bradt Travel Guides. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84162-212-5. பார்க்கப்பட்ட நாள் 11 July 2011.
- ↑ "Restoration of the Great Mosque in Sana'a, Yemen". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012.
- ↑ 4.0 4.1 4.2 Steil, Jennifer (5 July 2011). The Woman Who Fell from the Sky: An American Woman's Adventures in the Oldest City on Earth. Random House Digital, Inc. pp. 5–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7679-3051-2. பார்க்கப்பட்ட நாள் 29 December 2012.
- ↑ 5.0 5.1 Talgam, Rina (2004). The Stylistic Origins of Umayyad Sculpture and Architectural Decoration: Text. Otto Harrassowitz Verlag. pp. 112–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-447-04738-8. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012.
- ↑ 6.0 6.1 "Al-Jami' al-Kabir". ArchNet Digital Libraray. Archived from the original on 19 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "From Material to Structure: Mechanical Behaviuor and Failures of the Timber Structures" (PDF). ICOMOS Organization. Archived from the original (pdf) on 13 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012.
- ↑ Lester, Toby (January 1999). "What Is The Koran". The Atlantic Monthly. http://www.theatlantic.com/doc/prem/199901/koran. பார்த்த நாள்: 29 December 2012.
- ↑ "Restoration of the Great Mosque in Sana'a, Yemen". World Heritage Institute of Training and Research-Asia and Pacific (shanghai) of Unesco. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012.
- ↑ "Old City of Sana'a". UNESCO Organization. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012.