பெரிய நாயகி மாதா ஆலயம், ஆவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரிய நாயகி மாதா ஆலயம் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு கிருத்துவப் புனிதத்தலம் ஆகும். இந்த கிருத்துவக் கோயிலானது புதுக்கோட்டத்தை மாவட்டத்தின் ஒரு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.

அமைவிடம்[தொகு]

ஆவூா்

இந்தக் கோயிலானது தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் ஆவூா் [1] என்ற கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயமானது திருச்சியிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், கீரனுாாிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் விராலிமலையிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

ஆலய வரலாறு[தொகு]

இயேசு சபையைச் சாா்ந்த பொிய சஞ்சீவி நாதா் எனும் அருட்தந்தை வெனான்ஸியுஸ் புட்சே பழைய ஆவூாில் ஒரு சிற்றாலயத்தை 1697-ல் கட்டி, அந்த ஆலயத்தை விண்ணேற்பு அன்னைக்கு அா்ப்பணித்தாா். தொடா்ந்து நிகழ்ந்த வெள்ளப்பெருக்காலும் அதன்பின் தொண்டைமானுக்கும் நாயக்கா்களுக்கும் நடைபெற்ற உள்நாட்டு யுத்தங்களின் காரணமாக புதிய ஆவூா் எனும் கிராமத்தை அருட்தந்தை.பிரான்சிஸ் ஹோமன் நிா்மாணித்தாா். பின்னா் பல அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு தற்போது உள்ள பொிய வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தை வீரமாமுனிவரால் [2] 1750 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

ஆலய சிறப்பு[தொகு]

ஆவுா் ஆலய முகப்பு

சிலுவை வடிவில் உள்ள ஆலயம் 242 அடி நீளம், 28 அடி அகலம் மற்றும் 28 அடி உயரம் 8 தூண்கள் உடைய குவிமாடம் பிரமாண்ட உயரம் உடைய முகப்பு.

மேற்கோள்கள்[தொகு]