பெரிய டையோமெதி தீவு
வட அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் ருசியாவின் சைபீரியாவில் உள்ள கம்சாத்கா தீபகற்பத்தை பிரிக்கும் பெரிங் நீரிணையில் உள்ள சிறிய டையோமெதி தீவுக்கு அருகில் உள்ள பெரிய டையோமெதி தீவின் அமைவிடம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | பெரிங் நீரிணை |
ஆள்கூறுகள் | 65°46′52″N 169°03′25″W / 65.78111°N 169.05694°W |
தீவுக்கூட்டம் | டையோமெதி தீவுகள் |
பரப்பளவு | 29 km2 (11 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 477.32 m (1,566.01 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
|
பெரிய டையோமெதி தீவு (Big Diomede Island), ருசியாவின் சைபீரியாவையும், வட அமெரிக்காவின் அலாஸ்காவையும் பிரிக்கும் தீவு ஆகும். இது பெரிங் கடலின் பெரிங் நீரிணையில் உள்ள டையோமெதி தீவுகளில் ஒன்றான சிறிய டையோமெதி தீவுக்கு அருகில் உள்ளது. இது ருசியாவின் சுகோத்கா தன்னாட்சி வட்டாரத்தின் கீழ் உள்ளது. இது அமெரிக்காவையும், ருசியாவையும் பிரிக்கும் எல்லைக்கோட்டிற்கு மிக மிக அருகில் உள்ளது. 1867-ஆம் ஆண்டில் அலாஸ்காவை ருசியா பேரரசரிடமிருந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் விலைக்கு வாங்கிய போது, பெரிய டையோமெதி தீவிற்கும், அதன் கிழக்கில் உள்ள அமெரிக்காவின் சிறிய டையோமெதி தீவிற்கும் இடையே 1.3 கிலோ மீட்டர் தொலைவில் பன்னாட்டு கடல் எல்லை கோடு வரையறுக்கப்பட்டது.
புவியியல்
[தொகு]ருசியாவின் தூரக் கிழக்கில் உள்ள பெரிய டையோமெதி தீவு 29 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[1] இது ருசியாவின கிழக்கில் உள்ள சுகோத்கா மூவலந்தீவிற்கு தென்கிழக்கில் 45 கிலோ மீட்டர் தொலைவில் பெரிங் கடலில் உள்ளது. இதன் வடக்கில் சுக்ச்சி கடல் உள்ளது. இது 65°46′52″N 169°03′25″W / 65.78111°N 169.05694°W பாகையில் உள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் ருசியாவிற்கு இடையே உள்ள பன்னாட்டு கடல் எல்லைக் கோடு, இத்தீவிலிருந்து 1.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2] இத்தீவில் ஒரு உலங்கு வானூர்தி நிலையம் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Diomede Islands". Funk & Wagnalls New Encyclopedia. (2006). World Almanac Education Group.
- ↑ Wikimapia