உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய கொக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய கொக்கு
Adult in Tobago
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. alba
இருசொற் பெயரீடு
Ardea alba
L., 1758
Range of A. alba (excluding A. a. modesta)      Breeding range     Year-round range     Wintering range
வேறு பெயர்கள்

Casmerodius albus
Egretta alba

பெரிய கொக்கு (Great Egret) இப்பறவை வெப்ப வலயம் மற்றும் மிதவெப்பமண்டலம் பகுதிகளில் காணப்படும் கொக்கு வகையைச் சார்ந்த பறவையாகும்.[2]

குளத்தின் மீது Ardea alba

பெரும் வெண் கொக்கு என்றும் அழைக்கப்படும் இப்பறவை உலகம் முழுவதிலும் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் தெற்கு ஐரோப்பா பகுதிகளிலும் காணப்படுகிறது. வடக்கு அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஆனாலும் இவை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காணப்படும் பறவை இனம் ஆகும். பழைய காலத்திலிருந்தே இந்த கொக்கு இனம் வாழ்ந்தாலும் இதனை கரிபியா பகுதியில் காணப்படும் கொக்குடன் சேர்த்து குழப்பிக்கொள்கிறார்கள்.

விளக்கம்[தொகு]

இதன் உடல் முழுவதிலுமே வெள்ளை நிறத்தில் தோகையைக் கொண்டு காணப்படுகிறது. இப்பறவை நின்ற நிலையில் 1 மீட்டர் உயரமும், 80 முதல் 104 செமீ நீளமும் கொண்டு, சிறகுகள் விரிந்த நிலையில் 131 முதல் 170 செமீ அகலம் கொண்டு காணப்படுகிறது.[3] இதன் எடை 1,000 கிராம் அளவு கொண்டுள்ளது. நீல நிறக்கொக்கை விட சிறியதாகக் காணப்படுகிறது. இவை பறக்கும்போது தனது கழுத்தை ஓர் விமானம்போல் நீட்டி மெதுவாக வானத்தில் பறந்து செல்லும்.[4]

படத்தொகுப்பு[தொகு]

உணவுப்பழக்கம்[தொகு]

இவை நீர் நிலைகளில் காணப்படும் சிறிய பூச்சிவகைகள், தவளை, மீன், மற்றும் பாலூட்டிகள் போன்றவற்றை உட்கொள்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Casmerodius albus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. http://www.biodiversitylibrary.org/item/82314#page/386/mode/1up
  3. https://seaworld.org/
  4. [http://www.independent.co.uk/environment/nature/rare-great-white-egret-chick-hatches-in-uk-for-first-time-7807682.htm[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_கொக்கு&oldid=3771950" இலிருந்து மீள்விக்கப்பட்டது