பெரிய கேள்விகட்கு சுருக்கமான விடைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய கேள்விகட்கு சுருக்கமான விடைகள்
நூலாசிரியர்ஸ்டீவன் ஹாக்கிங்[1]
நாடுUnited States
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்Hodder & Stoughton (Hardcover)[2]
Bantam Books (நூல் அட்டை)[3]
வெளியிடப்பட்ட நாள்
16 October 2018
ஊடக வகைPrint (Hardcover)
பக்கங்கள்256
ISBN9781529345421
முன்னைய நூல்The Dreams That Stuff Is Made Of

பெரிய கேள்விகட்கு சுருக்கமான விடைகள் (Brief Answers to the Big Questions) என்பது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயைபியல் அறிஞரான ஸ்டீவன் ஹாக்கிங் (1942-2018) எழுதிய ஒரு புத்தகமாகும். இது ஹாடர் & ஸ்டாடன் (Hodder & Stoughton) என்ற பதிப்பகத்தினரால் 16 அக்டோபர் 2018-இல் வெளியிடப் பட்டது. இப்புத்தகம், நம் பேரண்டத்தில் மறைந்து கிடைக்கும் பேருண்மைகளைப் பற்றியும், மற்றும் நாம் இப்புவி உலகில் சிக்கல்களைக் கடந்து வாழ வேண்டுமாயின், அதற்கு அறிவியல் துணை பெரிதும் தேவை என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றது. ஹாக்கிங் அவர்கள் இறக்கும் பொது இப் புத்தகம் முழுவதுமாக எழுதப் பட்டிருக்கவில்லை; ஆயினும், அவர் மறைவுக்குப் பிறகு அவருடைய நண்பர்கள்,குடும்பத்தினர் ஆகியோரின் துணை கொண்டு புத்தகம் முழு வடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, பின் வெளியிடப் பட்டது. புத்தக விற்பனையில் வரும் ஊதியத்தில் ஒரு பகுதி தசைவற்றும் இயக்க நரம்பணு அழற்சிக் கழகம் (Motor Neurone Disease Association), ஸ்டீவன் ஹாக்கிங் அறக்கட்டளை (Stephen Hawking Foundation) ஆகிய நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.[4]

உள்ளடக்கம்[தொகு]

இப்புத்தகம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [5]

 • நாம் ஏன் இந்தப் பேரண்டத்தில் தோன்றி இருக்கிறோம்?
 • நாம் (நெடுங் காலம்) உயிரோடு இருப்போமா?
 • நம் தொழில்நுட்பம் நம்மைப் பாதுகாக்குமா அல்லது அழிக்குமா?
 • நாம் இனிவரும் காலங்களில் எவ்வாறு மேன்மேலும் வளர்ச்சி பெறலாம்?

இந்த நான்கு பகுதிகளிலும் பத்து கேள்விகள் கேட்கப்பட்டு, அவற்றுக்கு சுருக்கமான விடைகளும் அளிக்கப் பட்டுள்ளன. அந்த பத்து கேள்விகளாவன: [6]

 1. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
 2. இந்தப் பேரண்டமும், அதில் உள்ள கோடான கோடி பொருட்களும் எவ்வாறு தோன்றின?
 3. அண்டத்தின் வேறு எந்தப் பகுதியிலாவது, (நம்மைப் போல்) நுண்ணறிவுள்ள உயிரினங்கள் இருக்குமா?
 4. எதிர் காலத்தைக் கணிக்க இயலுமா?
 5. கருந்துளை (black hole) என்னும் அண்டவெளிப் பகுதியில் இருப்பது என்ன?
 6. காலப் பயணம் (time travel) என்பது உண்மையிலேயே நடக்கக் கூடியதா?
 7. இந்த நில உருண்டையில் நாம் இன்னும் நெடு நாட்கள் உயிருடன் இருந்து விட முடியுமா?
 8. அண்டத்தில் வேறு கோள்களைத் தேடி, அங்கு குடியேறி நம்மால் வாழ முடியுமா?
 9. கணிப் பொறியில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது மனிதன் அறிவைத் தோற்கடிக்கும் அளவுக்கு எதிர் காலத்தில் முன்னேறி விடுமா?
 10. நம் எதிர் காலத்தை நாம் எப்படி அமைத்துக் கொள்வது?

இத்துடன் மனித இனத்தை எதிர் கொண்டுள்ள பல்வேறு சிக்கல்களையும் ஆராய்கிறது: [3][6] [7] [8]

 • மனித குலத்தை அழிக்க வல்ல நிகழ்வுகள் (66 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு நம் நில உருண்டையின் மீது வீழ்ந்த சிறுகோள், தொன்மா(Dinosaur) என்ற விலங்கினத்தையே அழித்ததைப் போன்றவை).[9]
 • காலநிலை மாற்றம் (climate change) (வெப்பம் மேலிட்டு, பனி உருகி, கரியமில ஆவி(carbon dioxide) வெளிப்பட்டு, உலக உருண்டையின் வெப்பம் செவ்வாய்க் கோளில் உள்ளது போல 250 °C (482 °F) -ஆக மாறுதல்)
 • அணு குண்டுப் போர் (nuclear war) (இன்னும் 1000 ஆண்டுகளில், அணு குண்டுப் போர் அல்லது சுற்றுச் சூழல் பேரழிவு நம் உலக உருண்டையை வாழ்வதற்கு இயலாத இடமாக மாற்றி விடுதல்)
 • நுண்ணறிவு வாய்ந்த கணிப் பொறிகள் (இக் கணிப்பு பொறிகள் நம் விருப்பத்திற்கு எதிராக செயல் படுதல்); மற்றும் மனிதர்கள் (மரபணுக்கள் மாற்றப்பட்ட மனிதர்கள் மற்ற இயல்பான மனிதர்களுக்கு எதிராக இயங்குதல்)

பெரிய கேள்விகளுக்கான சிறிய விடைகள்[தொகு]

 • கடவுள் கடவுளைப் பற்றி புரிந்துகொள்ளுதல் என்பது இயற்கையின் விதிகள் என்னவென்று புரிந்து கொள்ளுதலே. கடவுளைப் பற்றிய நல்ல புரிதல் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நமக்கு கிடைத்துவிடும் என்பது இவர் கணிப்பு. [10] வேண்டுமானால், அறிவியல் விதிகளைக் கடவுள் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால், அது நாம் வணங்கும் கடவுளாக இருக்காது. கடவுள் இல்லை என்பதே கடவுளை பற்றிய எளிமையான விளக்கம். அடுத்த பிறவி என்பதற்கான சான்றுகள் ஒன்றும் இல்லை. ஆயினும், மனிதர்கள் தங்கள் ஆற்றலாலும், மரபணுக்களின் இயல்பினாலும் பல நாட்கள் வாழ வழி இருக்கலாம்.[3][6][7]
 • அண்டத்தின் தோற்றம் அண்டம் என்பது நேர் ஆற்றல் (postive energy) பாதியும் எதிர் ஆற்றல் (negative energy) பாதியும் கொண்டுள்ளது. இரண்டையும் சேர்த்தால் வெறுமையான (ஒன்றுமில்லாத) நிலை, அதாவது, சுழிய (zero) நிலை, உருவாகின்றது. இந்த ஒன்றுமில்லாத நிலையை உருவாக்க (கடவுள் போன்ற)எந்த சக்தியும் தேவை இல்லை. இந்த நிலையில், பெரு வெடிப்பு நிகழ்ந்து, அதில் தோன்றிய சக்தியால், அண்டத்தில் உள்ள பல பொருட்களும் உருவாயின.
 • அண்டத்தில் உயிரினங்கள் அறிவு சான்ற உயிரினங்கள் அண்டத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்குமானால், அவை இதுவரை நம்மைப் பார்க்காமல் இருந்திருக்கலாம். இன்னும் 50 ஆண்டுகளில், உயிரினங்கள் எவ்வாறு தோன்றின, அண்டத்தின் வேறு பகுதிகளில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பன போன்ற கேள்விகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
 • காலக் கணிப்பு எதிர் காலத்தைப் பற்றி நம்மால் கணிக்க இயலாது. அறிவியல் விதிகளை வைத்து நம்மால் கணிக்க இயலுமெனினும், நடை முறையில் அது இயலாத ஒன்றாகவே இருக்கும்.
 • கருந்துளை கருந்துளை(black hole) இருக்கும் இடங்களில் நிறை ஈர்ப்பு விசை (gravity) மிகுதியாக இருக்கும். இதனால் வெளியின்(space) இயல்பும் கால ஓட்டத்தின் இயல்பும் மாறி (அதாவது, வளைந்து) இருக்கும். கருந்துளைக்கு அருகே வளைவு(curvature) மிகுதியாகவும், மற்ற இடங்களில் வளைவு குறைவாகவும் இருக்கும்.
 • காலப் பயணம்(Time travel) இது நடப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
 • பூமியில் உயிரினம் நிலைக்குமா? இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. நாம் கவனமாக இருந்தால், உயிரினம் நிலைக்க வாய்ப்புகள் உண்டு.
 • வேறு கோளுக்குக் குடிபெயர்தல் இதற்கு வாய்ப்பு உண்டு. சூரிய மண்டலத்தை நாம் இன்னும் ஆராய வேண்டும்.
 • செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) கணிப்பொறிகள் மனிதரைப் போலவே சிந்திக்கும் ஆற்றலைப் பெறவும், மனிதரை விட சிறப்பாக அறிவில் சிறக்கவும் வழிகள் பிறக்கும்.
 • நம் எதிர்காலம் எதிர் காலத்தில் நமக்குத் தூய சக்தி தரும் கருப்பிணைவு (fusion) முறையில் இயங்கும் பொறிகளை உருவாக்க வேண்டும். இதனால், இந்த உலகம் வெப்பமயமாகி(global warming) அழிந்து போகும் வாய்ப்பைத் தடுக்கலாம்.

சமூகத்தில் இந்நூலைப்பற்றிய[தொகு]

இந்நூலை முன்வைத்து கடவுள் பொருள் என்ற ஒன்று உண்டா என்றும் அண்டம், குவாண்டம் குறித்த ஸ்டீவன் ஹாக்கிங்கின் பார்வை குறித்தும் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. AP News (15 October 2018). "In Posthumous Message, Hawking Says Science Under Threat". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 17 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181017153816/https://www.nytimes.com/aponline/2018/10/15/world/europe/ap-eu-britain-stephen-hawking.html. பார்த்த நாள்: 15 October 2018. 
 2. Staff (16 October 2018). "Brief Answers to the Big Questions - Stephen Hawking (author) - Hardback (16 Oct 2018) English". Blackwell.co.uk. https://blackwells.co.uk/bookshop/product/Brief-Answers-to-the-Big-Questions-by-Stephen-Hawking-author/9781529345421. பார்த்த நாள்: 20 October 2018. 
 3. 3.0 3.1 3.2 Staff (2018). "Brief Answers to the Big Questions – Hardcover – October 16, 2018 by Stephen Hawking". Amazon. https://www.amazon.com/gp/product/1984819194. பார்த்த நாள்: 15 October 2018. 
 4. Durrani, Matin (16 October 2018). "Stephen Hawking’s final book: a review of Brief Answers to the Big Questions". Physics World. https://physicsworld.com/a/stephen-hawkings-final-book-a-review-of-brief-answers-to-the-big-questions/. பார்த்த நாள்: 16 October 2018. 
 5. Griffin, Andrew (16 May 2018). "Stephen Hawking's final work will try to answer some of the biggest questions in the universe - Book will collect the late professor's most profound and celebrated writings". The Independent. https://www.independent.co.uk/news/science/stephen-hawking-book-final-death-latest-big-questions-universe-discovery-a8354301.html. பார்த்த நாள்: 15 October 2018. 
 6. 6.0 6.1 6.2 Millard, Robin (15 October 2018). "Hawking's final book offers brief answers to big questions". Phys.org. https://phys.org/news/2018-10-hawking-big.html. பார்த்த நாள்: 15 October 2018. 
 7. 7.0 7.1 Haldevang, Max de (14 October 2018). "Stephen Hawking left us bold predictions on AI, superhumans, and aliens". Quartz. https://qz.com/1423685/stephen-hawking-says-superhumans-will-take-over-ai-is-a-threat-and-humans-will-conquer-space/. பார்த்த நாள்: 15 October 2018. 
 8. Picheta, Rob (16 October 2018). "'There is no God,' says Stephen Hawking in final book". CNN News. https://www.cnn.com/2018/10/16/health/stephen-hawking-final-book-intl/index.html. பார்த்த நாள்: 16 October 2018. 
 9. Stanley-Becker, Isaac (15 October 2018). "Stephen Hawking feared race of ‘superhumans’ able to manipulate their own DNA". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/news/morning-mix/wp/2018/10/15/stephen-hawking-feared-race-of-superhumans-able-to-manipulate-their-own-dna/. பார்த்த நாள்: 15 October 2018. 
 10. Livni, Ephrat (17 November 2018). "Please allow Stephen Hawking to explain time, history, and God". Quartz. https://qz.com/1464626/please-allow-stephen-hawking-to-explain-time-history-and-god/. பார்த்த நாள்: 16 November 2018. 
 11. சுப. வீரபாண்டியன். கடவுள் உண்டா? சுப. வீரபாண்டியன் Stephen Hawking Brief Answers to the Big Questions. சென்னை: Kulikkai.