பெரிய காது பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய காது பக்கி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பறவை
வேறு பெயர்கள்
  • Eurostopodus mindanensis

பெரிய காது பக்கி (Great eared nightjar, Lyncornis macrotis) என்பது ஒரு பக்கி இனப் பறவையாகும். இது பக்கி குடும்பத்தில் மிகப்பெரிய பறவைகளில் ஒன்றாகும். இதன் நீளமானது 31 முதல் 41 cm (12 முதல் 16 அங்) வரை இருக்கும். இப்பறவைகளில் ஆண் பறவையானது சராசரியாக 131 g (4.6 oz) எடையைக் கொண்டதாகவும், பெண் பறவைகள் சராசரியாக 151 g (5.3 oz) எடையுள்ளவையாக உள்ளன. எனவே இது nacunda nighthawk குடும்பத்துக்கு அடுத்து இரண்டாவது பெரிய பறவையாகும். [2]

பரவலும் வாழிடமும்[தொகு]

தலை

இப்பறவையானது தென்கிழக்கு ஆசியாக்கண்டப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும், இலங்கை, [3] வங்காளதேசம், [4] இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடமானது மிதவெப்ப மண்டல அல்லது தாழ் நிலை வெப்பமண்டல காடுகள் ஆகும்.

நடத்தை[தொகு]

மற்ற இரவாடிகளைப் போலவே இவை அந்தியிலும், இரவில் இயங்கக்கூடியன.

இனப்பெருக்கம்[தொகு]

இவை தரையைச் சுரண்டி அதில் தங்கள் கூட்டை அமைத்து அதில் முட்டையிடுகின்றன. இதன் குஞ்சுகள் மக்கிய இலைத் துகல்களில் உருமறைப்பு செய்துகொள்கின்றன. [5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_காது_பக்கி&oldid=3784436" இருந்து மீள்விக்கப்பட்டது