பெரிய உலர்கனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெரிய உலர்கனி-எண்டாடா ஸ்கேன்டன்ஸ்

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : எண்டாடா ஸ்கேன்டன்ஸ் Entada scandens

குடும்பம் : மைமோசாசியீ (Mimosaceae)

இதரப் பெயர்கள்[தொகு]

யானைக் கொழிஞ்சி

யானைக் கட்டுக்கொடி

கொடியின் அமைவு[தொகு]

இது ஒரு பெருங்கொடியாகும். இது 100 அடி உயரம் மரங்களில் படர்ந்து வளரக்கூடியது. இக்கொடி மிகவும் உறுதியாக உள்ளதால் இதை யானைக்கட்டுக் கொடி என்றும் அழைப்பார்கள். இது மிகவும் உயரமாகவும் வளரும். இக்கொடியில் தனிப்பூக்கள் அல்லது இரட்டைப்பூக்கள் கொடியின் நுனியில் வரும். இதிலிருந்து 4 முதல் 6 அடி நீளமுடைய காய்கள் வரும். சுpல சமயங்களில் 8 அடி நீளமும் 10 செ.மீ. அகலமும் கொண்டிருக்கும். இக்கனி உலர்கனி வகையைச் சார்ந்தது. இது திருகிக் கொண்டு இருக்கும். உலர்கனியில் மிகப் பொடியது இதுவே. இதன் விதைகளுக்கு நடுநடுவே குறுகிக் கனி மணி, மணியாகத் தோன்றி வெடிக்கும் போது ஒரு விதை அடங்கிய துண்டுகளாக பிரியும். இதன் உள்ளே உள்ள விதை பொpயதாகவும், பளபளப்பாகவும், பழுப்பு நிறத்திலோ அல்லது கருஞ்சிவப்பு ஊதா நிறத்திலோ இருக்கும். இதன் விதையிலிருந்து அழகான பொருட்களும், இதன் உள்ளே சிறு சிறு பொருட்களைப் போட்டு வைக்கும் பெட்டிகளும் செய்கிறார்கள். இதில் 30 சாதிச் செடிகள் உள்ளன. இவை மேற்கு இந்தியத் தீவுகளிலும், ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய பகுதிகளில் வளர்கிறது.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_உலர்கனி&oldid=2899846" இருந்து மீள்விக்கப்பட்டது