பெரிய உருண்டை சப்பாத்தி கள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : எச்சினோகாக்டஸ் கிராண்டிஸ் Enhinocactus grandis

குடும்பம் : காக்டேசீயீ

இதரப் பெயர்கள்[தொகு]

  • விஸ்கை சப்பாத்தி
  • பீப்பாய் சப்பாத்தி

செடியின் அமைவு[தொகு]

இச்சப்பாத்திக்கள்ளி உருண்டை வடிவமாக பீப்பாய் போன்று இருக்கும். இது 10 அடி உயரமும், 10 அடி சுற்றளவும் கொண்டது. இதன் உருளை வடிவத் தண்டு கீற்று கீற்றாக நீளவாக்கில் இருக்கும். இவ்வரம்புகளில் முள் வட்டங்கள் இருக்கும். இவை 5 செ.மீ. நீளம் உடையன. தண்டின் மேல் உச்சிப் பகுதியில் முட்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலும், இதனிடையே ரோமம் போன்ற முட்களும் உள்ளன. இந்தச் சப்பாத்திக் கள்ளியில் 5 செ.மீ. நீளமுடைய மஞ்சள் நிறப்பூக்கள் உண்டாகின்றன. இதன் கனியில் ரோமம் போன்ற முட்கள் உள்ளன. சப்பாத்திக் கள்ளியின் தண்டுப்பகுதியில் நீர் சேமித்து வைக்கின்றன. இதன் தண்டுகள் பச்சை நிறமாக உள்ளன. இது உணவைத் தயாரிகள்ளிகள்க்கப் பயன்படுகிறது. மேலும் இதன் இலைகள் முட்களாக மாறிவிடுகின்றன. ஆகவே இவற்றில் இலைகள் இருப்பதில்லை.

காணப்படும் பகுதிகள்[தொகு]

இது தெற்கு மெக்ஸிகோ பகுதிகளில் வளர்கிறது. சப்பாத்திக்கள்ளிக் குடும்பத்தில் 25 சாதிகளும், 1500 இனங்களும் உண்டு.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.