உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய இசுரேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய இசுரேல் (Greater Israel) என்பது பல காலமாக உள்ள சில வேறுபட்ட விவிலிய மற்றும் அரசியல் அர்த்தம் உடைய ஒரு வாதத்திற்கு இடமான தெரிவிப்பாகும்.

தற்போது, இசுரேல் மற்றும் பாலஸ்தீன பகுதி உட்பட்ட நிலப்பகுதிகளை வரையறுக்கும் பதமாக பொதுவாகக் காணப்படுகின்றது. 1923இற்குப் பின்னான மறுநோக்கு சீயோனிசத்தின் விருப்பின் முன்னைய வரையறுப்புக்கள், பிரித்தானிய ஆட்சி பாலஸ்தீனம் மற்றும் திரான்ஸ்யோர்டான் உட்பட்ட அல்லது உட்படாத நிலப்பரப்புக்களையும் உள்ளடக்கியதாகவிருந்தது. ஏனைய சமய பார்வையில், இது இசுரேல் தேசம் எனப்படும் விவிலிய குறிப்பின் ஒன்றாகப் பாவிக்கப்படுகின்றது. இது விவிலியத்தின் ஆதியாகமமம் 15:18-21, உபாகமமம் 11:24, உபாகமம் 1:7, எண்ணிக்கை 34:1-15 அல்லது எசேக்கியேல் 47:13-20 ஆகிய இடங்களில் காணப்படுகின்றது.

ஆதியாகமமம் 15:18-21 இல் குறிப்பிடப்பட்டுள்ள இசுரேல் தேசத்தின் எல்லைகள்.
எசேக்கியேல் (நீலக் கோடு) மற்றும் தோரா (சிவப்புக் கோடு) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இசுரேல் தேசத்தின் எல்லைகள்.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_இசுரேல்&oldid=3222513" இலிருந்து மீள்விக்கப்பட்டது