பெரியார் பகுத்தறிவு நூலகம் ஆய்வகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியார் பகுத்தறிவு நூலகம் ஆய்வகம் என்னும் நூலகம் சென்னை பெரியார் திடலில் இயங்கிவருகிறது.[1]

நோக்கம்[தொகு]

பெரியார் சிந்தனைகள், உரைகள், விளக்கங்கள், அறிவுரைகள், அகியவற்றை அனைவரும் பயன்படுத்தவும், ஆராயவும் வேண்டும் என்ற நோக்குடன் இந்த நூலகமும் ஆய்வகமும் 17.9.74 அன்று துவக்கப்பட்டது. இந்நூலகம் காலை 11 மணியில் இருந்து மாலை 7 மணிவரை இயங்குகிறது. இந்நூலகத்தில் பயிற்சிபெற்ற நூலகர் பணியாற்றுகிறார்.

நூலகத்தில் உள்ளவை[தொகு]

இங்கு கிடைத்தற்கரிய பழைய குடி அரசு, விடுதலை,புரட்சி,பகுத்தறிவு, உண்மை, ரிவோல்ட்,மாடன் ரேஷனலிஸ்ட் மற்றும் பல்வேறு துறைசார்ந்த திராவிட இயக்கத் தொடர்புடைய இதழ்கள், நூல்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் மற்றும் தலைப்புகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முனைவர் பட்டம் பெறவேண்டிப் பல்வேறு பல்கலைக் கழகங்களில் இருந்துவரும் ஆய்வாளர்களுக்கும், திராவிட இயக்க ஆய்வாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் இந்நூலகம் உள்ளது.

குறிப்புகள்[தொகு]