உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியார்தாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியார்தாசன் (இறப்பு: 19 ஆகத்து 2013) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மா என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். இவர் 12-3-2010 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்[1][2]. அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் அப்துல்லாஹ் கல்லீரல் கோளாறு காரணமாக சென்னை சோளிங்கநல்லூரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் பரணிடப்பட்டது 2013-08-22 at the வந்தவழி இயந்திரம்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தும் பலனின்றி 19-08-2013 அதிகாலை 1.25 மணியளவில் மரணம் அடைந்தார் பரணிடப்பட்டது 2013-08-22 at the வந்தவழி இயந்திரம். அப்போது அவருக்கு வயது 63.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Indian atheist embraces Islam-அரப் நியூஸ் நாளிதழ்
  2. "தேடுங்கள் கண்டடைவீர்கள்!-சத்தியமார்க்கம்.காம்". Archived from the original on 2010-03-22. பார்க்கப்பட்ட நாள் 2010-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியார்தாசன்&oldid=3565031" இலிருந்து மீள்விக்கப்பட்டது