பெரின் ஜம்செட்ஜி மிஸ்திரி
பெரின் ஜம்செட்ஜி மிஸ்திரி | |
|---|---|
| பிறப்பு | 1913 |
| இறப்பு | 1989 (அகவை 75–76) |
| கல்வி | கிரைடான் உயர்நிலைப்பள்ளி, சர் ஜம்சேத்ஜி ஜீஜீபாய் கலைப்பள்ளி |
| பணி | கட்டடக் கலை |
பெரின் ஜம்செட்ஜி மிஸ்திரி (Perin Jamsetjee Mistri) (1913–1989) இந்தியாவில் கட்டடக் கலைஞராக தகுதி பெற்ற முதல் பெண் ஆவார்.
இளமை வாழ்க்கை
[தொகு]பெரின் ஜம்ஷெட்ஜி மிஸ்திரி, குஜராத் மாநிலத்தின் நவ்சாரியைச் சேர்ந்த பொறியாளர்கள் அடங்கிய பார்சி குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை, புகழ்பெற்ற நகர கட்டடக் கலைஞரும் பொறியியலாளருமான ஜம்ஷெட்ஜி பெஸ்டன்ஜி மிஸ்த்ரி, மிஸ்ட்ரி & பெத்வார் என்ற கட்டடக்கலை நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்தார். இது மரைன் லைன்ஸில் ஆர்ட் டெகோ மெட்ரோ சினிமா, கோட்டை எச். எஸ். பி. சி வங்கிக் கட்டடத்தையும், கொலாபா மற்றும் கஃப் பரேட் கடல் சுவர்கள், கஃப் பரேட்டில் உள்ள தாராபோரேவாலா வளாகம் மற்றும் மும்பை விமான நிலையத்தின் முதல் ஓடுபாதையையும் கட்டியது.
கல்வி
[தொகு]மும்பையில் குஜராத்தி மொழியில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து, இவர் பஞ்ச்கானியில் உள்ள மிஸ் கிம்மின்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். மேலும் தனது 10 வயதில் இங்கிலாந்துக்குச் சென்று, கிராய்டன் உயர்நிலைப்பள்ளியில் தனது கல்வியை முடித்தார்.[1] பின்னர், மும்பை திரும்பிய, சர் ஜம்செட்ஜி ஜீஜீபாய் (ஜே. ஜே. ஜே கலைப் பள்ளியில்) சேர்ந்தார். மேலும் 1936 இல் கட்டிடக்கலையில் சான்றிதழ் பட்டம் பெற்றார். பின்னர், இவர் தனது தந்தையின் நிறுவனத்தில் சேர்ந்தார். 1937 ஆம் ஆண்டில் சேர்ந்த இவர் 1989 இல் தான் இறப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் அந்த நிறுவனத்தில் இருந்தார்.[2]
தொழில் வாழ்க்கை
[தொகு]பெரின் முதல் பெரிய படைப்புகளில் ஒன்று, கார்மைக்கேல் சாலையில் உள்ள டெகோ கலை இல்லம் தற்போது வரை நல்ல நிலையில் உள்ளது. இவரது பிற பணிகளில் ஒருசில அரசு அலுவலகங்கள், குடியிருப்பு மற்றும் தொழில்துறை கட்டிடங்கள், போரிவாலியில் உள்ள கட்டாவ் ஆலைகள் மற்றும் கம்பல்லா மலை உள்ள செயின்ட் இசுடீபன் தேவாலயம் ஆகியவை அடங்கும். 1936 ஆம் ஆண்டில், கட்டடக்கலையில் அரசாங்க சான்றிதழ் பெற்றபோது, கட்டடக்கலை தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் ஆனார்.[3]
குடும்பம்
[தொகு][[கின்னரப்பெட்டி]] முதல் வளைதடிப் பந்தாட்டம் வரை, தோட்டக்கலை மற்றும் மும்பையிலுள்ள ஹாஃப்கைன்ஸ் நிறுவனத்தில் பாம்புகள் பற்றிய ஆய்வு ஆகியவை பெரினின் ஆர்வங்களாக இருந்தன. இவர் தொழிலதிபர் அர்தேஷிர் பிவாண்டிவாலா என்பவரை மணந்து பாந்த்ராவில் வசித்து வந்தார். பெரின் மிஸ்திரியின் தம்பி, கட்டடக் கலைஞர் மினோச்சர் மினு மிஸ்திரி, இந்திய கலை மற்றும் கட்டடக்கலை வெளியீடான மார்க் என்ற இதழின் நிறுவனர்களில் ஒருவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India's first woman architect – a tribute to Perin J. Mistri". Art Deco Mumbai. Retrieved March 9, 2022.
- ↑ "Perin Mistri". Women in Architecture. Retrieved March 9, 2022.
- ↑ Ram, Sharmila Ganesan. "How this woman architect made a room for herself in Mumbai". Times of India. Retrieved March 9, 2022.