பெராயோலோயைட்டு
Appearance
பெராயோலோயைட்டுFerraioloite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பாசுப்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | MgMn2+4(Fe2+0.5Al0.5)4Zn4(PO4)8(OH)4(H2O)20 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மேற்கோள்கள் | [1][2] |
பெராயோலோயைட்டு (Ferraioloite) என்பது MgMn2+4(Fe2+0.5Al0.5)4Zn4(PO4)8(OH)4(H2O)20 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் அரிய ஒரு கனிமச் சேர்மமாகும். பால்சுடெரைட்டு என்ற பாசுப்பேட்டு கனிமத்துடன் தொடர்பு கொண்ட கனிமமாக இது கருதப்படுகிறது [1][2]. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தின் கிளீவ்லேண்டு மாகாணத்தில் அமைந்துள்ள ஃபூட் இலித்தியம் நிறுவன சுரங்கத்தின் தீப்பாறைகளில் பெராயோலோயைட்டு கனிமம் காணப்படுகிறது. 1947 முதல் 2014 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த யேம்சு ஏ பெராயோலோவின் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Mills, S.J., Grey, I.E., Kampf, A.R, MacRae, C.M., Smith, J.B., Davidson, C.J., and Glenn, A.M., 2015. Ferraioloite, IMA 2015-066. CNMNC Newsletter No. 28, December 2015, 1862; Mineralogical Magazine 79, 1859–1864
- ↑ 2.0 2.1 "Ferraioloite: Ferraioloite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
- ↑ Mineralienatlas: Ferraioloite