உள்ளடக்கத்துக்குச் செல்

பெராக்சி அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனிம பெராக்சி அமிலத்தின் பொதுவான வாய்ப்பாடு (மேல்) ஒப்பீடு ஒரு கார்பாக்சிலிக் அமிலம் (கீழ்).

பெராக்சி அமிலம் (Peroxy acid) என்பது அமிலத்தன்மையுள்ள −OOH குழுவைக் கொண்டுள்ள ஓர் அமிலமாகும். பெராக்சியமிலம், பெராசிட்டு என்ற பெயர்களாலும் இது அறியப்படுகிறது. வழக்கமான கனிம அமிலங்களிலிருந்து இரண்டு முக்கிய வகுப்புகள், குறிப்பாக கந்தக அமிலத்திலிருந்தும் கரிம கார்பாக்சிலிக் அமிலங்களிலிருந்தும் பெறப்பட்ட பெராக்சி வழிப்பெறுதியாக பெராக்சி அமிலம் கருதப்படுகிறது. இந்த அமிலம் பொதுவாக ஒரு வலுவான ஆக்சிசனேற்றியாகும்.

கனிம வேதியியல் பெராக்சி அமிலங்கள்

[தொகு]

கேரோ அமிலம் எனப்படும் பெராக்சிமோனோகந்தக அமிலம் குறைந்தபட்சம் இதன் உற்பத்தி அளவைப் பொறுத்தவரை மிக முக்கியமானதொரு கனிம பெராக்சி அமிலமாகும்.[1] மரக்கூழ் வெளுப்பதற்கும் சுரங்கத் தொழிலில் சயனைடை நச்சு நீக்குவதற்கும் இப்பெராக்சி அமிலம் பயன்படுத்தப்படுகிறது. கந்தக அமிலத்தை ஐதரசன் பெராக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. பெராக்சிமோனோபாசுபாரிக்கு அமிலமும் (H3PO5) இதேபோல் தயாரிக்கப்படுகிறது.[2]

சில பெராக்சி அமிலங்கள் வெறும் கற்பனையானவை. ஆனால் இவற்றின் எதிர்மின் அயனிகள் அறியப்படுகின்றன. பெராக்சிகார்பனேட்டுக்கும் பெர்போரேட்டுக்கும் இதுவே பொருந்தும்.[3] (சோடியம் பெர்போரேட்டைப் பார்க்கவும்)[4]

கரிமப் பெராக்சைடுகள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

பல கரிமப் பெராக்சி அமிலங்கள் வணிக ரீதியாகப் பயனுள்ளதாக உள்ளன.[5] இவற்றைப் பல வழிகளில் தயாரிக்கலாம். பொதுவாக, பெராசிட்கள் தொடர்புடைய கார்பாக்சிலிக்கு அமிலத்தை ஐதரசன் பெராக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன:[6]

RCO2H + H2O2 <-> RCO3H + H2O

தொடர்புடைய ஒரு வினையில் கார்பாக்சிலிக் நீரிலியைச் சேர்த்து சூடுபடுத்துவதும் அடங்கும்:[7]

(RCO)2O + H2O2 → RCO3H + RCO2H

இந்த தயாரிப்பு முறை வளைய நீரிலிகளை தொடர்புடைய மோனோபெராக்சி அமிலங்களாக மாற்றுவதற்கு உதவும் பிரபலமான முறையாகும். எடுத்துக்காட்டாக மோனோபெராக்சிதாலிக்கு அமிலம் தயாரிப்பதை கூறலாம்.

அசைல் குளோரைடுகளை சூடுபடுத்தி தயாரிக்கும் முறையை மூன்றாவது முறையாகக் கருதலாம்:

RC(O)Cl + H2O2 → RCO3H + HCl

மெட்டா-குளோரோபெராக்சிபென்சாயிக்கு அமிலத்தை இம்முறையில் தயாரிக்கலாம்:[8]

மெட்டா-குளோரோபென்சாயில் குளோரைடு + ஐதரசன் பெராக்சைடு → மெட்டா-குளோரோபெராக்சிபென்சாயிக்கு அமிலம்

தொடர்புடைய ஒரு தயாரிப்பு முறை பெராக்சிநீரிலியுடன் தொடங்குகிறது.

அரோமாட்டிக்கு ஆல்டிகைடுகளை தன்னாக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தி பெராக்சிகார்பாக்சிலிக் அமிலங்களைத் தயாரிக்கலாம்.

Ar-CHO + O2 → Ar-COOOH (Ar = அரைல் குழு)

இருப்பினும், விளைபொருள்கள் ஆரம்ப ஆல்டிகைடுடன் வினைபுரிந்து கார்பாக்சிலிக் அமிலத்தை உருவாக்குகின்றன:

Ar−COOOH + Ar−CHO → 2 Ar−COOH

பண்புகள்

[தொகு]

அமிலத்தன்மையைப் பொறுத்தவரை, பெராக்சிகார்பாக்சிலிக் அமிலங்கள், அயனியின் அதிர்வு நிலைப்படுத்தல் இல்லாததால், தாய் கார்பாக்சிலிக் அமிலத்தை விட சுமார் 1000 மடங்கு பலவீனமானவை. இதே போன்ற காரணங்களுக்காக, அவற்றின் காடித்தன்மை எண் மதிப்புகள் மாற்றுப் பொருட்களுக்கு ஒப்பீட்டளவில் உணர்வற்றதாக இருக்கும்.

பயன்கள்

[தொகு]

கரிம பெராக்சி அமிலங்களின் மிகவும் பொதுவான பயன்பாடு ஆல்க்கீன்களை எப்பாக்சைடுகளாக மாற்றுவது ஆகும். இவ்வினை பிரைல்சாயெவ் வினை வினை என்ற பெயர் வினையாகும்.

ஆல்க்கீன் மற்றும் பெராக்சிகார்பாக்சிலிக்கு அமிலம் ஆகியவற்றிலிருந்து எப்பாக்சைடு உருவாகும் வினை.

மற்றொரு பொதுவான வினை, பேயர்-வில்லிகர் ஆக்சிசனேற்றத்தில் பெராசிட்டுகளைப் பயன்படுத்தி வளைய கீட்டோன்களை வளைய-விரிவாக்கப்பட்ட எசுத்தர்களாக மாற்றுவதாகும். இவை அமீன்கள் மற்றும் தயோயீத்தர்களை அமீன் ஆக்சைடுகள் மற்றும் சல்பாக்சைடுகளாக ஆக்சிசனேற்றம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. மதிப்புமிக்க வினையாக்கி மெட்டா-குளோரோபெராக்சிபென்சாயிக்கு அமிலத்தின் ஆய்வக பயன்பாடுகள் இந்த வினைகளை விளக்குகின்றன.

பெராக்சிகார்பாக்சிலிக் அமிலங்கள் அமில குளோரைடுகளுடன் வினைபுரிந்து ஈரசைல் பெராக்சைடுகளை உருவாக்குகின்றன:

RC(O)Cl + RC(O)O2H → (RC(O))2O2 + HCl

பெராக்சைடுகளின் ஆக்சிஜனேற்றப் போக்கு, மாற்றீடுகளின் மின்னெதிர்த் தன்மையுடன் தொடர்புடையதாகும். எலக்ட்ரானநாட்ட பெராக்சைடுகள் வலுவான ஆக்சிசன்-அணு பரிமாற்ற முகவர்களாகும். ஆக்சிசன்-அணு கொடையளிக்கும் போக்கு O−H பிணைப்பின் அமிலத்தன்மையுடன் தொடர்புடையது. எனவே, ஆக்சிசனேற்ற சக்தியின் வரிசை CF3CO3H > CH3CO3H > H2O2 என்ற வரிசையாகும்.

பெராக்சிகார்பாக்சிலிக்கு அமிலங்கள் திண்ம மற்றும் நீர்ம வடிவங்களில் கிடைக்கின்றன. இவற்றின் ஆக்சிசனேற்ற மற்றும் கிருமிநாசினி பண்புகள் காரணமாக, இவை தொழில்முறை மற்றும் வீட்டு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.[9]

வெளுக்கும் முகவர்

[தொகு]

பெராக்சிகார்பாக்சிலிக் அமிலங்கள் வெண்மையாக்கும் முகவர்களாக உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பற்களை வெண்மையாக்குவது முக்கியப் பயனாகும். பல் மருத்துவத்தில் பற்களை திறம்பட வெண்மையாக்க பல்வேறு செறிவுகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கு குறைந்த செறிவுகள் போதுமானவையாக உள்ளன. ஐதரசன் பெராக்சைடுடன் ஒப்பிடும்போது, பெராக்சிகார்பாக்சிலிக் அமிலங்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒழுங்குமுறை எண் 1223/2009 இன் கீழ் ஐரோப்பாவில் அழகுசாதனப் பொருட்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[10]

கிருமிநாசினிகள்

[தொகு]

சுகாதாரப் பராமரிப்பில், பெராக்சிகார்பாக்சிலிக் அமிலங்கள் முதன்மையாக காயங்களை கிருமி நீக்கம் செய்வதற்கும் தொடுவில்லைகளை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

பெராக்சிகார்பாக்சிலிக் அமிலங்கள் துப்புரவு முகவர்கள், கிருமிநாசினிகள் மற்றும் சவர்க்காரங்களிலும் காணப்படுகின்றன, ஏனெனில் இவை கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை நம்பத்தகுந்த முறையில் கொல்லும்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Harald Jakob (2005), "Peroxy Compounds, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a19_177.pub2
  2. Creaser, I.I.; Edwards, J.O. (1972). "?". Topics in Phosphorus Chemistry 7: 379–435. 
  3. Chen, Li-Jiang; Lin, Chang-Jian; Zuo, Juan; Song, Ling-Chun; Huang, Chao-Ming (2004). "First Spectroscopic Observation of Peroxocarbonate/ Peroxodicarbonate in Molten Carbonate". The Journal of Physical Chemistry B 108 (23): 7553–7556. doi:10.1021/jp035749l. 
  4. "perborate(2-) (CHEBI:30175)". www.ebi.ac.uk.
  5. Herbert Klenk; Peter H. Götz; Rainer Siegmeier; Wilfried Mayr (2005), "Peroxy Compounds, Organic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a19_199
  6. Silbert, L. S.; Siegel, E.; Swern, D. (1964). "Peroxybenzoic Acid". Org. Synth. 44: 81. doi:10.15227/orgsyn.044.0081. 
  7. Géza Braun (1928). "Perbenzoic Acid". Org. Synth. 8: 30. doi:10.15227/orgsyn.008.0030. 
  8. Richard N. McDonald; Richard N. Steppel; James E. Dorsey (1970). "m-Chloroperbenzoic Acid". Org. Synth. 50: 15. doi:10.15227/orgsyn.050.0015. 
  9. "Peroxygens". Solvay.
  10. "Verordnung - 1223/2009 - EN - EUR-Lex".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெராக்சி_அமிலம்&oldid=4310589" இலிருந்து மீள்விக்கப்பட்டது