பெரம்பூர் புகைவண்டி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Perambur

பெரம்பூர் .சென்னை புறநகர் ரயில் மற்றும் தெற்கு ரயில்வே நிலையம். Perambur Railway Staion.jpg

சென்னை புறநகர் ரயில் மற்றும் தெற்கு ரயில்வே நிலையம்,மேம்பாலத்தில் இருந்து ஒரு பார்வை..

உரிமம் ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வேதடங்கள் சென்னை புறநகர் ரயில்வேயின் தென்மேற்கு,  மற்றும் தெற்கு பகுதிகளாகும் மும்பை- இணைப்பு
நடைமேடை 4இருப்புப் பாதைகள் 5கட்டமைப்புகட்டமைப்பு வகை செந்தரத் தரை நிலையம்.தரிப்பிடம் உண்டுமற்ற தகவல்கள்நிலையக் குறியீடு PERபயணக்கட்டண வலயம் தென்னக தொடர் வண்டித் துறைவரலாறுமின்சாரமயம் 29நவம்பர் 1979[1]முந்தைய பெயர் மதராசு தென் மராட்டிய தொடர் வண்டித் துறை.போக்குவரத்து பயணிகள் (2013)40,000/day[2] பெரம்பூர்தொடர்வண்டி நிலையம் வட-சென்னை பெரம்பூரில் உள்ளது. சென்னை கடற்கரை,மற்றும் சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம் மார்க்கத்தில் இந்தநிலையம் சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது..   மேலும்இரண்டு  தொடர்வண்டி வழிகள்  லோகோ ஒர்க்ஸ் மற்றும் பெரம்பூர் கேரேஜ் இரண்டிலும் தொடர் வண்டி நிலையங்கள் உள்ளன.மேலும் இவ்விடங்களில் ரயில் பெட்டி தயாரிப்பு மற்றும் பராமரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து புறப்படும் புறநகர் ரயில்களில் பெரும்பாலானவை இங்கு நிறுத்தப்பட்டு, தொலை தூர ரயில்களில் சில இந்த நிலையத்தில் நிறுத்தப்பட்டு செல்லுகிறது. பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துடன் கடற்கரை ரயில் நிலையத்துடன்தொடர்பு கொண்டுள்ளது

இரயாபுரம் இரயில் நிலையத்திற்கு அடுத்த மிகவும் பழமையான இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மாநகரில் அமைந்துள்ளது..தெற்கு தொடர் வண்டி துறை இயந்திரம்,வேகன் வண்டி, மற்றும் பயிற்சியாளர்-கட்டிடம் பட்டறைகளில் பணியாற்றுவதற்காக 1860 களில் இந்த நிலையம் கட்டப்பட்டது. 1979 நவம்பர் 29-ஆம் தேதி சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் பிரிவின் மின்மயமாக்கலுடன் மின்சார தொடர் வண்டி போக்குவரத்து தொடங்கியது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகிய இரயில் நிலையங்களுக்கு அடுத்த ஐந்தாவது மிகப்பெரிய ரயில் நிலையமாக இது உள்ளது. 2013 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு நாளும் சுமார் 40,000 பயணிகள் இந்த நிலையத்தை பயன்படுத்துகின்றனர். 140 க்கும் மேற்பட்ட புறநகர் இரயில் செவைகளும் மற்றும் 29 தொலைதூர இரயில் சேவைகள் என இரண்டாக இரயில்கள் நிறுத்தப்பட்டுச் செல்கின்றன. தற்போது, இந்த நிலையம் வடக்குப் பகுதிக்கு ஒரு நுழைவாயிலாக உள்ளது.

References[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; IRFCA_HistoryOfElectrification என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Hindu_StationToGetMoreEntrances என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை