பெய்த் கிப்யேகன்
பெய்த் செப்னெஜெடிக் கிப்யேகன் (Faith Chepngetich Kipyegon) (பிறப்பு: 10 ஜனவரி 1994) கென்யாவைச் சேர்ந்த நடுத்தர மற்றும் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் ஆவார்.[3] கிப்யேகன் 1,500 மீட்டர் மற்றும் மைல் ஓட்டத்திலும், 5,000 மீட்டர் ஓட்டத்திலும் உலக சாதனை படைத்தவர் ஆவார். கிப்யேகன் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஒரே வீரர் ஆவார், 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக், 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஆகிய போட்டிகளில் தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 2017, 2022 மற்றும் 2023 உலக தடகள வாகையாளர் போட்டியில் 1,500 மீட்டரிலும், 2023 உலக தடகள வாகையாளர் போட்டியில் 5,000 மீட்டரிலும் தங்கப் பதக்கம் வென்றார். 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஆகிய போட்டிகளில் 1500 மீட்டர் பெண்கள் பந்தயத்தில் தொடர்ச்சியாக மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை கிபிகோன் பெற்றார். அங்கு இவர் ஒரு புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார். முன்னதாக 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் கிபிகோன் பெண்கள் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பின்னர் இது சர்ச்சையானது.
கிப்யேகனுக்கு "ஸ்மைலிங் டெஸ்ட்ராயர் " என்று செல்லப்பெயர் உண்டு [4]
இளையோருக்கான 2011 மற்றும் 2013 உலக குறுக்கு நாடு வாகையாளர் போட்டியிலும், 2011 உலக இளையோர் வாகையாளார் போட்டி மற்றும் 2012 உலக இளையோர் வாகையாளார் போட்டிகளில் 1500 மீட்டரிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். வாலெரி ஆடம்ஸ், உசைன் போல்ட், வெரோனிகா காம்ப்பெல்-பிரவுன், ஆர்மண்ட் துப்லாண்டிஸ், ஜாக் பிரீடாக், யெலேனா ஐசின்பாயேவா, கிரானி ஜேம்ஸ், ஜானா பிட்மேன், டேனி சாமுவேல்ஸ் மற்றும் டேவிட் ஸ்டோர்லஸ் ஆகியோருடன் இணைந்து இளையோர், இளைஞர் மற்றும் மூத்தோர் தடகள போட்டிகளில் உலக வாகையாளர் போட்டியில் பட்டங்களை வென்ற பதினொரு விளையாட்டு வீரர்களில் கிப்யேகனும் ஒருவர்.
2017 ஆம் ஆண்டில் நியூ ஆப்பிரிக்கன் இதழால் மிகவும் செல்வாக்கு மிக்க 100 சிறந்த ஆப்பிரிக்கர்களில் ஒருவராக கிபிகோன் பட்டியலிடப்பட்டார்.[5] நவம்பர் 21,2024 அன்று, எல்டோரெட் பல்கலைக்கழகம், அதன் 13 வது பட்டமளிப்பு விழாவில், உலக மற்றும் ஒலிம்பிக் வாகையாளரான கிப்யேகன் செய்த சாதனைகளை அங்கீகரிப்பதற்காகவும், இவரது "பணிவு மற்றும் கருணை" க்காகவும் அதன் முதல் கௌரவ கல்வி முனைவர் பட்டத்தை வழங்கியது.[6][7]
சொந்த வாழ்க்கை
[தொகு]கென்ய பிளவு பள்ளத்தாக்கில் உள்ள நாகுரு கவுண்டியில் உள்ள கெரிங்கெட் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையில் வளர்ந்து வரும் ஒன்பது குழந்தைகளில் எட்டாவது குழந்தையாக பெய்த் கிப்யேகன் இருந்தார். இவர் கலன்ஜின் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவரது அக்காவும் முன்னாள் பயிற்சிக் கூட்டாளியுமான பீட்ரைஸ் முதாய் 10 கிமீ மற்றும் அரை மராத்தான் வீரர் ஆவார். இவரது தந்தை சாமுவேல் கிப்யேகன் கோச் தனது இளமை பருவத்தில் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீரராக இருந்தார். அதே நேரத்தில் இவரது தாயார் லினா கோச்சும் தடகளத்தில் தொடர்பு கொண்டிருந்தார். 14 வயதில் பள்ளியில் தடகளம் அறிமுகப்படுத்தப்படும் வரை பெய்த் ஒரு கால்பந்து வீரராக இருந்தார். இவர் கெரிங்கெட்டில் உள்ள வின்னர்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வியைப் பயின்றார்.[8][9][10]
கிப்யேகன் 2012 ஒலிம்பிக் 800 மீட்டர் வெண்கலப் பதக்கம் வென்ற நடுத்தர தூர ஓட்டப்பந்தய வீரர் திமோதி கிடும் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஜூன் 2018 இல் பிறந்த அலின் என்ற மகள் பிறந்தார்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Faith Chepngetich Kipyegon". London 2012. The London Organising Committee of the Olympic Games and Paralympic Games Limited. Archived from the original on 30 July 2012. Retrieved 11 September 2012.
- ↑ "World Rankings | Women's 1500m (Mile-2000m-Road Mile)".
- ↑ "Faith KIPYEGON – Athlete Profile". உலக தடகள அமைப்பு. Retrieved 1 January 2021.
- ↑ Market, Kenyan Diaspora (2024-07-22). "FAITH KIPYEGON". Kenyan Diaspora Market (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-08-07.
- ↑ "100 Most Influential Africans: Ten Kenyans Including CJ David Maraga Listed". Answers Africa. 2017-12-07. Retrieved 2021-01-15.
- ↑ "Faith Kipyegon awarded Honorary Doctor of Education Degree". 2024-11-21. Retrieved 2024-11-21.
- ↑ "Faith Kipyegon – The Smiling Queen of the Track". 2024-11-21. Retrieved 2024-11-21.
- ↑ Mureithi, Francis (5 June 2023). "Leap of faith: Faith Kipyegon's meteoric rise from Keringet to the world". Daily Nation. Retrieved 5 June 2023.
- ↑ Komen, Jonathan (4 June 2023). "Faith Kipyegon: From racing barefoot to breaking world 1500m record". The Standard. Retrieved 4 June 2023.
- ↑ "Keep the Faith". உலக தடகள அமைப்பு. 30 May 2016. Retrieved 2 June 2023.
- ↑ Landells, Steve (2019-07-15). "Back on track, Kipyegon prepares to defend world 1500m title in Doha". உலக தடகள அமைப்பு. Retrieved 2019-07-15.
வெளி இணைப்புகள்
[தொகு]