பெய்ஜிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
![]() | |
![]() | |
நிறுவப்பட்டது | 1951 |
---|---|
அமைவிடம் | தோன்செங், பெய்ஜிங், சீனா |
ஆள்கூற்று | 39°52′54″N 116°23′38″E / 39.88167°N 116.39389°E |
வகை | இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் |
வலைத்தளம் | http://www.bmnh.org.cn |
பெய்ஜிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Beijing Museum of Natural History) என்பது சீன மக்கள் குடியர்சின் தலைநகரமான பெய்ஜிங்கில் அமைந்துள்ள முதல் பெரிய அளவிலான இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாகும். இது சீனாவில் மிகவும் பிரபலமான இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாகும் . [1] இது 1951 ஆம் ஆண்டில் தேசிய வரலாற்று வரலாற்று அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது. அதன் பெயர் 1962 இல் பெய்ஜிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. [2]
அருங்காட்சியகம் மொத்தம் 24,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அவற்றில் 8,000 சதுர மீட்டர் பரப்பளவில் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுள்ளது. 200,000க்கும் மேற்பட்ட மாதிரிகள் உள்ளன. முக்கிய காட்சி பகுதி தியான் ஜியாபிங் கட்டிடத்தின் சேகரிப்பில் தொல்லுயிரியல், பறவையியல், பாலூட்டிகள் , முதுகெலும்பிலிகள் போன்றவை உள்ளன. மேலும் டைனோசரின் புதைபடிவங்களும், அவற்றின் எலும்புக்கூடுகளின் முக்கிய தொகுப்பும் இதில் அடங்கும். அருங்காட்சியகம் இந்த பகுதிகளில் குறிப்பிடத்தக்க அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. [2]
குறிப்புகள்
[தொகு]- ↑ Home and Abroad பரணிடப்பட்டது திசம்பர் 1, 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 2.0 2.1 BMNH website பரணிடப்பட்டது மே 11, 2008 at the வந்தவழி இயந்திரம்