பெயா லாகசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயா லாகசு (Feia Lacus) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் ஐதரோகார்பன் ஏரிகளில் ஒன்றாகும் [1] கேசினி விண்வெளி ஆய்வுக்கலம் கண்டறிந்து அனுப்பிய தரவுகளின் அடிப்படையில் இந்த ஏரிக்கு 2007 [2] ஆம் ஆண்டு பெயா லாகசு எனப் பெயரிடப்பட்டது.

73.7° மற்றும் 64.41° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் 47 கிலோமீட்டர் நீளத்திற்கு பெயா லாகசு ஏரி அமைந்துள்ளது. பிரேசில் நாடிலுள்ள இலகோவா பெயா ஏரியின் நினைவாக இந்த ஏரிக்கு பெயா லாகசு என்று பெயரிடப்பட்டது. திரவ ஈத்தேனும் மீத்தேனும் [3] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயா_லாகசு&oldid=2173854" இருந்து மீள்விக்கப்பட்டது