பெயரளவு வட்டி வீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயரளவு வட்டி வீதம் (Nominal interest rate) என்பது பொருளாதரத்திலும், நிதியியலிலும், பணவீக்க மதிப்பை கணக்கில் கொள்ளாமல் அல்லது கூட்டு வட்டி விளைவுகளைக் கணக்கில் கொள்ளாமல் கணிக்கப்படும் வட்டி வீதமாகும். பயனரால் நுகரப்படும் வட்டியல்லாது பெயரளவில் சொல்லப்படும் ஒரு வட்டி வீதமாகும். பெயரளவு வட்டி வீதத்துடன் பணவீக்கத்தைக் கழிப்பதன் மூலம் உண்மையான வட்டி விகிதத்தைப் (Real interest rate) பெறலாம். உதாரணத்திற்கு, பணவீக்கமும் பெயரளவு வட்டி வீதமும் சமமெனில் உண்மையான வட்டி வீதம் சுழியமாகும்.


நடைமுறை வட்டியும் பெயரளவு வட்டியும்[தொகு]

ஆண்டொன்றிற்கு 10% வட்டியெனில் பெயரளவு வட்டி விகிதம் என்பது 10% ஆகும். ஆனால் இவ்வட்டி ஆண்டொன்றிற்கு இருமுறை வழங்கப்படுமானால் ஆண்டின் முடிவில் கிடைக்கப்படும் வட்டி 10.25% ஆகும், இது நடைமுறை வட்டி வீதம் (Effective interest rate) என்று அழைக்கப்படுகிறது.

0 மாதத்தில் மதிப்பு - 1000 ரூ
6 மாதத்தில் மதிப்பு - 1050 ரூ
12 மாதத்தில் மதிப்பு - 1102.5 ரூ

பெயரளவு வட்டி = 10%
நடைமுறை வட்டி =

பெயரளவு வட்டி வீதத்திற்கும், நடைமுறை வட்டி வீதத்திற்கும் உள்ள உறவை விளக்கும் சூத்திரம்.

r என்பது நடைமுறை வட்டிவீதம்
i என்பது பெயரளவு வட்டிவீதம்
n என்பது ஓர் ஆண்டிற்கு வட்டிக் கணக்கிடப்படும் தடவைகள்

ஆறு மாதத்திற்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டால் n = 2
மாதத்திற்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டால் n = 12
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயரளவு_வட்டி_வீதம்&oldid=2726341" இருந்து மீள்விக்கப்பட்டது